Latest Updates
-
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
உங்க சிறுநீரகங்கள் எப்பவும் சுத்தமா இருக்கணுமா? இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க..
Kidney Detox Foods In Tamil: நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அப்படி தான் நமது உடல் ஆரோக்கியம் இருக்கும். நாம் உண்ணும் உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தில் மற்றும் உறுப்புக்களின் செயல்பாட்டில் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அப்படி நமது உடலில் சுத்தப்படுத்தும் மிகவும் முக்கியமாக உறுப்பு தான் சிறுநீரகம். இந்த சிறுநீரகம் இரத்தத்தை சுத்திகரித்து, சிறுநீர் உருவாகுவதையும், உடலின் வளர்சிதை மாற்ற கழிவுகளை வெளியேற்றுவதையும் உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்யும் சிறுநீரகங்கள் என்ன தான் தன்னைத் தானே சுத்தமாக வைத்துக் கொண்டாலும், உணவில் சில குறிப்பிட்ட உணவுகளைச் சேர்ப்பது சிறுநீரகங்களைச் இன்றும் சிறப்பாகச் சுத்தப்படுத்தவும், அவை சிறப்பாகச் செயல்படவும் உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், சிறப்பாகவும் செயல்பட உதவும் 5 உணவுகள் குறித்து காண்போம்.
1. சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, எலுமிச்சை அல்லது ஆரஞ்சு போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் இருப்பது மட்டுமின்றி நீர்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளதால், நச்சுக்களை திறம்பட வெளியேற்றும். அதுவும் இதில் சிட்ரேட்டுகள் அதிகளவில் இருப்பதால், இது சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கும். மேலும் இது சிறுநீரில் அமில அளவைக் குறைத்து, சிறுநீரகங்களுக்கு நன்மை விளைவிக்கும்.
2. வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த வெள்ளரிக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடல் புத்துணர்ச்சியுடனும், நீரேற்றத்துடனும் இருக்கும். மேலும் வெள்ளரிக்காயில் டையூரிக் விளைவுகள் உள்ளன. எனவே இதை உட்கொள்ளும் போது சிறுநீரக கற்கள் வருவது தடுக்கப்படுவதோடு, சிறுநீரகங்களின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும்.
3. செலரி
செலரி ஒரு கலோரி குறைவான காய்கறி மற்றும் இது ஒரு இயற்கையான சிறுநீர் பெருக்கியாகச் செயல்பட்டு, சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கவும், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் உதவும். எனவே உங்களின் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படவும், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க செலரியை உணவில் அடிக்கடி சேர்த்து வாருங்கள்.
4. தண்ணீர்
சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தண்ணீர் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. எனவே தினமும் தவறாமல் போதுமான அளவு நீரை அருந்துங்கள். இப்படி குடிக்கும் போது உடல் நீரேற்றத்துடனும் இருக்கும், உடலில் இருந்து நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்படும் மற்றும் சிறுநீரகங்களும் இயற்கையாகவே தன்னைத் தானே சரிசெய்ய உதவும். ஆகவே நீரை அதிகம் அருந்துங்கள்.
5. கொழுப்பு நிறைந்த மீன்கள்
சால்மன், டுனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கும். தேசிய சிறுநீரக அறக்கட்டளை மேற்கொண்ட ஆய்வின் படி, ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். பெரும்பாலான சிறுநீரக நோய்களுக்கு ஆபத்து காரணியாக உயர் இரத்த அழுத்தம் உள்ளது. எனவே இந்த உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையாக குறைக்கும் வழிகளை கண்டறிந்து பின்பற்றுவது சிறுநீரங்களை பாதுகாக்க பெரிதும் உதவும்.
எனவே நண்பர்களே, உங்களின் சிறுநீரகங்கள் சுத்தமாகவும், நச்சுக்களின்றியும் இருக்க, மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை தினசரி உணவில் தவறாமல் சேர்த்து வாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











