Latest Updates
-
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா?
பரம்பரை மார்பக புற்றுநோய் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
Hereditary Breast Cancer In Tamil: இன்று வரை பெண்களை அச்சுறுத்தும் ஒன்றாக மார்பக புற்றுநோய் இருந்து வருகிறது. மார்பக புற்றுநோய் மார்பக செல்களில் தொடங்குகிறது. இந்த புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் அதை தடுக்க முடியும். இந்த மார்பக புற்றுநோய்க்கு உடனே சிகிச்சை அளிக்காவிட்டால் அவை மற்ற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது.
இந்த மார்பக புற்றுநோயை கண்டறிய வேண்டும் என்றால் அதற்கு சுய பரிசோதனை மற்றும் மேமோகிராபி போன்ற அம்சங்கள் தேவைப்படுகின்றன. இந்த மார்பக புற்றுநோய் வருவதற்கு சில ஆபத்து காரணிகளும் காரணமாகின்றன. அந்த வகையில் பார்க்கும் போது மரபியல் காரணங்கள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவை மார்பக புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

சிலருக்கு பரம்பரை ரீதியாகவும் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் தாக்கம் இருந்தால் அது பரம்பரைக்கும் வர வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் BRCA1 மற்றும் BRCA2 மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகள் காரணமாகவும் மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். சரி வாங்க இந்த பகுதியில் பரம்பரை மார்பக புற்றுநோய் பற்றி அறிந்து கொள்வோம்.
பரம்பரை மார்பக புற்றுநோய்
மரபணு காரணிகள்
பிஆர்சிஏ1 மற்றும் பிஆர்சிஏ2 மரபணுக்கள் தான் மார்பகங்களில் ஏற்படும் கட்டியை சரிசெய்து சேதமடைந்த டி. என். ஏவை சரிசெய்ய உதவுகிறது. ஆனால் இந்த டி. என்.ஏ வில் பிறழ்வுகள் ஏற்படும் போது அதை சரி செய்ய முடியாமல் போகிறது. இந்த மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகள் காரணமாக மார்பக புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது. இதனால் மார்பக புற்றுநோய் அபாயம் அதிகமாக அதிகரிக்கிறது.
பரம்பரை முறை
பரம்பரை மார்பக புற்றுநோய் ஒரு தன்னியக்க மார்பக புற்றுநோய் பாதிப்பாக உள்ளது. அதாவது ஒருவர் அவரின் பெற்றோரிடம் இருந்து BRCA1 அல்லது BRCA2 போன்ற பிறழ்வுகளை பெற்றால் இந்த மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறாக பாதிக்கப்பட்ட நபரின் ஒவ்வொரு குழந்தைக்கும் பிறழ்வுகளால் ஆன மரபணுவை பெறுவதற்கான வாய்ப்பு 50% மாக உள்ளது.
ஆபத்து காரணிகளை குறைப்பதற்கான வழிகள்
பரம்பரை மார்பக புற்றுநோய் இருக்கும் குடும்பத்தினர் இளம் வயதிலேயே மரபணு பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. அதே மாதிரி கருப்பை புற்றுநோய் அபாயம் இருக்கும் நபர்களும் மரபணு பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. BRCA பிறழ்வுகளை முன்னரே கண்டறிவது நன்மை அளிக்கும்.
பரம்பரை மார்பக புற்றுநோயை நிர்வகிப்பதற்கான வழிகள்:
அடிக்கடி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் மிகவும் அவசியம். மேமோகிராபி, மார்பக எம்ஆர்ஐக்கள் மற்றும் மருத்துவ மார்பக பரிசோதனைகள் ஆகியவற்றை நீங்கள் முன்னரே கண்டறிய வேண்டும். BRCA பிறழ்வுகள் இருப்பவர்கள் பரிசோதனையை அடிக்கடி மேற்கொள்வது நல்லது.
வேதியியல் தடுப்பு முறைகள்
தமொக்சிபென் அல்லது ரலாக்சிஃபீன் போன்ற கீமோ-தடுப்பு மருந்துகள், அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதைக் குறைக்கிறது. எனவே மருத்துவரின் பரிந்துரை பேரில் இதை எடுத்துக் கொண்டு வரலாம்.
நோய்தடுப்பு அறுவை சிகிச்சை முறைகள்
மார்பக புற்றுநோய் அபாயத்தை நீங்கள் குறைக்க நினைத்தால் முலையழற்சி போன்றவற்றிற்கு தடுப்பு அறுவை சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
கருப்பை புற்றுநோய் ஆபத்து
BRCA பிறழ்வுகள் கருப்பை புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சல்பிங்கோ-ஓஃபோரெக்டோமி போன்ற நோய்களின் அபாயம் அதிகம். பரம்பரை மார்பக புற்றுநோய் ஒரு சிக்கலான மற்றும் கடினமான கோளாறு ஆகும். எனவே இதற்கு சிகிச்சை அளிக்க கூட்டு அணுகுமுறை சிகிச்சை தேவைப்படுகிறது.
மார்பக பரிசோதனை
மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் கொண்ட பெண்களுக்கு தேசிய விரிவான புற்றுநோய் நெட்வொர்க் (NCCN) மரபணு ஆலோசனை மற்றும் சோதனைகளை வழங்குகிறது. இதன்படி பரம்பரை மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள நபர்கள் கீழ்க்கண்ட விஷயங்களை செய்ய வேண்டியது அவசியம்.
* முதல் நிலை உறவினர்களான பெற்றோர்கள், குழந்தைகள், உடன் பிறந்தவர்கள் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
* இரண்டாம் நிலை உறவினர்களான அத்தைகள், மாமாக்கள், தாத்தா பாட்டி, பேரக் குழந்தைகள், மருமகள்கள் போன்றவர்கள் அடங்குவர்.
* மூன்றாம் நிலை உறவினர்களான முதல் நிலை உறவினர்களின் கொள்ளு தாத்தா, பாட்டி மற்றும் கொள்ளு பேரக் குழந்தைகள் போன்றவர்கள் அடங்குவர்
* அதே மாதிரி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மார்பக புற்று நோயால் பாதிப்படைந்தால் மரபணு சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
* 45 அல்லது அதற்கு குறைவான வயதில் மார்பக புற்றுநோயை கண்டறிய பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
* 46 முதல் 50 வயதிலும் மார்பக புற்று நோயை கண்டறிய வேண்டும். எனவே அடிக்கடி பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications