Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
ஈஸியா உடல் எடையை குறைக்கணுமா? அப்ப நைட் 7 மணிக்கு மேல இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..
Weight Loss Diet In Tamil: நீங்கள் உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் முதலில் நாம் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் நாம் உண்ணும் உணவுகளால் தான் நமது உடல் எடை அதிகரிக்கிறது.
எப்படி உணவுகளால் உடல் எடை அதிகரிக்கிறதோ, அதே உணவுகளால் உடல் எடையைக் குறைக்க முடியும். அதற்கு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதோடு என்ன சாப்பிடுகிறோம், எல்லளவு சாப்பிடுகிறோம் என்பதை அறிந்து உண்ண வேண்டும்.

உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள், முக்கியமாக இரவு நேரத்தில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை அறிந்து உண்ண வேண்டும். மேலும் ஒருசில உணவுகளை இரவு நேரத்தில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இப்போது உடல் எடையைக் குறைக்க இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னவென்பதைக் காண்போம்.
1. அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள்
கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகள், குறிப்பாக சாச்சுரேட்டட் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளில் கலோரிகள் அதிகம் இருப்பதோடு, அவை செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். இப்படிப்பட்ட உணவுகளை இரவு நேரத்தில் உட்கொண்டால், அவை மெதுவாக ஜீரணமாவதோடு, அந்த உணவுகளில் உள்ள அதிகப்படியான கலோரிகள் கொழுப்புகளாக உடலில் தேங்கி, உடல் எடையை இன்னும் அதிகரிக்கும். எனவே எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ்கள் போன்றவற்றை 7 மணிக்கு மேல் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
2. சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள்
சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுப்பதோடு, இரவு தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும் மற்றும் இரவு நேரத்தில் பசியைத் தூண்டிவிடும். எனவே இரவு நேரத்தில் சர்க்கரை நிறைந்த உணவுகள், பானங்கள், சாக்லேட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அதோடு, செரில்கள் மற்றும் ப்ளேவர்டு தயிர்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
3. காரமான உணவுகள்
காரமான உணவுகள் அஜீரண கோளாறு, நெஞ்செரிச்சல் மற்றும் அசௌரியம் போன்றவற்றை உண்டாக்கி, தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். இரவு நேரத்தில் சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், அதன் வளைவாக நள்ளிரவில் பசி அதிகம் எடுக்க ஆரம்பித்து, கண்ட ஸ்நாக்ஸ்களை சாப்பிட தூண்டிவிடும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், இந்த மாதிரியான உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
4. அதிகளவு உணவு
ஒரு நாளில் எப்போதும் மதிய வேளையில் தான் நிறைய சாப்பிட வேண்டும். இரவு நேரத்தில் மிகவும் குறைவான அளவில் தான் சாப்பிட வேண்டும். ஏனெனில் படுக்கைக்கு முன் அதிகமாக சாப்பிட்டால், அந்த உணவுகளை உடலில் ஜீரணிக்க சவாலாக இருக்கும். கூடுதலாக, இது அசௌகரியம், வயிற்று உப்புசம் மற்றும் தூங்குவதில் இடையூறை உண்டாக்கும். இரவு நேரத்தில் அளவாக சாப்பிட லீன் புரோட்டீன், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.
5. காப்ஃபைன் நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள்
காப்ஃபைன் நிறைந்த உணவுகள் மற்றும் பானங்களை இரவு நேரத்தில் உட்கொண்டால், அது நல்ல தூக்கத்தைப் பெறுவதில் இடையூறை ஏற்படுத்தும். அதுவும் இரவு 7 மணிக்கு மேல் காப்ஃபைன் நிறைந்த உணவுகள் மற்றும் பானங்களை உட்கொண்டால், இரவு தூங்குவது சிரமமாக இருக்கும் அல்லது இரவு முழுவதும் விழித்திருக்கவும் நேரிடும். எனவே முடிந்த வரை காப்ஃபைன் நிறைந்த காபி, டீ, எனர்ஜி பானங்கள் மற்றும் சாக்லேட் போன்றவற்றை மாலை வேளைக்கு பின் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











