Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
Year Ender 2022: இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீட்டு வைத்தியங்கள் என்னென்ன தெரியுமா?
2022 ஆம் ஆண்டில் மக்கள் எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்த வீட்டு வைத்தியங்களை அதிகம் கூகுளில் தேடியுள்ளார்கள் என்பதை இப்போது காண்போம்.
Year Ender 2022: கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா என்னும் கொடிய வைரஸின் பிடியில் சிக்கி வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தோம். இந்த காலகட்டத்தில் கொரோனாவானது நமக்கு இரண்டு விஷயங்களை கற்றுக் கொடுத்தது. அதில் ஒன்று தூய்மையாக இருப்பது; மற்றொன்று நோயெதிர்ப்பு சக்தியை எப்படி வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே அதிகரிப்பது. என்ன தான் கொரோனா பரவலால் வீட்டிலேயே இருந்தாலும், நம் மனதில் எழும் பல கேள்விகளுக்கான விடையை கூகுளில் தேடி பெற்றுக்கொண்டோம்.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். 2022 ஆம் ஆண்டில் தான் நிம்மதியாக வீட்டை விட்டு வெளியே வர ஆரம்பித்தோம். என்ன தான் வெளியே வர முடிந்தாலும், மக்கள் இயற்கை வைத்தியங்களின் அருமையை புரிந்து, அவற்றை அதிகம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இப்போது 2022 ஆம் ஆண்டில் மக்கள் எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்த வீட்டு வைத்தியங்களை அதிகம் கூகுளில் தேடியுள்ளார்கள் என்பதை இப்போது காண்போம்.

மலச்சிக்கல்
2022 ஆம் ஆண்டில் மக்கள் கூகுளில் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான வீட்டு வைத்தியத்தைப் பற்றி தேடியுள்ளனர். மலச்சிக்கலைப் போக்குவதற்கு நார்ச்சத்துள்ள பழங்களான கொய்யா, வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. மேலும் இஞ்சி டீ குடிப்பதும் நன்மை பயக்கும்.

சளி, இருமல்
குளிர்காலத்தில் சளி, இருமல் பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். அதுவும் கொரோனா வந்த பின்னர் சளி, இருமல் பிரச்சனையைக் கண்டு பலரும் அச்சம் கொள்கிறார்கள். அதனால் சளி, இருமல் பிரச்சனையை போக்கும் இயற்கை வைத்தியங்கள் குறித்து அதிக தேடியுள்ளனர். சளி, இருமலுக்கு இஞ்சி கசாயம் நல்ல பலனைத் தருவதாக கூறப்படுகிறது.

எடை இழப்பு
இந்தியாவில் பெரும்பாலானோர் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். இந்த உடல் பருமனைக் குறைக்க பலர் ஜிம்மிற்கு சென்றாலும், நிறைய பேர் தங்கள் உடல் எடையைக் குறைக்க இயற்கை வைத்தியங்களை பின்பற்ற விரும்புகிறார்கள். எனவே 2022 ஆம் ஆண்டில் உடல் எடையைக் குறைக்கும் இயற்கை வைத்தியங்களைப் பற்றி மக்கள் அதிகம் கூகுளில் தேடியுள்ளனர். க்ரீன் டீ, பூண்டு, கறிவேப்பிலை போன்றவற்றை வெறும் வயிற்றில் உட்கொண்டால், எடையில் மாற்றம் தெரியும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது
2022 ஆம் ஆண்டில் மக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மஞ்சள் பால் தயாரிப்பது எப்படி மற்றும் எப்போது குடிக்க வேண்டும், துளசி கசாயம் தயாரிப்பது எப்படி, மிளகு துளசி கசாயம் எப்படி தயாரிப்பது என்பனவற்றை அதிகம் கூகுளில் தேடியுள்ளனர்.

தலைமுடி உதிர்வு
உடல் பருமனுக்கு அடுத்தபடியாக மக்கள் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனை தான் தலைமுடி உதிர்வு. இந்த தலைமுடி உதிர்வைக் குறைப்பது குறித்த இயற்கை வைத்தியங்களை 2022-ல் மக்கள் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.

வயிற்றுப்போக்கு
2022-ல் ம்க்கள் கூகுளில் அதிகம் எந்த பிரச்சனைக்கு இயற்கை வைத்தியங்களை தேடியுள்ளனர் என்றால், அது வயிற்றுப்போக்கு. உடலில் நீர்ச்சத்து குறைவதால் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் வயிற்றுப்போக்கு. இந்த பிரச்சனையை சந்தித்தால் கசகசாவை அரைத்து, மாட்டுப்பாலில் கலந்து குடிக்கலாம்.



Click it and Unblock the Notifications
