Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
எச்சரிக்கை! காலையில் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்ல மாரடைப்பு சீக்கிரம் வந்துடும்...
Worst Breakfast Foods In Tamil: ஒரு நாளில் காலை உணவு மிகவும் முக்கியமான உணவாகும். அதுவும் காலையில் சாப்பிடும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அப்படி ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டால் தான் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் உடலால் முழுமையாக உறிஞ்சப்பட்டு, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால் நாம் காலையில் சாப்பிடும் அனைத்து உணவுகளுமே சத்தானது அல்ல. அதுவும் ஆரோக்கியமானது என்று நினைத்து சாப்பிடும் நிறைய உணவுகள் அமைதியாக உடலில் கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரித்து, மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன.

குறிப்பாக இப்படி இதய ஆரோக்கியத்தை சீரழிக்கும் காலை உணவுகள் வேகமாகவும், எளிதாகவும் செய்யக்கூடிய வகையில் இருக்கும். கீழே உடலில் கொலஸ்ட்ராலை அதிகரித்து, மாரடைப்பு வரும் அபாயத்தை அதிகரிக்கும் சில காலை உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. சர்க்கரை நிறைந்த செரில்கள்
தற்போது மக்கள் காலை வேளையில் சர்க்கரை நிறைந்த செரில்களை உட்கொண்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் இந்த வகையான செரில்களை காலை உணவாக உட்கொள்கின்றனர். தானியங்களில் இருந்து செரில்கள் தயாரிக்கப்பட்டாலும், அவற்றில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையும், செயற்கை சுவையூட்டிகளும் நிறைந்துள்ளன. இவை ட்ரைகிளிசரைடுகளின் அளவை அதிகரித்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கின்றன. இந்த செரில்களை அதிகமாக உட்கொண்டு வந்தால், அவை உடலினுள் அழற்சியை அதிகரித்து, இதய நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே இவற்றை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
2. பாஸ்ட்ரி, டோனட், மஃபின்கள் போன்ற பேக்கரி பொருட்கள்
மஃபின்கள், டோனட் போன்ற பேக்கரி பொருட்கள் காலை உணவுக்கு ஏற்றதாகத் தோன்றலாம். ஆனால் அவை பெரும்பாலும் ஆரோக்கியமற்ற டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவுகளால் நிறைந்துள்ளன. இவற்றை காலை உணவாக தொடர்ந்து எடுக்கும் போது, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
3. பொரித்த உணவுகள்
இந்தியாவில் பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான ஒரு காலை உணவு தான் பூரி. கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் பூரி, எண்ணெயில் பொரிக்கக்கூடியது. ஆனால் இந்த உணவில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சோடியம் அதிகமாக உள்ளன. இந்த பூரியை தொடர்ந்து காலையில் உட்கொண்டு வந்தால், அது இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்து, ஒரு கட்டத்தில் மாரடைப்பையே வரத் தூண்டலாம். எனவே காலை உணவாக பூரியை அதிகம் உண்பதைத் தவிர்த்திடுங்கள்.
4. கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள்
நிறைய பேர் காலை உணவின் போது, ஒரு கப் கொழுப்பு நிறைந்த பாலில் ஒரு துண்டு சீஸ் அல்லது ஒரு ஸ்பூன் கொழுப்பு நிறைந்த க்ரீம் சேர்த்து காபி குடிக்க விரும்புவார்கள். இந்த மாதிரியான காபி மிகவும் சுவையானதாக இருக்கலாம். ஆனால் இவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, மாரடைப்பை வேகமாக வரவழைத்துவிடும்.
5. வெள்ளை பிரட்
நிறைய பேர் காலை உணவாக வெள்ளை பிரட்டை டோஸ்ட் செய்து, ஜாம் தடவி உட்கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்த வெள்ளை பிரட் சுத்திகரிக்கப்பட்ட மைதாவால் தயாரிக்கப்படுகிறது. இதை உட்கொண்டால் இரத்த சர்க்கரை சட்டென்று அதிகரிக்கும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கும். அதோடு இந்த வெள்ளை பிரட்டில் எந்த ஒரு சத்துக்களும் இல்லை, வெற்று கலோரிகளே அதிகம் உள்ளன. எனவே மாரடைப்பு வரக்கூடாதெனில் வெள்ளை பிரட்டை காலை உணவாக உட்கொள்ளாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications