Latest Updates
-
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
Weight Loss Tips: 30 நாட்களில் 10 கிலோ வரை உடல் எடையைக் குறைக்க உதவும் இந்தியன் டயட் பற்றி தெரியுமா?
Weight Loss Tips In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? எடையைக் குறைக்க நீதினமும் ஜிம் சென்று தீவிரமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறீர்களா? ஆனால் உங்களால் உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா? உடல் எடையைக் குறைக்க வெறுமனே உடற்பயிற்சியை செய்தால் மட்டும் போதாது. அதற்கு இணையாக உண்ணும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
உடல் எடையை அதிகரிக்க உணவுகள் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், அதே உணவுகளின் உதவியுடன் உடல் எடையைக் குறைக்க முடியும். அதற்கு சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். நீங்கள் உடல் பருமனால் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதை குறைக்க முயற்சிப்பதை நிறுத்த வேண்டாம்.

ஏனெனில் உடல் பருமன் டைப்-2 சர்க்கரை நோய், இதய நோய், பக்கவாதம் மற்றும் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும். எனவே குண்டாக இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் எடையைக் குறைக்க கட்டாயம் முயல வேண்டும். அதிகரித்த உடல் எடையை வேகமாக குறைப்பது என்பது கடினம. ஆனால் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொண்டு வந்தால், நிச்சயம் உடல் எடையை எளிதில் சிரமமின்றி குறைக்கலாம்.
சரி, உடல் எடையைக் குறைக்க எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அதுவும் இந்தியாவில் இருப்பவர்கள் எந்த மாதிரியான டயட்டை மேற்கொண்டால் உடல் எடையை எளிதில் குறைக்கலாம் என்று கேட்கலாம். எனவே உங்களுக்காக ஒரே மாதத்தில் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு மாதிரி இந்தியன் டயட் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
காலை உணவு
1. பெர்ரிப் பழங்கள் மற்றும் நட்ஸ் கலந்த ஓட்ஸ்
2. சாம்பார் மற்றும் சட்னியுடன் இட்லி அல்லது தோசை
3 காய்கறிகள் மற்றும் தயிர் சேர்த்த அவல்
இவற்றில் ஒன்றை தேர்வு செய்து காலை உணவாக உட்கொள்ளலாம்.
மதிய உணவு
1. கைக்குத்தல் அரிசி சாதம் மற்றும் காய்கறிகளைக் கொண்ட தால்
2. சப்பாத்தியுடன் சிக்கன் அல்லது மீன் குழம்பு மற்றும் காய்கறிகள்
3. காய்கறிகள் மற்றும் ஃபெட்டா சீஸ் கொண்ட தினை சாலட்
இவற்றில் ஒன்றை தேர்வு செய்து மதிய உணவாக உட்கொள்ளலாம்.
ஸ்நாக்ஸ்
1. பருவகால நற்பதமான பழங்கள்
2. கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகள்
3. கையளவு நட்ஸ்
4. ப்ளேவர் சேர்க்காத தயிர்
இரவு உணவு
1. காய்கறிகள் மற்றும் தயிர் கொண்ட கிச்சடி
2. க்ரில் செய்யப்பட்ட மீன் உடன் வதக்கிய காய்கறிகள்
3. கைக்குத்தல் அரிசி சாதத்துடன் டோஃபு கிரேவி
இவற்றில் ஒன்றை தேர்வு செய்து இரவு உணவாக உட்கொள்ளலாம்.
நினைவில் கொள்ள வேண்டியவை:
* நல்ல ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை உட்கொள்வதைத் தவிர, உடற்பற்சிகளையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். அதுவும் தினமும் குறைந்தது 30 நிமிடம் மிதமான அளவில் அதிதீவிர உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
* அதுமட்டுமல்லாமல் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அப்படி உட்கொள்ளும் போது நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருப்பதோடு, கண்ட உணவுகளின் மீதான நாட்டம் குறையும். இந்த நார்ச்சத்துக்களானது பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களில் அதிகம் உள்ளன.
* புரோட்டீன் உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், தினமும் போதுமான அளவில் புரோட்டீன் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது தசைகளை வலிமையாகவும், கொழுப்புக்களின்றியும் சிக்கென்று வைத்துக் கொள்ள உதவி புரியும்.
* முக்கியமாக மன அழுத்தமின்றி மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் அதிக மன அழுத்தமானது உடலில் கார்டிசோல் என்னும் ஹார்மோனை அதிகம் உற்பத்தி செய்து, உடல் பருமனை ஊக்குவிக்கும். முக்கியமாக தொப்பையை வரவழைக்கும். எனவே மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications