Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் அற்புத சிகிச்சைகள்!!!
குழந்தைப்பேறு என்பது ஒரு அற்புதமான உணர்வு. ஆனால் இது அனைவருக்கும் எளிதாக கிடைத்துவிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு இது மிகவும் சிக்கலான ஒன்று. சமீபத்திய ஆய்வில் ஐந்தில் ஒரு ஜோடியில் ஆண்களிடமே பிரச்சனை உள்ளதாக கூறுகின்றன. ஆணின் மலட்டுத்தன்மைக்கு வெளிப்படையான அறிகுறிகள் பொதுவாகத் தெரிவதில்லை.
உண்மையான பிரச்சனையை தெரிந்து கொண்டுவிட்டால் ஆண் மலட்டுத் தன்மைக்கான சிகிச்சை குறித்து தெரிந்து கொள்ளலாம். சரியான பரிசோதனைகள் மூலம் இந்த பிரச்சனைக்கான தீர்வைக் காணலாம். ஆணின் பிறப்புறுப்புகள், ஹைபோதலாமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகள் ஆணின் ஆண்மைத்தன்மையை உறுதி செய்கின்றன. இவை ஆணின் விந்தணு மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.
ஆண் மலட்டுத்தன்மைக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. விந்தணு உற்பத்திக் குறைபாடு, விந்தணு பாதையில் அடைப்பு, விந்தணு நோய் தொற்று, பாலின மற்றும் ஹார்மோன் குறைபாடுகள் ஆகிய காரணங்களால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.
ஆண் மலட்டுத்தன்மைக்கு அவற்றை கண்டறியும் முறைகள் மற்றும் காரணங்களைப் பொறுத்து சிகிச்சை முறைகள் உண்டு. சில சமயம் இந்த சிக்கிச்சைகள் பல மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டியிருக்கும். இதற்கான பல்வேறு சிகிச்சை முறைகள் இதோ...

இனப்பெருக்க பாதை அடைப்பு
சில ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாகும் இடங்களிலும், பாதைகளிலும் அடைப்பிருக்கும். இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். இதைச் செய்ய இயலாத நிலையில், புதிய தொழில் நுட்ப முறையான விந்தணுவை நேரடியாக விதைப்பைகளிலிருந்து பெறும்படியான முறையை முயற்சி செய்யலாம். வாசக்டமி எனப்படும் ஆண் கருத்தடை முறை இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. மேலும் இந்த முறை பெரும்பாலும் பழைய நிலைக்கு மாற்றத் தகுந்த ஒன்று.

பிட்யூட்டரி குறைபாடு
ஆண்களின் பிறப்புறுப்பு மண்டலங்களில் ஹைபோதலாமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகள் முக்கிய பங்காற்றுகின்றன. ஹார்மோன்களை சுரக்கக் காரணமான பிட்யூட்டரி சுரப்பி மூளையின் செயல்களை ஊக்குவிக்க உதவுகிறது. இதில் குறைபாடு இருந்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படலாம். கோனாடோட்ரோபின் எனப்படும் சிகிச்சை மூலம் இந்த பிட்யூட்டரி சுரப்பிக் குறைபாடுகளை நீக்கலாம்.

வெரிகோசல்
விரைப்பையில் உள்ள நரம்புகளின் வீக்கம் வெரிகோசல்லை குறிக்கும். இந்தக் குறைபாடுள்ள ஆண்களில் குறைந்த விந்தணு எண்ணிக்கையையும், அசாதாரண தோற்றத்தினை கொண்ட விந்தணுக்களும் காணப்படும். விரைப்பைகளில் காணப்படும் வெப்பம், குறைந்த அளவு ஆக்சிஜன் மற்றும் குறைந்த இரத்த ஓட்டம் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆண் மலட்டுத்தன்மையில் காணப்படும் இந்த குறைபாட்டினை சரி செய்ய சிறந்த வழி அறுவை சிகிச்சையாகும். குறிப்பிட்ட சில சமயங்களில் அதுவும் பயனளிக்காமல் போகலாம்.

அஜூஸ்பெர்மியா
இந்தக் குறைபாடுள்ளவர்களுக்கு விந்தணு மிகவும் குறைவாக இருக்கலாம். மலட்டுத தன்மை கொண்ட ஆண்களில் இது பொதுவாகக் காணப்படும். இதை கண்டறிய விரைப்பை பயாப்சி சோதனையை செய்ய வேண்டியிருக்கும். இதன் மூலம் பிரச்சனையை துல்லியமாகக் கண்டறிய முடியும். விந்தணு உற்பத்திக் குறைபாடுகள் அல்லது உற்பத்திப் பாதையில் அடைப்பு ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

விந்தணு மேப்பிங்
இந்த முறை மூலம் விதைப்பையில் விந்தணுக்களின் இருப்பிடம் அறியப்படும். மலட்டுத் தன்மை அதிகமாகக் கொண்ட ஆண்களில் சிகிச்சைக்கு இந்த முறை மிகவும் முக்கியமான ஒன்று. இது சற்று எளிதான அறுவை சிகிச்சை தேவைப்படாத, மருத்துவக்கருவிகள் அதிகம் இல்லாத இடத்திலேயே செய்யக்கூடிய ஒன்று. இதன் மூலம் அறுவை சிகிச்சை உள்ளிட்ட இன்ன பிற சிகிச்சைகளின் மூலம் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விரைப்பைகளைப் பாதுகாக்கலாம்.



Click it and Unblock the Notifications