Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 2 பழக்கங்கள் உங்களின் விதியையே மாற்றும் சக்தி உள்ளவையாம் - என்னென்ன பழக்கங்கள் தெரியுமா -
வெங்காய சாறு Vs பூண்டு எண்ணெய் - இவற்றில் தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்தது எது? -
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
ஜூன் மாதம் இந்த 5 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்க போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகள் இருந்தா… பணவரவு அதிகரிப்பதோடு ஆரோக்கியமும் கூடும், தெரியுமா? -
100 மனைவிகளுக்கு மேல் வைத்திருந்த மன்னர்களின் லிஸ்ட் - எந்தெந்த இந்திய ராஜாக்கள் இதில் இருக்கிறார்கள் தெரியுமா -
வீட்டுல முருங்கைக்காய் இருந்தா.. இப்படி ஒருடைம் ரசம் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க எல்லோரையும் மயக்கும் வசீகரம் கொண்டவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மழைக்காலத்தில் பணவரவு குறையாமல் இருக்கணுமா? மணி பிளாண்ட் வைப்பதில் இந்தத் தவறுகளை மட்டும் செய்யாதீங்க! -
உடல் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப உணவியல் நிபுணர் சொல்ற இந்த 6 பானங்களை காலையில் குடிங்க..
மூட்டு வலி பாடாய் படுத்துதா? அப்ப இந்த 5 உணவுகளை தினமும் சாப்பிடுங்க...
Joint Pain In Winter: தற்போது குளிர்காலம் என்பதால் ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் கடுமையான மூட்டு வலியை அதிகம் சந்திப்பார்கள். சொல்லப்போனால் மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் தான் மூட்டு வலி தீவிரமாக இருக்கும்.
இதற்கு காரணம் மிகவும் குளிர்ச்சியான காலநிலை தான் காரணம். இதனால் உடலில் தசைகள் அல்லது திசுக்கள் இறுக்கமடைகிறது, உடலில் இரத்த ஓட்டம் குறைகிறது, மூட்டுக்களில் உள்ள திரவம் தடிமனாகிறது மற்றும் நரம்பு உணர்திறன் அதிகரிக்கிறது. இதன் விளைவாக நிறைய வலியை அனுபவிக்க நேரிடுகிறது.

ஆனால் இந்த குளிர்காலத்தில் ஒருசில அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், அது மூட்டுக்களில் உள்ள அழற்சியை இயற்கையாகவே எதிர்த்து போராடி, மூட்டு வலியைக் குறைப்பதோடு, சிறந்த மூட்டு இயக்கம், நெகிழ்வுத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த மூட்டு ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இப்போது அந்த உணவுகள் எவையென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. கொழுப்புமிக்க மீன்
சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி மற்றும் சூரை மீன்கள் போன்றவை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த கொழுப்பு மீன்களாகும். இந்த வகை கொழுப்புக்கள் உடலில் உள்ள அழற்சியின் அளவைக் குறைப்பதோடு, மூட்டு வலி, விறைப்பு போன்றவற்றை குறைக்கும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மூட்டுகளுக்குத் தலையணை போல் செயல்படும் குருத்தெலும்பைப் பாதுகாக்கவும் உதவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே குளிர்காலத்தில் மூட்டு வலியைக் குறைக்க விரும்பினால், வாரத்திற்கு 2-3 முறை கொழுப்புமிக்க மீனை உட்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் மீன் சாப்பிடமாட்டீர்களானால், ஒமேகா-3 சப்ளிமெண்ட்டுகளை உட்கொள்ளுங்கள்.
2. மஞ்சள்
மஞ்சள் மருத்துவ பண்புகள் அதிகம் நிறைந்த ஒரு மசாலா. இதில் உள்ள குர்குமின், ஒரு வலுவான அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றப் பண்புகளைக் கொண்டுள்ளது. குர்குமின் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கிறது, குறிப்பாக கீல்வாதம் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இந்த மஞ்சளை குளிர்காலத்தில் முடிந்தவரை அனைத்து உணவுகளிலும் சேர்த்து சாப்பிடுங்கள். இன்னும் சிறப்பான பலனைப் பெற தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடியுங்கள்.
3. இஞ்சி
மூட்டு வலியைக் குறைக்க உதவும் மற்றொரு உணவுப் பொருள் தான் இஞ்சி. இந்த இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால்கள் உடலில் அழற்சியைத் தூண்டும் கூறுகளைத் தடுக்கிறது. இதனால் இது தசை வலி மற்றும் இறுக்கத்தைப் போக்கவும் உதவுகிறது. எனவே இப்படிப்பட்ட இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்து தினமும் குடிக்கலாம் அல்லது தினசரி உணவில் சேர்த்தும் வரலாம்.
4. பச்சை இலை காய்கறிகள்
பசலைக்கீரை, கேல், ப்ராக்கோலி, வெந்தயக்கீரை போன்ற பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. இந்த சத்துக்கள் உடலில் உள்ள அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் ஒட்டுமொத்த எலும்புகள் மற்றும் மூட்டுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே குளிர்காலத்தில் இந்த பச்சை இலை காய்கறிகளை உணவில் சற்று அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
5. நட்ஸ் மற்றும் விதைகள்
நட்ஸ்கள் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. எனவே பாதாம், வால்நட்ஸ், ஆளி விதைகள், சியா விதைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். அதுவும் வால்நட்ஸ், ஆளி விதைகள் போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளன. ஆகவே இவ்விரண்டையும் சற்று கூடுதலாக உட்கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications