Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
ஆண்களே! 40 வயசுக்கு மேல இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. இல்ல ஆபத்து தான்..
High Cholesterol Symptoms In Tamil: கொலஸ்ட்ரால் என்பது நமது இரத்தத்தில் இருக்கும் ஒரு பொருள். பலரும் கொலஸ்ட்ரால் என்றால் அஞ்சுகிறார்கள். ஆனால் உண்மையில் கொலஸ்ட்ரால் ஆபத்தை ஏற்படுத்தாது. அதுவும் உடலில் கொலஸ்ட்ரால் அளவை சரியாக பராமரித்து வந்தால், உடலியக்கம் சிறப்பாக இருக்கும்.
அதுவே கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு இல்லாமல் அதிகரித்தால், அதன் விளைவாக உயிரை பறிக்கும் மாரடைப்பு வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. அதுவும் இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனையை 40 வயதிற்கு மேல் அதிகம் சந்திக்க நேரிடும். கொலஸ்ட்ரால் உடம்பில் அதிகளவில் இருந்தால், அது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற மோசமான ஆரோக்யி பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரித்துவிடும்.

பொதுவாக நமது உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதாவது கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது என்றால் அது ஒருசில அறிகுறிகளை நமக்கு வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை ஒருவர் கவனித்து, மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டு வந்தால், நிலைமை கையை மீறி செல்வதைத் தவிர்க்கலாம்.
அதுவும் 40 வயதை எட்டிய ஆண்களின் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், பின்வரும் அறிகுறிகள் தெரியக்கூடும். இந்த அறிகுறிகள் 40 வயதை எட்டிய ஆண்கள் அனுபவித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். இப்போது அந்த எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.
1. நெஞ்சு பகுதியில் இறுக்கம்
அடிக்கடி நெஞ்சு பகுதியல் ஒருவித அழுத்தம் அல்லது இறுக்கத்தை அனுபவிக்கிறீர்களா? அதுவும் உடற்பயிற்சி செய்யும் போது அல்லது வேறு ஏதேனும் வேலைகளை செய்யும் போது இப்படியான அறிகுறியை சந்திக்கிறீர்களா? அப்படியானால் இரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால் படிந்துள்ளது என்று அர்த்தம். இப்படியானால் இறுக்கத்தை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே சந்தியுங்கள். ஏனெனில் இது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
2. கை, கால்களில் கூச்சஉணர்வு அல்லது உணர்வின்மை
தமனிகளில் கொலஸ்ட்ரால்கள் படிந்து ப்ளேக்குகள் உருவானால், இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படும். இப்படி உடலில் இரத்த ஓட்டம் கட்டுப்படும் போது, கைகள், கால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு ஏற்படக்கூடும். எனவே அடிக்கடி இப்படியான அறிகுறி தெரிந்தால், அதை தீவிரமாக எடுத்துக் கொண்டு மருத்துவரை அணுகுங்கள்.
3. தோலில் மஞ்சள் நிற திட்டுக்கள்
உடலின் கண்கள், முழங்கைகள் அல்லது முழங்கால்களைச் சுற்றி மஞ்சள் நிற திட்டுக்கள் காணப்பட்டால், அது கொழுப்பு உடம்பில் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். அதுவும் கண்களுக்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளில் கொழுப்பு படிவுகள் அதிகமாகக் குவிந்தால், அது பார்வையை பாதிக்கலாம்.
4. மூச்சுத்திணறல்
படிக்கட்டுகளில் ஏறி இறக்கும் போது கடுமையான மூச்சுத்திணறலை சந்திக்கிறீர்களா? அப்படியானால் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், இதயத்தால் திறம்பட செயல்பட முடியாமல் போகும். எனவே மூச்சுத்திணறலை அதிகம் சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
5. உடல் சோர்வு மற்றும் பலவீனம்
எவ்வளவு நேரம் தூங்கி எழுந்தாலும் அல்லது போதுமான ஓய்வை எடுத்தாலும், கடுமையான உடல் சோர்வு மற்றும் பலவீனத்தை சந்திக்கிறீர்களா? அப்படியானால் இரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால் தேக்கத்தால் தசைகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதால், அவற்றின் செயல்பாடு குறைந்து, இப்படியான சோர்வை சந்திக்க நேரிடுகிறது. எனவே உடல் சோர்வு பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
6. விறைப்புத்தன்மை குறைபாடு
முக்கியமாக 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களின் தமனிகளில் கொலஸ்ட்ரால் படிந்திருந்தால், அது ஆணுறுப்புக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்தி, விறைப்புத்தன்மை குறைபாட்டை ஏற்படுத்தும். எனவே 40 வயதிலேயே விறைப்புத்தன்மை குறைபாட்டை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
7. உயர் இரத்த அழுத்தம்
தமனிகளில் கொழுப்புக்கள் அதிகம் படிந்து, இரத்த ஓட்டம் குறைந்தால், அது உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையை சந்தித்தால், அந்நபருக்கு உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு உடனடி சிகிச்சையை மேற்கொள்ளாமல் விட்டால், பின் அது மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும்.
எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் சந்தித்தால், அவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகி, சிகிச்சை மேற்கொண்டு, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைத்திடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications