Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
மாரடைப்பு வராமல் இதயம் ஸ்ட்ராங்கா இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை காலை உணவா சாப்பிடுங்க...
Heart Health In Tamil: எப்படியோ கொளுத்தும் கோடையில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில் மழைக்காலம் தொடங்கவுள்ளது. பொதுவாக காலநிலை குளிர்ச்சியாக மாறும் போது, அதன் தாக்கம் நமது உடலில் தெரியும். குறிப்பாக இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி இதயத்தில் அதன் தாக்கம் தெரியும்.
எப்படியெனில் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையில் ஏற்ற இறக்கம் போன்றவை இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்த அழுத்தத்தில் மாறுபாடுகளை ஏற்பட வைக்கும். எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மழைக்காலத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இம்மாதிரியான நிலைமைகள் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற இதய சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

ஆகவே இதய பிரச்சனை, பிபி பிரச்சனை உள்ளவர்கள் மழைக்காலத்தில் தங்களின் உணவில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். முக்கியமாக காலை உணவின் போது பொட்டாசியம், மக்னீசியம், நார்ச்சத்து போன்றவை அடங்கிய உணவுகளை உட்கொள்வதனால் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
அதுவும் ஓட்ஸ், பழங்கள், பச்சை இலைக் காய்கறிகள் போன்றவை உடலில் சோடியத்தின் அளவைக் குறைக்க உதவுவதோடு, உடலில் ஆற்றல் மற்றும் இரத்த சர்க்கரையையும் பராமரிக்க உதவுகின்றன. இப்போது மழைக்காலத்தில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் உதவும் டாப் 5 காலை உணவுகள் என்னவென்பதைக் காண்போம்.
1. ஓட்ஸ் உடன் நற்பதமான பழங்கள்
ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இது இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க உதவுகிறது. கூடுதலாக பழங்களான வாழைப்பழம், பெர்ரி போன்றவற்றில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பெரிதும் உதவும்.
2. யோகர்ட்டுடன் நட்ஸ் மற்றும் விதைகள்
கொழுப்பு குறைவான யோகர்ட்டில் கால்சியம் மற்றும் புரோட்டீன் அதிகமாக உள்ளன.இந்த யோகர்ட்டுடன் பாதாம், சியா விதைகள், ஆளி விதைகள் போன்றவற்றை சேர்க்கும் போது, அவற்றில் உள்ள அதிகப்படியான மக்னீசியம் உடலுக்கு கிடைத்து, இரத்த நாளங்களை தளர்வடைய உதவுகிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி புரிந்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
3. முழு தானிய பிரட்டுடன் அவகேடோ
முழு தானிய பிரட்டில் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளும், புரோட்டீனும் அதிகமாக உள்ளன. கூடுதலாக அத்துடன் சிறிது அவகேடோ பழத்தை சேர்த்து உட்கொள்ளும் போது, அதிகப்படியான நல்ல கொழுப்புக்கள் மற்றும் பொட்டாசியம் போன்றவை கிடைத்து, இரத்த அழுத்தம் கட்டுப்படுவதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும்.
4. பசலைக்கீரை தக்காளி ஆம்லெட்
முட்டையில் புரோட்டீன் அதிகமாகவும், அதே சமயம் பசலைக்கீரை மற்றும் தக்காளியில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளன. இவற்றைக் கொண்டு காலையில் ஒரு ஆம்லெட் தயாரித்து உட்கொண்டு வந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் இரத்த அழுத்தமும் சீரான அளவில் இருக்கும்.
5. ஸ்மூத்தி
பசலைக்கீரை, பெர்ரிப் பழம், வாழைப்பழம், பாதாம் பால் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து ஸ்மூத்தி போன்று தயாரித்தும் காலை உணவின் போது உட்கொள்ளலாம். இப்படி தயாரிப்பதனால் கீரையில் இருந்து மக்னீசியமும், பெர்ரி பழங்களில் இருந்து ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வாழைப்பழத்தில் இருந்து பொட்டாசியமும் கிடைக்கும். இதன் விளைவாக இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











