Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
உடற்பயிற்சி செய்யும் போது இந்த அறிகுறி தெரியுதா? அப்ப அது இதய நோயின் எச்சரிக்கை அறிகுறி.. உஷார்...
Heart Problems During Exercise: நம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு சிறந்த வழி தான் உடற்பயிற்சி. தினமும் உடற்பயிற்சியில் ஒருவர் ஈடுபட்டு வந்தால், உடலில் இரத்த ஓட்டம் சீராகி, இதயம் முதல் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். ஆனால் அந்த உடற்பயிற்சியையே ஒருவர் அளவுக்கு அதிகமாகவோ அல்லது மிகவும் கடுமையான முறையிலோ மேற்கொண்டால், அது உடலில் மோசமான பிரச்சனைகளை வரத்தூண்டும்.
சமீப காலமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே நிறைய பேர் இறக்கும் செய்தியை கேட்டிருப்பீர்கள். எனவே உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் ஈடுபட வேண்டும். அதோடு இதய பிரச்சனை இருந்தால் உடற்பயிற்சி செய்யும் போது எந்த மாதிரியான அறிகுறிகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டியது முக்கியம்.

நிறைய பேரின் மனதில் ஒரு கேள்வி இருக்கும். அது உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்திற்கு நல்லதா அல்லது கெட்டதா? இதய பிரச்சனை இருந்தால் உடற்பயிற்சியில் ஈடுபடலாமா என்பன போன்றவை தான். பொதுவாக உடற்பயிற்சியானது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது.
சொல்லப்போனால் ஒருவரது இதய நோயின் அபாயம் அதிகரிக்க டைப்-2 சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், உடல் பருமன், புகைப்பிடிப்பது மற்றும் குடும்பத்தில் இதய நோய் வரலாறு இருப்பது மட்டுமின்றி, உடலுக்கு எந்த ஒரு உழைப்பும் கொடுக்காமல், எந்நேரமும் சோம்பேறித்தனமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் இதய நோயின் அபாயம் அதிகரிக்கும்.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் கூற்றுப்படி, வாரத்திற்கு மூன்று முதல் ஐந்து நாட்கள் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மிதமான மற்றும் தீவிரமான உடற்பயிற்சியை செய்வது ஒவ்வொருவருக்கும் நல்லது. ஏனெனில் உடற்பயிற்சி உடலில் இருந்து நல்ல ஹார்மோன்களை வெளியிட உதவி புரிகிறது. ஆனால் ஒருவர் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதாக இருந்தால், மருத்துவரை அணுகி சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது ஒருவர் எந்த பயிற்சிகளை எந்த அளவிற்கு செய்ய வேண்டும் என்பதை அறிய உதவும்.
ஆனால் ஒரு புதிய அல்லது கடுமையான உடற்பயிற்சியில் எந்தவொரு ஆலோசனையும் இல்லாமல் ஈடுபட்டால், அது கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தலாம். ஏனெனில் சில நேரங்களில் இதயம் சமாளிக்கக்கூடியதை விட அதிகமாக உடற்பயிற்சி செய்வதால், இதயத் துடிப்பு அதிகரிக்கலாம், இதய வால்வுகள் குறுகல் ஆகலாம். இதன் விளைவாக உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு, திடீர் மரணத்தை உண்டாக்கலாம்.
உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்படப் போகிறது என்றால் அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே அதைக் கவனிக்க வேண்டும். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
நெஞ்சு வலி
உடற்பயிற்சியின் போது நெஞ்சு பகுதியில் லேசான வலியை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதுவும் இந்த வலியானது அதிக வியர்வையுடன், இடது கை அல்லது தாடை வரை பரவினால் அசால்ட்டாக இருக்காதீர்கள். பலரும் இந்த அறிகுறிகளை உடற்பயிற்சியினால் ஏற்பட்ட கருதலாம். ஆனால் இது அமைதியான மாரடைப்பின் அறிகுறிகளாகும். எனவே கவனமாக இருங்கள்.
மூச்சுத்திணறல்
உடற்பயிற்சியின் போது நெஞ்சு பகுதியில் அசௌகரியத்துடன், மூச்சுத்திணறலையும் சந்தித்தால், அது மாரடைப்பின் ஆரம்ப கால அறிகுறியாகும். இந்த மூச்சுத்திணறலுடன் மார்பு வலி இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். எனவே காரணமின்றி அதிக மூச்சுத்திணறலை சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
தலைச்சுற்றல்
உடற்பயிற்சி ஒருவரை அதிகம் சோர்வடையச் செய்யலாம். அதுவும் முதல்முறையாக உடற்பயிற்சியில் ஈடுபட்டால், அவர்களுக்கு இப்படி ஏற்பட நிறைய சோர்வை சந்திக்கலாம். ஆனால் உடற்பயிற்சி செய்யும் போது மயக்கம் அல்லது தலைச்சுற்றலை சந்தித்தால், அது நல்லதல்ல. அதை ஒரு எச்சரிக்கையாக கருதி, உடனே உடற்பயிற்சி செய்வதை நிறுத்தி, மருத்துவரை அணுக வேண்டும்.
அசாதாரண இதயத்துடிப்பு
உடற்பயிற்சி செய்யும் போது இதயத்துடிப்பு அதிகமாகி படபடவென்று இருந்தால், அது இதயம் தொடர்பான பிரச்சனையின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். எனவே இப்படியான அறிகுறியை அசால்ட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
உடலின் பிற பகுதிகளில் அசௌகரியம்
உடற்பயிற்சியின் போது எழும் எந்த இதய பிரச்சனையும் மார்பைத் தவிர, உடலின் பிற பகுதிகளிலும் மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும். அதில் கைகள், கழுத்து, தாடை, முதுகு அல்லது வயிறு போன்ற பகுதிகளில் அதிக அசௌகரியத்தை அல்லது அழுத்தத்தை சந்திக்க நேரிடும். அதுவும் வலி என்றால் அது கை, முதுகு, கழுத்து, தோள்பட்டை வரை வலியை அனுபவிக்க நேரிடும்.
எனவே உடற்பயிற்சியின் போது மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications