Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்!

மச்சம் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தான் ஏற்படும். இது மனித உடலில் உள்ள செல்கள் வேகமாகப் பிரியும் போது தோலில் கருப்பு நிறப்புள்ளி ஏற்படுகிறது, இதுவே மச்சம் ஆகும். இத்தகைய மச்சம் சிலருக்கு நடுத்தர வயதில் மறைந்துவிடும். சிலருக்கு அவை தொடர்ந்து பரவும். ஒரு சிலருக்கு ஒன்றிரண்டு மச்சம் இருக்கும். ஒரு சிலருக்கு 40 முதல் 50 மச்சம் வரை இருக்கும். ஆனால் 600 மச்சம் வரை இருப்பவர்களும் உலகத்தில் இருக்கின்றனர்.
மச்சம் இருக்கும் இடத்தைப் பொருத்து ஒரு சிலர் பலன் கூறுவார்கள். ஆனால் மச்சம் பல நன்மைகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மச்சம் குறித்த ஆய்வை லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழு மேற்கொண்டது. அது மச்சம் இல்லாதவர்களை விட மச்சம் இருப்பவர்களுக்கு வலுவான எலும்புகள் இருக்கிறது என்றும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் எலும்புகளைத் தாக்கும் அபாயம் மிகவும் குறைவு என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
18 வயது முதல் 79 வயது வரை உள்ள உருவ வேறுபாடுள்ள இரட்டையர் பெண்கள் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 100 மச்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 25 மச்சத்தை விடக் குறைவாக உள்ளவர்களுடன் பார்க்கும் போது ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் 50 சதவிகிதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் மச்சம் இருப்பவர்கள் நீண்டகாலம் இளமையோடு ஆரோக்கியமாக இருக்கின்றனராம். அதுமட்டுமல்லாமல் மச்சக்காரர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்கியமான கண்களும், இதயமும் இருக்கும், மேலும் தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவிலும் இதே போன்று ஆய்வு ஒன்று நடந்தது, இதிலும் அதே முடிவு தெரிய வந்துள்ளது என்று மரபியல் துறை நிபுணர் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.
உங்க உடம்புல நிறைய மச்சம் இருக்கா? அப்ப நீங்க ஆரோக்கியசாலிதான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications