Latest Updates
-
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
நாள் முழுவதும் உடம்பு ரொம்ப அலுப்பா இருக்கா? அப்ப இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு... உஷார்..
Feeling Tired In Tamil: நாம் தற்போது அவசர உலகில் வாழ்ந்து வருகிறோம். பலரும் பணம் சம்பாதிப்பதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிறோம். இந்த ஒரு முக்கியமான காரணத்தினாலேயே பலர் நாள் முழுவதும் மிகுந்த உடல் சோர்வையும், மிகுந்த களைப்பையும் உணர்கிறோம்.
ஆனால் ஒருவருக்கு போதுமான ஓய்வு கிடைத்தால், உடல் சோர்வானது நீங்கி, உடல் புத்துணர்ச்சி அடைந்துவிடும். இருப்பினும் சில சமயங்களில் உடலில் ஒருசில பிரச்சனைகள் இருந்தால், அதன் காரணமாக நாள் முழுவதும் மிகுந்த சோர்வை சந்திக்க நேரிடும்.

முக்கியமாக நன்கு தூங்கி எழுந்தாலும் அந்த உடல் சோர்வை அனுபவிக்கக்கூடும். இப்போது எந்த காரணங்களுக்கு எல்லாம் ஒருவர் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கக்கூடும் என்பதைக் காண்போம்.
1. இரத்த சோகை
இரத்த சோகை என்பது உடலில் இரத்த சிவப்பணுக்களானது வழக்கத்தை விட மிகவும் குறைவாக இருந்தால் ஏற்படும். இரத்த சோகையின் முக்கியமான மற்றும் முதன்மையான அறிகுறியே மிகுந்த உடல் சோர்வை அனுபவிப்பது. இது தவிர தலைச்சுற்றல், வெளிரிய சருமம், நகங்கள் எளிதில் உடைவது போன்றவை அடங்கும்.
2. ஹைப்போதைராய்டிசம்
ஹைப்போதைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பியானது உடலுக்கு தேவையான அளவை விட மிகவும் குறைவான அளவில் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நிலையாகும். ஒருவருக்கு ஹைப்போ தைராய்டு பிரச்சனை இருந்தால், அது உடல் சோர்வு, உடல் பருமன், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, வறண்ட சருமம் போன்றவை அறிகுறிகளை சந்திக்க நேரிடும்.
3. வைட்டமின் குறைபாடுகள்
உடலில் அத்தியாவசிய வைட்டமின்களின் குறைபாடுகள் ஏற்பட்டால், அது களைப்பு மற்றும் மிகுந்த உடல் சோர்வை உண்டாக்கும். உதாரணமாக, உடலில் போதுமான பி12 வைட்டமின்கள் இல்லாவிட்டால், அதன் விளைவாக மிகுந்த உடல் சோர்வு மற்றும் அதிகப்படியான களைப்பை எந்நேரமும் உணரக்கூடும். அதேப் போல் வைட்டமின் ஏ குறைவாக இருந்தால், அதன் விளைவாக தசை பலவீனமாகி, அதனால் மிகுந்த உடல் அலுப்பை சந்திக்கக்கூடும்.
4. உடல் பருமன்
ஒருவர் தங்களின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல், அதிக உடல் எடையுடன் இருந்தால், அதன் காரணமாக பகல் வேளையில் மிகுந்த உடல் சோர்வை அனுபவிப்பதோடு, எப்போதுமே புத்துணர்ச்சியுடன் இல்லாமல் அசதியுடனே இருப்பர்.
இது தவிர நாள்பட்ட நோய்களான சிஓபிடி, ஆஸ்துமா அல்லது பிற இதய நோய்கள் போன்றவையும் ஒருவருக்கு மிகுந்த உடல் சோர்வை ஏற்படுத்தும். கூடுதலாக குறிப்பிட்ட சில மருந்து மாத்திரைகளை எடுப்பதனாலும், அதிகமான உடல் சோர்வை சந்திக்கக்கூடும்.
5. மன அழுத்தம் மற்றும் பதட்டம்
தற்போது நிறைய பேர் தங்களின் பணியிடத்தில் கொடுக்கப்படும் இலக்கினால் பதட்டம் மற்றும் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் ஆய்வு ஒன்றில், 7000 க்கும் மேற்பட்ட பணிபுரிபவர்கள் வேலை தொடர்பான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மிகுந்த உடல் சோர்வை சந்திப்பது தெரிய வந்துள்ளது. எனவே அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டமடைந்தாலும், ஒருவர் அதிக உடல் அலுப்பை சந்திக்கக்கூடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications