Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
ஆண்களின் ஆணுறுப்பை மோசமாக பாதிக்கும் உடல்நல பிரச்சனைகள்!
ஒவ்வொரு ஆணும் மிகவும் முக்கியமான உறுப்பான ஆணுப்பை கவனமாகவும், ஆரோக்கியமாகவும் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஓர் ஆண் தன் உடல்நலத்தில் கவனக் குறைவுடன் இருந்தால், அதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, பாலியல் ஆரோக்கியமும் தான் பாதிக்கப்படும். எனவே ஆண்கள் தங்களது உடல்நலத்திற்கு முன்னுரிமை வழங்கக வேண்டும்.
ஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் சிறந்தப் பயிற்சிகள்!!!
உடலின் வேறு பகுதியில் பிரச்சனை ஏற்பட்டால், எப்படி பாலியல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று கேட்கலாம். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஆகவே எங்கு பிரச்சனை ஏற்பட்டாலும், அதனால் உடலின் வேறு பகுதியிலும் பிரச்சனையை சந்திக்க வேண்டி வரும்.
ஆண்குறியின் அளவை பெரிதாக்க சில எளிய இயற்கை வழிகள்!!!
இங்கு ஆணுறுப்பை மோசமாக பாதிக்கும் சில உடல்நல பிரச்சனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அப்பிரச்சனை ஏற்படாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இதய நோய்
ஒரு ஆணுக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டால், அந்த ஆணின் ஆணுறுப்பு பலவீனமாகும். எப்படியெனில் இதயத்திற்கே போதிய இரத்தம் செல்லாமல் அங்கேயே பிரச்சனை இருந்தால், ஆணுப்பிற்கு எப்படி இரத்த ஓட்டம் கிடைக்கும்.

இதய நோய்
ஆணுறுப்பில் இரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால், பலவீனமாகி விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் பாலியல் வாழ்க்கையில் சிறப்பாக இருக்க விரும்பினால், உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

சர்க்கரை நோய்
ஆம், நீரிழிவிற்கும், பாலியல் பிரச்சனைகளுக்கும் சம்பந்தம் உள்ளது. அதிலும் இந்தியாவில் தான் சர்க்கரை நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தால், அதனைத் தொடர்ந்து பல பிரச்சனைகள் உடலில் வரும்.

சர்க்கரை நோய்
அதில் சர்க்கரை நோய் உள்ள ஆண்களை எடுத்துக் கொண்டால், முதலில் அவர்களது ஆணுறுப்பிற்கு செல்ல வேண்டிய இரத்த அளவு குறைந்து, விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படும். குறிப்பாக டைப் 2 நீரிழிவு இருந்தால், இப்பிரச்சனையை சந்திக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மன அழுத்தம்
மனக் கஷ்டம் தானே என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். மன ஆரோக்கியமும், பாலியல் ஆரோக்கியமும் நெருங்கிய தொடர்பு கொண்டது. இதில் அடிக்கடி மன இறுக்கத்திற்கு உள்ளாகும் ஆண்கள் பாலியல் பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள்.

மன அழுத்தம்
ஆய்வு ஒன்றிலும், மன அழுத்தத்துடன் இருக்கும் ஆண்களுக்கு அதிகாலையில் ஏற்படும் விறைப்பு பாதிக்கப்படுவதோடு, அவர்களது ஆண்குறி சற்று வளைந்தும் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆகவே ஆண்களே மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள முயற்சியுங்கள்.

நரம்பு சார்ந்த சிக்கல்கள்
பக்கவாதம், கழுத்து அல்லது முதுகுப் பகுதியில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால், அதனாலும் ஆணுறுப்பு மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும். அதில் முக்கியமாக ஆணுப்பிற்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்பட்டு, ஆணுறுப்பின் சாதாரண இயக்கமும் பாதிக்கப்படும்.

வயது
இது ஓர் பிரச்சனை அல்ல. அதேப்போல் இதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும், உங்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க ஆணுறுப்பின் செயல்பாடும் குறைய ஆரம்பிக்கும். மேலும் சில பிரச்சனைகளான புரோஸ்டேட் வீக்கம், விறைப்புத்தன்மை குறைபாடு, சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை போன்றவற்றை சந்திக்க நேரிடும்.



Click it and Unblock the Notifications