Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஆரோக்கியம் என்பது எது? பழங்களா அல்லது பழச்சாறுகளா...?
நீங்கள் பழரசத்தை அருந்தி விட்டு உங்கள் நாளை ஆரம்பிப்பவரா? நீங்கள் அவ்வாறு செய்வராக இருந்தால், உங்கள் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படும். மேலும் உங்கள் எடை குறைப்பிற்கான திட்டத்தையும் அது பாதித்து விடும். சில மக்கள் பழரசங்கள்; செயற்கை குளிர்பானங்களைப் போல,கெடுதலானவை என கருதுகின்றனர்.
பழங்கள் மற்றும் பழச்சாறுகள் இரண்டும் ஒரே மாதிரியானவை. முந்தையதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருள் தான் அடுத்தது. ஆனால் கவனித்துப் பார்த்தால் இரண்டிலும் ஒரு வேறுபாடு உண்டு. பழங்கள் மற்றும் பழச்சாறுகளில் உள்ள நார்ச்சத்து அளவே அதில் முக்கியமானது.

பழச்சாறுகள் மிக விரைவில் உட்கிரகிக்கப்படும்
ஆரோக்கியமான உணவு முறை மற்றும் அதிக அளவிலான எடை போன்றவற்றிற்கான ஆராய்ச்சியில், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள மனித சத்துக்கள் தொடர்பான ஆராய்ச்சி யூனிட்டின் முடிவில், பழச்சாறுகளைக் காட்டிலும் சத்தான உணவுகளே இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழச்சாறுகள் எடைக் குறைப்பிற்கான திட்டங்களை சீர்குலைத்துவிடும்
நீங்கள் ஒரு ஆரஞ்சு பழத்தையும், ஒரு டம்ளர் ஆரஞ்சு பழச்சாறையும் கற்பனை செய்து கொள்ளுங்கள். இதில் ஒரு டம்ளர் பழச்சாறில் நான்கு ஆரஞ்சு பழங்கள் அடங்கி இருக்கும். இப்போது உங்களுக்கு ஒரு ஆரஞ்சு பழம் பசியை குறைக்குமா? அல்லது ஆரஞ்சு பழச்சாறு உங்களுக்கு பசியைக் குறைக்குமா? நீங்கள் நன்கு புரிந்து கொள்ளுபவராக இருந்தால் முதலாமாவதையே கூறுவீர்கள். ஏனெனில், பழம் உண்பதே பழச்சாறு குடிப்பதை விட எளிதில் வயிற்றை நிரப்பும். மேலும் பழச்சாற்றில் நான்கு ஆரஞ்சுகளோடு, அதிக அளவு சர்க்கரையும் இருக்கும்.

பழச்சாறுகளில் உள்ள அதிக அளவிலான சர்க்கரை
சில மில்லி அளவிலான பழச்சாற்றில், குறைந்தது இரண்டு ஸ்பூன் அளவிலான சர்க்கரை இருக்கும். உங்கள் உடலில் சேரும் அதிக அளவிலான சர்க்கரை, உங்கள் உடலில் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடும். ஆற்றல் திடீரென எரிக்கப்படுவதால், உங்களுக்கு அயர்வு, களைப்பு, எரிச்சல் மற்றும் ஈடுபாடின்மை போன்றவை ஏற்படும்.

பழச்சாற்றை முழுவதும் தடை செய்ய வேண்டுமா?
பழச்சாறுகளை எடுத்துக் கொண்டாலே பிரச்சனை அல்ல. நீங்கள் எடுத்துக் கொள்ளும் அளவைப் பொறுத்தே உங்களுக்கு ஏற்ற விளைவுகள் ஏற்படும். நார்ச்சத்து மற்றும் பல நல்ல சத்துக்கள் அடங்கி உள்ள பழங்களை நறுக்கி தயாரிக்கப்படும் பழச்சாற்றில், உள்ள செறிவு மிக்க சர்க்கரையானது, நார்ச்சத்தையும், மற்ற சத்துக்களையும் அப்படியே தேக்கி வைத்துக் கொள்ளும். இது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு பெரிதும் துணை புரியும்.

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை எடுத்துக் கொள்பவரா?
உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி. அவற்றில் பெரும்பாலும் குறைந்த சதவீதமே உண்மையான பழம் அடங்கி இருக்கும். மிகவும் சரியான சொல்வதானால், அந்த பழச்சாறுகளில் அந்த பழத்திற்கான சுவையே புலப்படுவதில்லை.
சிலர் அதிக அளவிலான கலோரியை, ஒரு டம்ளர் பழச்சாற்றில் எளிதாக பெற்று விடலாம் என கருதுகின்றனர். ஆனால்,நீங்கள் அதிக அளவில் பெறுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் சத்துக்கள் உங்களை அடைவதில்லை. பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் பழச்சாறுகளில், குறைந்த அளவிலான கொழுப்பு இருக்கும் என உங்களை கவரும் வண்ணம் பாக்கெட்டுகளில் போடப்பட்டிருக்கும். அது நம்மை ஏமாற்றுவதற்கான வேலை என புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பு
பொதுவாக பாட்டில் அல்லது ஜாரில் பின்புறத்தைப் பார்த்து, அதில் தயாரிப்பிற்கு பயன்படும் பொருட்களை பரிசோதிப்பது சிறந்தது. அப்போது தான் அதில் உண்மையான பழங்கள் சேர்க்கப்படுவதில்லை என அறிந்து கொள்ள முடியும்.
எனவே உங்கள் காலை உணவிற்கு நீங்கள் இனிமேல் எதை தேர்வு செய்வீர்கள்? பழங்களை எடுத்துக் கொண்டு, அதிக அளவிலான சத்துக்களை பெறுங்கள் என்பதே நாங்கள் பரிந்துரை செய்யும் விவரம் ஆகும்.



Click it and Unblock the Notifications
