Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
எக்காரணம் கொண்டும் இந்த உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜ்ஜில் வெக்காதீங்க.. இல்ல அது விஷமாயிடும்...
Foods You Should Never Refrigerate: தற்போது அனைவரது வீடுகளிலுமே ஃப்ரிட்ஜ் என்னும் குளிர்சாதன பெட்டி உள்ளது. இந்த ஃப்ரிட்ஜ் உணவுகள் விரைவில் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் நற்பதமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் நாம் உண்ணும் அனைத்து உணவுப் பொருட்களுமே ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க ஏற்றவை அல்ல. சில உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கும் போது, அதன் சுவை, அமைப்பு, ஊட்டச்சத்து போன்றவை பாதிக்கப்படுவதோடு, சில சமயங்களில் அவை நஞ்சாகவும் மாறிவிடும்.
நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க விரும்பினால், எந்த உணவுப் பொருட்களை எப்படி சேமித்து வைக்க வேண்டும் என்பதை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்கு எந்த உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாது என்பது தெரியாதெனில், உங்களுக்காக குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாத சில உணவுகள் குறித்து கீழே விரிவாக கூறப்பட்டுள்ளன.

1. உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாது. ஏனெனில் இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கும் போது அதிகப்படியான குளிர்ச்சியானது உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றுவதோடு, சுவையையும் இனிப்பாக மாற்றிவிடும். இப்படியான நிலையில் சர்க்கரை நோயாளிகள் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரையை இன்னும் உயர்த்திவிடும்.
2. தக்காளி
நிறைய பேர் தக்காளி விரைவில் கெட்டுப் போகக்கூடாது என்று, அவற்றை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கிறார்கள். ஆனால் தக்காளியை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால், குளிர்ச்சியான வெப்பநிலையானது தக்காளியின் சுவையை பாழாக்குவதோடு, அதில் உள்ள சத்துக்களையும் அழித்துவிடும். எனவே தக்காளியில் உள்ள அனைத்து சத்துக்களையும் பெற நினைத்தால், அவற்றை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காதீர்கள்.
3. வெங்காயம்
சமையலில் அவசியம் சேர்க்கப்படும் ஒரு காய்கறி தான் வெங்காயம். இப்படிப்பட்ட வெங்காயத்தை எப்போதும் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், குளிர்ச்சியான காலநிலை வெங்காயத்தின் அமைப்பை மாற்றுவதோடு, அதில் பூஞ்சைகளை வளரச் செய்து, நஞ்சாக்கிவிடும். எனவே வெங்காயத்தை வைக்க சிறந்த இடம் ஈரப்பதமில்லாத மற்றும் காற்றோட்டமான இடம் தான்.
4. பூண்டு
எப்படி வெங்காயத்தை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாதோ, அதேப் போல் பூண்டுகளையும் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், குளிர்ச்சியான வெப்பநிலை முளைக்கட்ட வைத்துவிடும். உங்களுக்கு பூண்டு நற்பதமாக இருக்க வேண்டுமானால், அவற்றை ஈரப்பதமில்லாத மற்றும் காற்றோட்டமான இடத்தில் வையுங்கள்.
5. வாழைப்பழம்
பழங்களில் வாழைப்பழத்தை எக்காரணம் கொண்டும் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாது. ஒருவேளை வைத்தால், குளிர்ச்சியான வெப்பநிலை பழம் பழுக்கும் செயல்முறையை மெதுவாக்குவதோடு, விரைவில் தோலை கருமையாக்கிவிடும். எனவே வாழைப்பழத்தை வாங்கினால், அவற்றை அறைவெப்பநிலையில் வைத்து சாப்பிடுங்கள்.
6. பிரட்
நீங்கள் பிரட் வாங்கினால், அவற்றை ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பீர்களா? அப்படியானால் இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள். ஏனெனில் பிரட்டை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால், குளிர்ச்சியான வெப்பநிலையினால் பிரட் விரைவில் வறண்டு போய்விடும். எனவே பிரட் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமானால், அவற்றை அறை வெப்பநிலையில் வைத்திருங்கள்.
7. அவகேடோ
அவகேடோ பழம் கனியாமல் இருந்தால், அவற்றை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காதீர்கள். இல்லாவிட்டால் அது பழுக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். மேலும் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கும் அவகேடோ பழத்தின் சுவை மோசமாக இருக்கும். எனவே அவகேடோ பழம் நல்ல சுவையுடனும், விரைவில் பழுக்க வேண்டுமென்றும் விரும்பினால், அவற்றை அறை வெப்பநிலையில் வையுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications