Latest Updates
-
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...!
உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்க உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட வேண்டிய டாப் 5 உணவுகள்!
Foods To Eat Before Exercise: உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது தான் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். ஆனால் அப்படி உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, வெறும் வயிற்றில் இருக்கக்கூடாது. அதற்காக வயிறு முழுமையாகவும் நிரம்பியிருக்கக்கூடாது. அப்படியானால் வேறு எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடலாம் என்று கேட்கலாம்.
உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, உடலின் இரத்த நாளங்கள் ரிலாக்ஸ் அடைந்து விரிவடைய வேண்டும். அதற்கு உடற்பயிற்சிக்கு முன் சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். இப்படி உட்கொள்வதன் மூலம், உடற்பயிற்சியின் போது இரத்த நாளங்கள் எளிதில் விரிவடைந்து ஆக்ஸிஜன் நிரம்பிய இரத்தம் உடல் முழுவதும் செல்லும்.

இவ்வாறு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் கிடைக்கும் போது, உடற்பயிற்சியினால் சந்திக்கும் உடல் சோர்வு குறையும், தசைகளுக்கு போதுமான இரத்தம் கிடைக்கும் மற்றும் உடற்பயிற்சியை எளிதில் செய்ய முடியும். இப்போது உடலில் இரத்த ஓட்டம் மேம்பட உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள் எவையென்பதைக் காண்போம்.
1. பீட்ரூட் மற்றும் பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் உடலினுள் நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி, இரத்த குழாய்களின் சுவற்றை தளரச் செய்யும். ஆய்வு ஒன்றில், தினமும் ஐந்து அவுன்ஸ் பீட்ரூட் சாறு குடித்தவர்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாள விறைப்பைக் குறைப்பது தெரிய வந்துள்ளது. எனவே தசைக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவும், சகிப்புத்தன்மைக்காகவும், தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடும் முன் பீட்ரூட் ஜூஸை குடியுங்கள்.
2. மாதுளம் பழம்
மாதுளையில் சக்தி வாய்ந்த பாலிஃபீனால் ஆக்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. ஆய்வு ஒன்றில் 1000 மிகி மாதுளை ஜூஸை உடற்பயிற்சி செய்வதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடிக்கும் போது, அது இரத்த நாளங்களை விரிவடையச் செய்வதோடு, ஒட்டுமொத்த உடல் செயல்திறனையும் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே உடற்பயிற்சி செய்யும் முன் மாதுளம் பழ ஜூஸை குடியுங்கள்.
3. தர்பூசணி
தர்பூசணியில் எல்-சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது உடலினுள் அர்ஜினைனாக மாற்றமடைந்து, பின் அது நைட்ரிக் ஆக்ஸைடை உருவாக்குகிறது. இதன் விளைவாக சில மணிநேரங்களிலேயே தமனிகள் தளர்வடைந்து, இரத்த ஓட்டம் உடலில் சிறப்பாக இருக்கும். எனவே இப்படிப்பட்ட தர்பூசணியை உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் சாப்பிடுங்கள்.
4. பச்சை இலை காய்கறிகள்
பசலைக்கீரை, கேல் போன்ற பச்சை இலை காய்கறிகளில் டயட்டரி நைட்ரேட்டுகள் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளன. இந்த நைட்ரேட்டுகள் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, உடலில் ஆக்ஸிஜன் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். எனவே உடற்பயிற்சி செய்வற்கு 1 மணிநேரத்திற்கு முன் இந்த பச்சை இலை காய்கறிகளைக் கொண்டு ஸ்மூத்தியையோ அல்லது சாலட்டையோ சாப்பிடுங்கள்.
5. கொழுப்பு நிறைந்த மீன் மற்றும் வால்நட்ஸ்
சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் வால்நட்ஸ் போன்றவற்றை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் எல்-அர்ஜினைன் போன்றவை அதிகம் உள்ளன. இவை உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியை அதிகரித்து, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே உடற்பயிற்சிக்கு முன் 1 கையளவு வால்நட்ஸ் அல்லது க்ரில் செய்யப்பட்ட சால்மன் மீன் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











