தினசரி பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் 1௦ நலன்கள்!!!

By: Viswa
Subscribe to Boldsky

கிழங்கு வகை காய்கறிகளில் பீட்ரூட் அதிக ஆரோக்கிய நலன் நிறைந்த உணவாகும். இதில் நிறைந்து இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் உடலில் உள்ள நோய் கிருமிகளை எதிர்த்துப் போராட வெகுவாகத் தூண்டுகிறது. பீட்ரூட் இனிப்பு சுவை உள்ள காய்கறி என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பெரும்பாலானோர் இதை விரும்பி சாப்பிடுகின்றனர்.

பீட்ரூட்டை சமைத்து தான் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கேரட்டைப் போல இதையும் தண்ணீரில் நன்கு கழுவி, மேல் தோலை சீவியப் பின்பு பச்சையாக அப்படியே சாப்பிடலாம். பீட்ரூட்டில் இருக்கும் ஆரோக்கிய பயன்களை அறிந்துக் கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இருதயம்

இருதயம்

முடிந்த அளவு தினமும் பீட்ரூட்டை சாப்பிடுங்கள். ஏனெனில், இதில் உள்ள ஊட்டச்சத்துகள் நமது இதயத்திற்கு பல வகைகளில் நன்மை விளைவிக்கிறது. மற்றும் இதய நோய்களில் இருந்தும் நம்மை காக்கிறது.

இல்லற வாழ்க்கை

இல்லற வாழ்க்கை

பீட்ரூட்டின் சிறந்த பயன்களில் ஒன்று, இதில் இருக்கும் போரான் எனும் இரசாயன மூலப்பொருள் உங்களது இல்லற வாழ்க்கை மேம்பட நல்ல முறையில் உதவுகிறது.

கனிமச்சத்து

கனிமச்சத்து

பீட்ரூட்டில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற நிறைய கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன. இதன் மூலம் நமது உடல் நல்ல ஆரோக்கியம் அடையும்.

ஆற்றல்

ஆற்றல்

பீட்ரூட்டில் குறைந்த கலோரிகள் மற்றும் நல்ல கொழுப்புச்சத்துகளும் அடங்கி உள்ளன. அதுமட்டுமின்றி இது நமது உடலில் நன்கு ஆற்றலை உருவாக்குகிறது.

வைட்டமின்

வைட்டமின்

நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படுகிற வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை பீட்ரூட்டில் எளிதாக கிடைக்கிறது. அதனால் தான் பீட்ரூட்டை தினசரி உணவில் உட்கொள்வது சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

பீட்ரூட்டின் மூலமாக நாம் அடையும் பயன்களில் சிறந்ததாக கருதப்படுவது, இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட். இவை சில வகை புற்றுநோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

சோர்வு

சோர்வு

சோர்வு, தளர்ச்சி போன்ற உடல் சார்ந்த கோளாறுகளில் இருந்து புத்துணர்ச்சி பெற பீட்ரூட் சீரான முறையில் உதவுகிறது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

பீட்ரூட்டில் இருக்கும் சில ஊட்டச்சத்துகள் மனச் சோர்வை குறைத்து, நம்மை சுறுசுறுப்பு அடைய செய்கிறது.

ஃபோலிக் அமிலம்

ஃபோலிக் அமிலம்

நம் உடலில் இருக்கும் செல்களுக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் தேவையானதாகும். பீட்ரூட்டை பச்சையாக உண்பதன் மூலம் நம் உடலில் இருக்கும் செல்களுக்குப் போதுமான அளவு ஃபோலிக் அமிலத்தின் சத்து கிடைக்கிறது.

சுத்திகரிப்புத் தன்மை

சுத்திகரிப்புத் தன்மை

நமது உடலில் இரத்தத்தினை சுத்திகரிப்பு செய்ய பீட்ரூட் பெருமளவில் உதவுகிறது. மற்றும் கல்லீரலின் திறனை மேம்படுத்தவும் பீட்ரூட் சிறந்த வகையில் பயனளிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 10 Reasons To Eat Beetroot Regularly

The benefits of eating beetroot regularly are countless. You must know about them.
Story first published: Friday, February 6, 2015, 15:32 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter