Latest Updates
-
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
தினமும் காலையில் ஒருடம்ளர் மாதுளம் பழ ஜூஸ் குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Pomegranate Juice Benefits In Tamil: ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், காலையில் எழுந்ததும் நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு உணவுகளை இயற்கை நமக்கு அளித்துள்ளது. அதில் ஒன்று தான் மாதுளம் பழ ஜூஸ்.
இன்றைய அவசர உலகில் நிறைய பேருக்கு காலையில் சாப்பிட கூட நேரம் கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பலரும் ஜூஸ்களை குடிக்க விரும்புவார்கள. அதுவும் மாதுளம் பழ ஜூஸை காலை உணவின் போது குடிப்பது மிகவும் நல்லது.

மாதுளம் பழத்தில் ஆன்டி.ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக இருப்பதால், இது ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கிறது மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. அதோடு, இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளதால், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
அதோடு, மாதுளம் பழம் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தையும் சீராக பராமரிக்க உதவி புரிகிறது. இதுப்போன்று ஏராளமான நன்மைகள் மாதுளம் பழ ஜூஸை தினமும் குடிப்பதால் கிடைக்கும். இப்போது ஒருவர் தினமும் காலையில் மாதுளம் பழ ஜூஸை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. புற்றுநோயைத் தடுக்கும்
மாதுளம் பழ ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. இவை உடலுக்கு பல நன்மைகளை விளைவிக்கின்றன. முக்கியமாக இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் ப்ரீ ராடிக்கல்களால் செல்களில் ஏற்படும் சேதத்தைக் குறைப்பதோடு, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. எனவே புற்றுநோய் வரக்கூடாதெனில் தினமும் மாதுளம் பழ ஜூஸைக் குடியுங்கள்.
2. ஆர்த்ரிடிஸை தடுக்கும்
மாதுளம் பழ ஜூஸில் ப்ளேவோனாய்டுகள் உள்ளன. இது எலும்புகள் மற்றும் திசுக்களில் ஏற்படும் சேதத்தைக் குறைத்து, மூட்டுக்களில் ஏற்படும் அழற்சி பிரச்சனையான் ஆர்த்ரிடிஸைத் தடுக்கிறது. எனவே எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில் மாதுளம் பழ ஜூஸைக் குடியுங்கள்.
3. இதயத்திற்கு நல்லது
மாதுளம் பழ ஜூஸ் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக இந்த ஜூஸ் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அதுவும் தினமும் மாதுளம் பழ ஜூஸைக் குடித்து வந்தால், அது இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் ப்ளேக்குகள் மற்றும் கொலஸ்ட்ரால்கள் வளர்வதைத் தடுத்து இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது.
4. இரத்த அழுத்தம் குறையும்
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். தினமும் மாதுளம் பழ ஜூஸை குடித்து வருவது, அது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவி புரியும்.
5. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன. இதில் உள்ள வைட்டமின் சி ஆன்டிபாடி உருவாக்கத்தை மேம்படுத்தி, உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதோடு, அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், ஆபத்தான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் ஈஸ்ட் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
6. செரிமான மண்டலம் மேம்படும்
செரிமான பிரச்சனைகளை அதிகம் சந்திப்பவர்கள், தினமும் மாதுளை ஜூஸைக் குடிப்பது நல்லது. மாதுளையில் சிக்கலான பி வைட்டமின்கள் உள்ளன. இந்த வைட்டமின்களானது, உடலில் உள்ள கொழுப்புக்கள், புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களை ஆற்றலாக மாற்றுகிறது. அதோடு, இதில் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு தேவையான நார்ச்சத்துக்களும் உள்ளன. எனவே மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் மாதுளை ஜூஸை தினமும் குடித்து வர, அப்பிரச்சனையானது உடனே சரியாகும்.
7. எடை இழப்புக்கு உதவும்
மாதுளம் பழ ஜூஸ் உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரியக்கூடியது. மேலும் மாதுளை சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை அளிக்கக்கூடிய பழம். ஏனெனில் இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள் உள்ளன. இது சர்க்கரை வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. அதுவும் இதில் உள்ள பாலிஃபீனால்கள், உடலில் தேங்கியுள்ள கொழுப்பு செல்களை எளிதில் உடைத்தெறிய செய்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications