Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
உங்களுக்கு தொண்டை புண்ணாக இருக்கா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க..
Foods For Sore Throat In Tamil: மழைக்காலம் வந்துவிட்டாலே போதும் தொண்டை புண் எல்லாருக்கும் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். தொண்டைப் புண் அதிகமாக இருந்தால் உணவை விழுங்குவதில் ஏராளமான சிரமங்கள் ஏற்படுகிறது. சிலருக்கு எச்சிலை முழுங்குவது கூட கடினமாக இருக்கும்.
தொண்டையில் புண்கள் ஏற்படும் போது எரிச்சல், வலி உணர்வு போன்றவை ஏற்படுகிறது. குரல் வளையை சுற்றி எரிச்சல், சிவந்து போதல், வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது உங்கள் குரலை பாதிப்பதோடு வாயின் பின்புறத்தில் அமைந்துள்ள மென்மையான திசுக்களையும் பாதிக்கிறது.

வாய்த் தொற்றுகள், சுற்றுச் சூழல் காரணிகள் மற்றும் நோய்களால் ஒருவருக்கு தொண்டை புண் ஏற்படலாம். சரி வாங்க இந்த தொண்டை புண்ணை சரிசெய்ய எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிந்து கொள்வோம்.
தொண்டை புண் ஏற்பட முக்கிய காரணங்கள்
சளித் தொல்லை, சின்னம்மை, இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD), தட்டம்மை மற்றும் காய்ச்சல் போன்றவை தொண்டை புண்ணை ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழல் காரணிகளான வறண்ட காற்று, ஒவ்வாமை மற்றும் இராசயனங்கள் போன்ற காற்று மாசுபாடுகளும் ஒருவருக்கு தொண்டை புண்ணை ஏற்படுத்துகிறது.
தொண்டை புண்ணின் அறிகுறிகள்
* தொண்டையில் அரிப்பு மற்றும் எரியும் உணர்வு ஏற்படுதல்
* கரகரப்பான குரல் தோன்றுதல்
* மூக்கு ஒழுகுதல், தும்மல் மற்றும் இருமல் தோன்றுதல்
* விழுங்குவதில் சிரமம்
* காய்ச்சல் மற்றும் தலைவலி
* பசியிழப்பு ஏற்படுதல்
* உடம்பு வலிகள்
* வீங்கிய கழுத்து சுரப்பிகள்
தொண்டை புண்ணை சரிசெய்யும் ஆரோக்கியமான உணவுகள்:
தேன்
தேன் நீண்ட காலமாக மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. தேன் தொண்டை புண்களை குணப்படுத்த உதவுகிறது. தேன் தொண்டையில் உள்ள காயங்களை விரைவில் ஆற்றுகிறது. இது தொற்று நோய்களை தடுக்க உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது இரத்த அழுத்தம் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைக்கிறது. இருமல் போன்றவற்றை குறைக்கிறது.
சிக்கன் சூப்
சிக்கன் சூப்பில் உள்ள பொருட்களில் வைட்டமின் ஏ, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் செலினியம் போன்ற பல்வேறு வகையான ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சிக்கன் சூப்பில் அதிகளவு புரதம் காணப்படுகிறது. இது பாதிக்கப்பட்ட திசுக்களை மீட்க உதவுகிறது.
இந்த சூப் சளி, மூக்கடைப்பு போன்றவற்றை போக்க உதவுகிறது. தொண்டைக்கு இதமாக இருக்கும். தொண்டைப் புண் அறிகுறிகளை குறைக்கிறது. இந்த சிக்கன் சூப் உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், வலுவான எலும்புகள் மற்றும் தசைகளின் மேம்பட்ட வளர்ச்சிக்கு உதவுகிறது.
மாதுளை பழம்
மாதுளை பழத்தில் அழற்சியை குறைக்கும் பண்புகள் உள்ளன. இந்த பழத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள், அஸ்ட்ரிஜெண்ட்கள் உள்ளன. இது தொண்டையை சுற்றியுள்ள திசுக்களை சுருக்கி வீக்கத்தைக் குறைக்கிறது. இதனால் தொண்டை வலியும் குறையும். மாதுளையில் வைட்டமின் கே, வைட்டமின் சி, ஃபோலேட், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் உள்ளன.
ஆப்பிள் சிடார் வினிகர்
ஆப்பிள் சிடார் வினிகரில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இது தொண்டை புண்ணை ஆற்ற கூடியது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆப்பிள் சிடார் வினிகர் எடை இழப்பு, கொழுப்பின் அளவை குறைத்தல், நீரிழிவு அறிகுறிகளை மேம்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவை குறைத்தல், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், தொண்டை புண்ணை சரி செய்தல் போன்ற பலவித பணிகளை செய்கிறது.
மசித்த உருளைக்கிழங்கு
உங்களுக்கு தொண்டை வலி இருக்கும் சமயத்தில் எளிதில் விழுங்கக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்து சாப்பிடலாம். இது உங்கள் தொண்டை வலியை ஆற்ற உதவுகிறது.
மசித்த உருளைக்கிழங்கில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்கள், தாதுக்கள், மெக்னீசியம், வைட்டமின் சி, நியாசின், மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் ஃபோலேட் போன்ற வைட்டமின்கள் உள்ளன. இவை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், தொற்று நோய்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. உருளைக்கிழங்கு பொதுவாக இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











