Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப இதய குழாயில் அடைப்பு இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
Blocked Arteries Symptoms: நமது ஒட்டுமொத்த உடலையும் சீராக இயங்க உதவும் மிகவும் முக்கியமான உறுப்பு தான் இதயம். இந்த இதயம் எவ்வித தடைகளும் இல்லாமல் செயல்பட்டால் தான், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் சத்துக்கள் நிறைந்த இரத்தம் கிடைத்து, உறுப்புகள் சிறப்பாக செயல்படும்.
ஆனால் நம்முடைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கத்தால், இரத்தக்குழாய்களில் கொழுப்புக்கள் தேங்கி, இரத்த ஓட்டத்தை பாதித்து, தீவிர இதய நோய்க்கு வழிவகுக்கிறது. பொதுவாக இதயத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனித்து, சிகிச்சை பெற்று வந்தால், நிலைமை மோசமடைவதைத் தடுக்கலாம்.

ஒருவரது இதயத்தில் பிரச்சனை இருப்பின், உடலானது ஏராளமான எச்சரிக்கை அறிகுறிகளை நமக்கு தெரியப்படுத்தும். அப்படி ஒருவரது இதய இரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தால், இரவு நேரத்தில் தெரியவரும் சில முக்கியமான அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
1. நெஞ்சு வலி அல்லது அழுத்தம்
நெஞ்சு பகுதியில் அடிக்கடி வலியையோ, பாரத்தையோ அல்லது அழுத்தத்தையோ தொடர்ந்து சந்திக்கிறீர்களா? அப்படியானால் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் உடற்பயிற்சி செய்யும் போது வலியை சந்தித்து, ஓய்வு எடுத்த பின் வலி மறைந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
2. தலைச்சுற்றல் அல்லது மயக்கம்
அடிக்கடி தலைச்சுற்றல் அல்லது மயக்கத்தை சந்திக்கிறீர்களா? எப்போது ஒருவரது மூளைக்கு போதுமான இரத்தம் கிடைக்கவில்லையோ, அப்போது தான் இப்படியான நிலையை சந்திக்க நேரிடும். மூளைக்கு தேவையான அளவு இரத்தம் செல்லாமல் இருக்க இரத்த குழாய்களில் உள்ள அடைப்பு காரணமாக இருக்கலாம். எனவே நீங்கள் அடிக்கடி தலைச்சுற்றல் அல்லது மயக்கத்தை சந்தித்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
3. கைகள், கழுத்து அல்லது தாடையில் வலி
நெஞ்சு பகுதியில் வலியை சந்திப்பதோடு, அந்த வலி அப்படியே கைகள், கழுத்து, தாடை போன்ற பகுதிகள் வரை பரவினால், உடனே அதை கவனிக்க வேண்டும். ஏனென்றால் பெரும்பாலும் தமனிகளில் அடைப்புகள் ஏற்பட்டிருந்தால் தான் இப்படியான வலியை சந்திக்க நேரிடும். ஆகவே இந்த மாதிரியான வலியை சந்தித்தாலும், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. மூச்சுவிடுவதில் சிரமம்
லேசாக ஏதாவது ஒரு சிறு வேலை செய்தாலும் அல்லது ஓய்வு நிலையில் இருக்கும் போதும், மூச்சுவிடுவதில் சிரமத்தை சந்திக்கிறீர்களா? அப்படியானால் தமனிகளில் அடைப்பு இருக்க வாய்ப்புள்ளது என்று அர்த்தம். அதுவும் இப்படி மூச்சுத்திணறலை சந்திக்கும் போது, சுவாசிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டால் மற்றும் எந்த ஒரு காரணமும் இல்லாமல் இப்படியான பிரச்சனையை சந்தித்தால், இதயத்தில் தீவிர பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது.
5. விவரிக்கமுடியாத உடல் சோர்வு
நாள்பட்ட உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? அதுவும் எவ்வளவு ஓய்வை எடுத்த பின்னரும், மிகுந்த உடல் களைப்பை சந்திக்கிறீர்களா? அப்படியானால் இரத்த ஓட்டத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதன் அறிகுறியாக இருக்கலாம். எப்போது இதயம் இரத்தத்தை பிற உடலுறுப்புகளுக்கு சரியாக அனுப்பவில்லையோ, அப்போது இப்படியான மிகுந்த உடல் சோர்வை சந்திக்க நேரிடும். எனவே இந்த அறிகுறிளை சந்தித்தாலும், உடனே மருத்துவரை அணுகி விரிவாக எடுத்துக் கூறுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications