Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
உங்க இரத்த வகை என்னன்னு சொல்லுங்க... ஈஸியா வெயிட்டை குறைக்க எப்படி சாப்பிடணும்-ன்னு சொல்றோம்...
Weight loss tips In Tamil: இன்றைய காலகட்டத்தில் உடல் பருமனால் நிறைய பேர் அவதிப்பட்டு, அந்த உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இப்படி அதிகரிக்க உடல் எடையைக் குறைக்க பலரும் டயட், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதுண்டு.
உடல் எடையைக் குறைக்க பல்வேறு டயட்டுகள் உள்ளன. ஆனால் டயட் மேற்கொள்ளும் அனைவராலுமே உடல் எடையைக் குறைத்துவிட முடிவதில்லை. அதோடு டயட்டை பின்பற்றுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. நிறைய பேர் கடுமையான டயட்டை மேற்கொள்ளாமல் எளிய வழியில் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கின்றனர்.

நீங்கள் கடுமையான டயட்டை மேற்கொள்ளாமல், சிம்பிளான டயட்டை மேற்கொண்டு உடல் எடையைக் குறைக்க விரும்பினால், உங்களின் இரத்த பிரிவுக்கு ஏற்றவாறு உணவுகளை உட்கொள்ளுங்கள். உணவுகளுக்கும், இரத்த வகைக்கும் தொடர்பு உள்ளது.
ஒவ்வொரு இரத்த வகையும் வெவ்வேறு உயிர் வேதியியலைக் கொண்டது மற்றும் அனைத்து உணவுகளிலுமே லெக்டின்கள் உள்ளன. லெக்டின்கள் என்பவை இரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் வெளிப்படுத்தப்படும் புரோட்டீன்கள் ஆகும். ஒருவரது இரத்த வகைக்கு ஏற்ற லெக்டின் நிறைந்த உணவை உட்கொண்டால் தான், ஒருவரது செரிமான மண்டலம், வளர்சிதை மாற்றம் போன்றவை சிறப்பாக செயல்படும்.
ஒருவரது வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருந்தால், உடல் எடை தானாக குறையும். இப்போது உடல் எடை வேகமாக குறைய எந்த இரத்தப் பிரிவினர் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.
இரத்த பிரிவு ஏ
இரத்த பிரிவு ஏ வகையை சேர்ந்தவர்கள் வெஜிடேரியன் உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இவர்களது செரிமான மண்டலமானது மிகவும் குறைவான அளவில் செரிமான நொதிகளை உற்பத்தி செய்கின்றன. இதன் விளைவாக கடினமான இறைச்சி போன்றவற்றை உட்கொள்ளும் போது ஜீரணிக்க சிரமமாக இருக்கும். மேலும் மற்ற இரத்த பிரிவினரை விட ஏ இரத்த பிரிவினருக்கு புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. உடல் எடையைக் குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:
* ஏ இரத்த பிரிவினர் தங்களின் புரோட்டீன் அளவை அதிகரிக்க கானாங்கெளுத்தி மற்றும் சால்மன் போன்ற மீன்களை சாப்பிடலாம். ஆனால் பாம்ப்ரெட் போன்ற வெள்ளை இறைச்சி மீன்களைத் தவிர்க்க வேண்டும்.
* சோயா பால் மற்றும் ஆட்டு பாலைக் குடிக்கலாம்.
* வேர்க்கடலை, சோயா நட்ஸ், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
* ப்ராக்கோலி, வெங்காயம், கேரட், பூசணிக்காய், பூண்டு போன்ற காய்கறிகளை சாப்பிடலாம்.
* அனைத்து பழங்களையும் சாப்பிடலாம். ஆனால் தர்பூசணி, முலாம்பழம், பப்பாளி, மாம்பழம், வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை ஜீரணமாக கடினமாக இருக்கும்.
* மாட்டுப் பால், பீர், சோடா, கார்போனேட்டட் பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
இரத்த பிரிவு பி
இரத்த பிரிவு பி வகையை சேர்ந்தவர்கள் கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து இரத்த சர்க்கரை பெறப்பட்டு, அது ஆற்றலாக உடலில் மாற்றப்படுகிறது. இருப்பினும், இவர்களுக்கு விரைவில் தொற்றுகள், அலர்ஜி போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இவர்கள் உடல் எடையைக் குறைக்க பின்வரும் உணவுகளை உட்கொள்வது நல்லது.
* கடல் மீன்களை சாப்பிடுவது நல்லது.
* ஆட்டிறைச்சி, வான்கோழி, மான், முயல் போன்ற இறைச்சிகளை சாப்பிடலாம். ஆனால் பன்றி இறைச்சி, சிக்கன், இறால், நண்டு, கடல் சிப்பி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* பால் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்கள் மற்றும் முட்டைகளை அளவாக உட்கொள்ள வேண்டும்.
* கோதுமை, வேர்க்கடலை, முழு கோதுமை அல்லது எள் போன்றவற்றை விட ஓட்ஸ், கைக்குத்தல் அரிசி போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தங்கள் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
* கீரைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஆனால் தக்காளி, சோளம் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
* அனைத்து வகையான பழங்களையும் சாப்பிடலாம். ஆனால் மாதுளை, பேரிக்காய், தேங்காய், ஸ்டார் பழம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
இரத்த பிரிவு ஓ
இரத்த பிரிவு ஓ வகையை சேர்ந்தவர்கள் அதிகளவு இறைச்சியை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இவர்களின் செரிமான நொதியானது மற்றவர்களை விட அதிகமாக இருக்கும். இருப்பினும், இவர்களுக்கு தைராய்டு பிரச்சனைகளுக்கான அபாயம் அதிகம் உள்ளது. இவர்கள் உடல் எடையைக் குறைக்க பின்வரும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
* இறைச்சிகளை அதிகம் உட்கொள்ளலாம்.
* பால், சீஸ், முட்டை போன்றவற்றை மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துவிடும்.
* ஓட்ஸ், கோதுமை, நட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* அனைத்து வகையான காய்கறிகளையும் சாப்பிடலாம். ஆனால் முட்டைக்கோஸ், காளான், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை விட ப்ராக்கோலி, பசலைக்கீரை, கேல் ஆகியவறை அதிகம் உண்பது நல்லது. முக்கியமாக முட்டைக்கோஸை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை தைராய்டு பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
* பழங்களைப் பொறுத்தவரை, பெர்ரிப்பழங்கள், ப்ளம்ஸ் போன்றவற்றை உட்கொள்வது நல்லது. முலாம் பழம், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* பால், டீ, காபி, பீர் போன்ற பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
இரத்த பிரிவு ஏபி
இரத்த பிரிவு ஏபி வகையை சேர்ந்தவர்கள் சைவ உணவுகளையும், பால் பொருட்களையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இவர்கள் ஏ மற்றும் பி இரத்த வகையின் கலவை. மற்றவர்களை விட இவர்களின் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். இவர்கள் உங்கள் எடையைக் குறைக்க பின்வரும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
* ஆடு, மான், முயல், டுனா, மத்தி போன்ற பல்வேறு இறைச்சிகளை சாப்பிடலாம். ஆனால் சால்மன், வெள்ளை இறைச்சி மீன்களை தவிர்க்க வேண்டும்.
* பால், வெண்ணெய், முட்டை, சோயா பீன்ஸ், டோஃபு மற்றும் கொழுப்பு குறைவான தயிர் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
* எள்ளு விதைகள், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், சோளம் போன்றவற்றைத் தவிர்த்து, ஓட்ஸ், கம்பு போன்றவற்றை உட்கொள்ளலாம்.
* அனைத்து விதமான காய்கறிகளையும் சாப்பிடலாம். ஆனால் ப்ராக்கோலி, வெள்ளரிக்காய், பூண்டு மற்றும் காலிஃப்ளவர் போன்றவற்றை அதிகம் உட்கொள்வது இன்னமும் நல்லது.
* பழங்களில் திராட்சை, ப்ளம்ஸ், பெர்ரி பழங்கள் போன்றவற்றை உட்கொள்வது நல்லது. வாழைப்பழம், ஆரஞ்சு, மாம்பழம், கொய்யா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ளவாறு ஒவ்வொரு இரத்த பிரிவினரும் அவர்களிக்கு இரத்த வகைக்கு ஏற்ப உணவுகளை உட்கொண்டு, உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், எளிதில் உடல் எடையைக் குறைக்கலாம். எனவே நண்பர்களே! நீங்களும் முயற்சித்து நன்மை பெறுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











