Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பெண்களின் மனதை பாதிக்கும் சிறுநீரக கோளாறுகள்!

இந்த சிறுநீர் கசிவை பற்றி தங்கள் பெற்றோரிடமோ, கணவரிடமோ கூட இதைப்பற்றி பேச கூச்சப்படுகிறார்கள். வெளியில் சென்றால் சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு, சிறுநீர் வாடை அடித்து விடுமோ என்று கவலைக்கு உள்ளாகிறார்கள். வீட்டில் நடக்கும் சுப காரியங்களில் கூட கலந்து கொள்வதில்லை.
மன உளைச்சல்
வீட்டு வேலை செய்யும் பெண்களைக் காட்டிலும், வெளியில் பணிபுரியும் பெண்கள்தான் அதிகம் இதனால் மனரீதியில், உடல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இப்போது இந்நிலை மாறிவிட்டது. அமெரிக்கா போன்ற நாடுகளில்தான் இதற்கான சிகிச்சை அளிக்கப்படும் என்ற நிலைமை மாறி இந்தியாவிலும் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுபோன்ற பெண்களின் சிறுநீரக மற்றும் சிறுநீர் பிரச்சினைகளை குணப்படுத்துவதற்கென்றே யூரோ கைனாகாலஜி என்கிற நவீன மருத்துவதுறை வந்துள்ளது என்பதை பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
குண்டானவர்கள் கவனம்
இந்த நோய் சுகப்பிரசவமான பெண்களுக்கு, அடுத்து வயது முதிர்ச்சியானவர்களுக்கு, ஆஸ்துமா, மலச்சிக்கல் உள்ள பெண்களுக்கு, 35 வயதிற்கு மேலானவர்களுக்கு, குண்டான பெண்களுக்கு, மெனோபாஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு, கருப்பை அகற்றப்பட்டவர்களுக்கு, சிறுநீர் பையில் துவாரம் ஏற்பட்டவர்களுக்கும் வர வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு எல்லாம் கட்டாயம் வரும் என்பதில்லை. எனவே சிறுநீர் கசிவு பிரச்சினை ஏற்பட்டால் சாதாரண பிரச்சினை என்று நினைத்துக் கொண்டு மன உளைச்சல் அடையாமல் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.
தொற்றுநோய் தாக்குதல்
இதுதவிர பெண்களுக்கு சிறுநீரக பாதையில் தொற்று நோய்கள், சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதை அடைப்பு, சிறுநீர் கழிவதில் பிரச்சனைகள் முதலியன ஏற்படுகின்றன. அவற்றை குணப்படுத்த சில இயற்கை முறைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளநீரும், தண்ணீரும்
நிறைய தண்ணீர் குடிக்கவும். இளநீர் குடிப்பது பல சிறுநீரக பாதிப்புகளை போக்கும். சிறுநீர் கழிக்கையில் வலி உண்டானால் பரங்கிக்காய் சாற்றை குடிக்கவும். தினசரி 2 அத்திப்பழங்களை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு குடிக்கவும்.
குறைவாக சிறுநீர் போனால் உலர்ந்த திராட்சை ஜுஸ் குடிக்கவும். அதிக சிறுநீர் போவதை தேன் கட்டுப்படுத்தும்.
யோகாசனங்கள்
சிறுநீர் கோளாறுகளை யோகாசனங்கள் மூலம் குணப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய நமஸ்காரம் – சிரசாசனம், சர்வங்காசனம், சலபாசனம், தனுராசனம், மத்ஸ்யேந்திராசனம், விருச்சிகாசனம், சவாசனம் முதலியன செய்வதன் மூலம் சிறுநீரக தொற்று, கோளாறுகளை குணப்படுத்தலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications