Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சொன்னா நம்பமாட்டீங்க.. இந்த 5 அறிகுறிகளும் மாரடைப்பின் அறிகுறிகள் தானாம்.. தெரிஞ்சுக்கோங்க..
Heart Attack Symptoms In Tamil: உலகளவில் ஏராளமானோரின் மரணத்திற்கு முக்கிய காரணமாக மாரடைப்பு உள்ளது. ஒருவருக்கு மாரடைப்பானது இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறையும் போது அல்லது தடுக்கப்படும் போது ஏற்படுகிறது. இப்படியான இரத்த ஓட்டம் இரத்தக்குழாயில் கொழுப்பு தேக்கத்தினால் அடைப்பு ஏற்படுவதால் வருகிறது.
பொதுவாக மாரடைப்பு என்றால் நெஞ்சு வலி ஒரு பொதுவான அறிகுறி என்பதை அனைவரும் அறிவோம். அதே வேளையில் மாரடைப்பின் போது சிலருக்கு நெஞ்சு வலி வராமலும் இருக்கும் என்பது தெரியுமா? இது தவிர மாரடைப்பு ஒருவருக்கு ஏற்பட்டால், நம்ப முடியாத அளவில் வேறு சில அறிகுறிகளும் தெரியும். ஆனால் அந்த அறிகுறிகள் பலரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, அசால்ட்டாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

நமது உடலில் எந்த ஒரு பிரச்சனையை தொடர்ந்து சந்தித்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே என்னவென்று கவனியுங்கள். கீழே மாரடைப்பின் சில அசாதாரண அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் உங்களிடம் தெரிந்தால், உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.
1. முழங்கை/கை வலி
இடது கைகளில் வலியை சந்தித்தால், அது மாரடைப்பின் அறிகுறி என்பதை அறிவோம். சில சமயங்களில் அந்த வலி முழங்கை அல்லது வலது கையிலும் உணரலாம். எனவே திடீரென்று கைகளில் கடுமையான வலி, மரத்துப் போதல் அல்லது கூச்ச உணர்வை சந்தித்தால், அதுவும் இந்த அசௌகரியத்தை தொடர்ந்து சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் பெரும்பாலானோர் இதை தசை தொடர்பான பிரச்சனைகளாக கருதி விட்டுவிடலாம்.
ஆனால் இதயத்தின் நரம்புகள் கைகளில் உள்ள நரம்புகளுடன் பாதைகளை பகிர்ந்துகொள்வதால், இப்படியான வலியை சந்திக்க நேரிடுகிறது. எப்போது இதய தசையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறதோ, அப்போது மூளையானது வலி சமிக்ஞைகளைத் தவறாகப் புரிந்துகொண்டு, மார்பில் வலியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக முழங்கை அல்லது கையில் வலியை ஏற்படுத்தும்.
2. வியர்வை
எந்த ஒரு கடுமையான வேலையையும் செய்யாமல், மிகுந்த வியர்வையையும், ஒருவித சூட்டையும் உணர்ந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே கவனிக்க வேண்டும். ஏனெனில் மாரடைப்பின் போது, உடல் அட்ரினலின் என்னும் மன அழுத்த ஹார்மோன்களை வெளியிடச் செய்து, திடீரென்று அதிகப்படியான வியர்வையை வெளியிடத் தூண்டும். இப்படியான வியர்வை சாதாரண வியர்வையில் இருந்து வேறுபட்டிருக்கும். எனவே காரணமின்று திடீரென்று மிகுந்த வியர்வையை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
3. பல் அல்லது தாடை வலி
பற்கள் அல்லது தாடைகளில் வலியை சந்தித்தால், சில நேரங்களில் அது மாரடைப்பின் அமைதியான அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறி பொதுவாக பெண்களிடையே அதிகமாக காணப்படும். இருப்பினும் சில ஆண்களுக்கும் இது தெரியலாம். அதுவும் இதற்கு சிகிச்சை மேற்கொள்கும் பல் வலி அல்லது தாடையில் அசௌகரியம் போன்றவற்றை சந்தித்தால், இதயத்தில் ஏதோ பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது.
4. அசாதாரண உடல் சோர்வு மற்றும் பலவீனம்
எந்த வேலையையும் செய்யாமல் மிகுந்த உடல் சோர்வு அல்லது பலவீனத்தை சந்திக்கிறீர்களா? அப்படியானால் அது மாரடைப்பின் ஆரம்ப கால அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக இது பெண்களிடையே அதிகம் காணப்படும். அதுவும் இந்த சோர்வு சாதாரண உடல் சோர்வில் இருந்து வேறுபட்டிருக்கும். எவ்வளவு ஓய்வு எடுத்தாலும் உடல் சோர்வு நீங்காமல் இன்னும் தான் அதிகரிக்கும். எனவே இந்த அறிகுறியை சந்தித்தாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
5. மூச்சுத் திணறல்
திடீரென்று மூச்சுத் திணறலை சந்திப்பதோடு, போக போக நிலைமை மோசமாகிறதா? அப்படியானால் இதயத்தில் தீவிர பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது என்று அர்த்தம். ஆகவே காரணம் ஏதும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும் போது, இந்த மூச்சுத் திணறலை சந்தித்தால், உஷாராகிக் கொள்ளுங்கள். அத்துடன் தலை பாரம் அல்லது தலைச்சுற்றலையும் சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications