வெறும் ஏழே நாட்களில் உடல் சக்தியை அதிகரிப்பது எப்படி???

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய தினத்தில் அனைவரும் அதிகம் கூறும் குறைப்பாடாக இருப்பவை நீரிழிவு, உடல் பருமன், மூட்டு வலி மற்றும் உடல் சக்தி குறைவு தான். இவை தான் இன்றைய மக்களை பெரிதும் அவதிப்பட வைக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நமது வேலை முறை தான். ஓடி, ஆடி செய்யாவிட்டாலும் நாம் நடந்து கூட வேலை செய்வதில்லை.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பானங்கள்!!!

காலை 9 மணியில் தொடங்கி மாலை 6 மணி வரை ஒரே நிலையில் உட்கார்ந்தே வேலை செய்கிறோம். இது தான் மேற்கூறிய பிரச்சனைகள் அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கின்றது. இதில் நமக்கு உடல் சக்தி என்பது மிகவும் முக்கியம். உடல் சக்தி குறைந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து போகும், இது வலுவிழந்தால் தானாய் நோய் பாதிப்புகள் அதிகரிக்கும்.

உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் உணவுப் பொருட்கள்!!!

எனவே, உடல் சக்தியானது நமக்கு மிகவும் முக்கியமானது அதை வெறும் ஏழு நாட்களில் எப்படி அதிகரிக்க வைப்பது என்பதை இனிக் காணலாம்...

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்க சில அற்புதமான வழிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டீ

டீ

கிரீன் டீ மற்றும் ப்ளேக் டீ இரண்டுமே நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வலுவை அதிகரிக்கும் தன்மை கொண்டவை ஆகும். ஆயினும் கூட ஓர் நாளுக்கு ஓரிரு தடவைக்கு மேல் நீங்கள் இவற்றை பருகுவதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது. அமிர்தமாயினும் அதிகமானால் நஞ்சு தானே!

பூண்டு

பூண்டு

நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கும் உணவுகளில் சிறந்த உணவாக திகழ்வது பூண்டு. இதில் ஜின்க், சல்ஃபர், செலினியம், வைட்டமின் ஏ மற்றும் ஈ போன்ற நிறைய சத்துக்கள் இருக்கின்றன. மற்றும் இது ஓர் சிறந்த ஆன்டி-பாக்டீரியல் உணவாகவும் விளங்குகிறது. வெறும் பூண்டை தினம் ஒன்று வாயில் மென்று சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது, வாயுத்தொல்லை சீக்கிரம் தீரும்.

தயிர்

தயிர்

செரிமான மண்டலத்தை ஊக்குவிக்கும் ஓர் சிறந்த உணவாக திகழ்வது தயிர். அலுவலகத்தில் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் தவறாமல் தினமும் தயிரை உட்கொள்ள வேண்டியது அவசியம். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு மணடலத்தை ஊக்குவிக்கிறது.

ஓட்ஸ் உணவு

ஓட்ஸ் உணவு

ஓட்ஸ் உணவில் இருக்கும் நார்ச்சத்தும், நுண்ணுயிர்களை கொல்லும் குணமும் உடலில் உள்ள நச்சுக்களை அழித்து, செரிமானத்தை சீராக்க உதவுகிறது. மற்றும் உடல் எடையை குறைக்க ஓட்ஸ் ஓர் சிறந்த உணவாக திகழ்கிறது.

வைட்டமின் டி சத்து

வைட்டமின் டி சத்து

அதிக சூரிய வெளிச்சத்தில் (வெயிலில்) அலைவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உண்மை தான். ஆனால், அதிகாலையில் சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் வெளிச்சத்தில் இருந்து நமது உடலுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் டி சத்து கிடைக்கிறது. நீரிழிவு மற்றும் இதய பாதிப்புகள் உள்ளவர்கள் காலையில் சூரிய ஒளிப்படும்படி நடைபயிற்சி செய்வது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் உடல் சக்தி அதிகமாகும். இது உடலில் இருக்கும் நச்சுக்களை எல்லாம் அழிக்கும் திறன் கொண்டதாகும்.

ஜின்க்

ஜின்க்

நமது உடலில் வெள்ளை இரத்த அணுக்கள் உருவாக ஜின்க்கின் உதவி தேவைப்படுகிறது. கீரை, காய்கறிகள், தானிய உணவுகள் போன்றவற்றில் இந்த சத்து அதிகமாக இருக்கின்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Build Your Immunity In Just Seven Days

Do you know how to build your Immunity in just 7 days? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter