Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப இந்த 5 காய்கறிகளை அதிகமா சாப்பிடுங்க போதும்...
Heart Health Vegetables: தற்போது உலகளவில் மாரடைப்பால் ஏராளமானோர் திடீர் மரணத்தை சந்திக்கிறார்கள். ஒருவருக்கு மாரடைப்பானது ஒரே இரவில் வந்துவிடாது. பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்றால், அவரது இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக படிந்து, ஒருகட்டத்தில் இரத்த ஓட்டத்தை தடுத்து அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பை உண்டாக்குகிறது.
எனவே மாரடைப்பிற்கு மூலகாரணம் கெட்ட கொழுப்புக்கள். இந்த கெட்ட கொழுப்புக்கள் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகளின் மூலமும், உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையினாலும் தான் அதிகரிக்கின்றன. இந்த கெட்ட கொழுப்புக்களை குறைக்க வேண்டுமானால், முதலில் வாழ்க்கை முறையிலும், உணவுப் பழக்கத்திலும் சிறு மாற்றங்களை செய்ய வேண்டும்.

அதற்கு தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவும் உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வர வேண்டும். உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க ஏராளமான உணவுகள் உதவி புரிகின்றன.
அதுவும் ஒருசில காய்கறிகளை இந்த கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க பெரிதும் உதவும் என்பது தெரியுமா? கீழே மாரடைப்பைத் தூண்டும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் காய்கறிகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அந்த காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், மாரடைப்பு வரும் அபாயத்தைக் குறைக்கலாம்.
1. ப்ராக்கோலி
ப்ராக்கோலி ஒரு அற்புதமான காய்கறி. ஏனெனில் இதில் ஏராளமான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் போன்றவை உள்ளன. இதில் உள்ள டயட்டரி நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் வேலையை செய்கிறது. அதாவது இது கொலஸ்ட்ரால் இரத்த ஓட்டத்தை அடைவதற்கு முன்பு கொழுப்பை வெளியேற்ற உடலுக்கு உதவுகிறது.
மேலும் இதில் உள்ள லுடீன் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இரத்த நாளங்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது மற்றும் இதய நோய் தொடர்பான காயங்களை குறைக்கிறது. ஆய்வுகளிலும் ப்ராக்கோலியை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு, இதய நோய்களின் அபாயம் குறைவது தெரிய வந்துள்ளது. இப்படிட்ட ப்ராக்கோலியை ஆவியில் வேக வைத்து சாப்பிட்டால் தான் அதன் முழு சத்துக்களைப் பெற முடியும்.
2. வெண்டைக்காய்
வெண்டைக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது தான் ஜெல் போன்ற பொருளை வெண்டைக்காயில் உருவாக்குகிறது. இந்த ஜெல் போன்ற பொருள் தான் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி, இரத்தத்தில் கலப்பதைத் தடுக்கிகறது. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாவர வகை கலவைகள் இரத்த நாளங்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது.
ஆய்வுகளிலும் வெண்டைக்காயை தினசரி உணவில் சேர்த்து வந்தால், அது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இதயம் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில் வெண்டைக்காயை உணவில் அதிகமாக சேர்த்து வாருங்கள்.
3. கத்திரிக்காய்
கத்திரிக்காயில் கணிசமான அளவில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே கத்திரிக்காயை உணவில் அடிக்கடி சேர்க்கும் போது, அது தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ராலை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. என்ன தான் கத்திரிக்காயில் கலோரிகள் சிறிது இருந்தாலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமான அளவில் உள்ளன.
ஆய்வுகளில் கூட கத்திரிக்காயை அதிகம் உணவில் சேர்க்கும் போது, அது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே கத்திரிக்காயின் முழு சத்துக்களைப் பெற விரும்பினால், அவற்றை எண்ணெயில் பொரித்து சாப்பிடாமல், ஆவியில் வேக வைத்தோ அல்லது கிரில் செய்தோ சாப்பிடுங்கள்.
4. கேரட்
கேரட் கண்களுக்கு நல்லது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அதே சமயம் கேரட் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுவும் என்பது தெரியுமா? கேரட்டில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின், கெட்ட கொலஸ்ட்ரால் இரத்தத்தில் நுழைவதைத் தடுக்கிறது.
மேலும் இதில் உள்ள பீட்டா கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இரத்த நாளங்களில் காயங்கள் ஏற்படுவதைக் குறைத்து, இரத்த நாளங்களுக்கு பாதுகாப்பளிக்கின்றன. எனவே கண்கள் மற்றும் இதயம் ஆரோக்கியமாக இருக்க கேரட்டை தினமும் உட்கொண்டு வாருங்கள்.
5. பசலைக்கீரை
பசலைக்கீரையில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் சத்துக்களுஙம், நார்ச்சத்துக்களும் உள்ளன. இவை கொலஸ்ட்ரால் அளவை பெருமளவில் குறைக்க உதவுகின்றன. அதுவும் பசலைக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு லுடீன் ஒரு பாதுகாப்பு முகவராக செயல்படுகிறது. அதுவும் இது கெட்ட கொலஸ்ட்ரால் ஆக்ஸிஜனேற்றமடைவதைத் தடுக்கிறது. இதன் மூலம் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
அதுவும் பசலைக்கீரையில் உள்ள மக்னீசியம், பொட்டாசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை சீராக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. எனவே மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில் பசலைக்கீரையை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications