Latest Updates
-
ஜூலை 24-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 3 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது.. -
Aadi Month Horoscope 2026:ஆடி மாதம் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் மாதமாக இருக்கப்போகுதாம் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு மஞ்சள் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப சுய ஒழுக்கமுள்ளவர்களாம் - வெற்றியும், செல்வமும் இவர்களை தேடிவருமாம் - உங்க ராசி என்ன -
Aadi 2026: ஆடி முதல் நாளில் அம்மன் வழிபாடு செய்வது எப்படி? - விளக்கும் தேச மங்கையர்கரசி! -
முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் நேபாளத்தின் மீது படையெடுக்க ஏன் பயந்தார்கள் தெரியுமா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க... -
இந்தியாவில் நாம் பயன்படுத்தும் இந்த எண்ணெய் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டதாம் - காரணம் என்ன தெரியுமா? -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் ஆடி கும்மாயம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
ராகு-கேதுவின் அரிய கிரக சேர்க்கை இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்கஷ்டத்தை கொடுக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன?
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
நமது வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களே நமது வாயில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க உதவும். கீழே வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்ல வைக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை பற்களைத் துலக்கியும், உங்கள் வாயில் துர்நாற்றம் வீசுகிறதா? இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் வாய் துர்நாற்றம். இந்த வாய் துர்நாற்றமானது ஒருவரது தன்னம்பிக்கையைக் குறைக்கும் என்பது தெரியுமா? வாய் துர்நாற்ற பிரச்சனையை சந்திக்கும் பலர் மற்றவர்களின் அருகில் சென்று பேச கூட சங்கடப்படுவார்கள். ஏன் தங்கள் வாழ்க்கை துணைக்கு ஒரு முத்தம் கூட கொடுக்க யோசிப்பார்கள்.

வாய் துர்நாற்றத்திற்கான பொதுவான காரணங்கள் நாக்கில் உள்ள வெள்ளைப் படலம், பல் சொத்தை, ஈறு நோய்கள் மற்றும் போதுமான வாய் சுகாதாரம் இல்லாமை போன்றவையாகும். இந்த வாய் துர்நாற்ற பிரச்சனையைத் தடுக்க தற்போது பல்வேறு வாய் பராமரிப்பு பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த பொருட்களில் கெமிக்கல்கள் இருப்பதால், சிலருக்கு இந்த பொருட்கள் சேராமல் இருக்கலாம். ஆனால் நமது வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களே நமது வாயில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க உதவும். கீழே வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்ல வைக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தண்ணீர்
ஒருவர் போதுமான அளவு நீரை அருந்தாமல் இருக்கும் போது, வாய் வறட்சி ஏற்பட்டு, வாயில் துர்நாற்றம் வீசத் தொடங்கும். எனவே நீங்கள் உங்கள் வாய் துர்நாற்றமின்றி இருக்க நினைத்தால், தினமும் நிறைய தண்ணீரைக் குடிக்க வேண்டும். தண்ணீரை அதிகம் குடிங்கும் போது, வாய் வறட்சி தடுக்கப்பட்டு, வாயும் ஆரோக்கியமாக பராமரிக்கப்பட்டு, வாய் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

தயிர்
தயிரில் நன்மை விளைவிக்கும் லேக்டோபேசில்லஸ் என்னும் பாக்டீரியா காணப்படுகிறது. இந்த ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் வயிற்றுக்கு வெளியே உள்ள கிருமிகளை விரட்ட உதவுகிறது. ஆனால் நீங்கள் சாப்பிடும் தயிரில் சர்க்கரை எதுவும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எனவே நீங்கள் உங்கள் வாய் துர்நாற்றத்தை தடுக்க நினைத்தால், தினமும் ஒரு கப் தயிரை சாப்பிடுங்கள்.

சோம்பு
சோம்பில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளுடன் நறுமணமிக்க அத்தியாவசிய எண்ணெய்களும் உள்ளன. எனவே சோம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடும் போது, அது வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. முக்கியமாக சோம்பானது எச்சில் உற்பத்தியை அதிகரித்து, வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. ஆகவே உங்கள் துர்நாற்றத்தை தடுக்க நினைத்தால், தினமும் சிறிது சோம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள்.

கிராம்பு
கிராம்பு நறுமணமிக்க மசாலா பொருட்களுள் ஒன்றாகும். இது சுவாசத்தை புத்துணர்ச்சியூட்ட உதவுவதோடு, பல் சொத்தையை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதற்கு ஒரு கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இப்படி செய்யும் போது, அது வாய் துர்நாற்றத்தை உடனடியாக போக்கும். தினமும் கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், படிப்படியாக வாய் துர்நாற்ற பிரச்சனையானது நீங்கும்.

க்ரீன் டீ
க்ரீன் டீ உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் சத்துக்களைக் கொண்டது. குறிப்பாக க்ரீன் டீ வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆய்வுகளின் படி, க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பல விஷயங்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. குறிப்பாக க்ரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் வாய் துர்நாற்றத்தை உருவாக்கும் கிருமிகள் மற்றும் சல்பர் பொருட்களைக் குறைக்கின்றன. எனவே நீங்கள் வாய் துர்நாற்ற பிரச்சனையை சந்தித்து வந்தால், க்ரீன் டீயை தினமும் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

நாக்கை சுத்தம் செய்வது
தினமும் பற்களைத் துலக்குவதனால் மட்டும் வாய் துர்நாற்றத்தை தடுக்க முடியாது. பற்களைத் துலக்குவது போன்றே நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். சொல்லப்போனால் நாக்கில் படியும் வெள்ளை படலத்தை நீக்காமல் இருப்பதனாலும், வாய் துர்நாற்றம் வீசும். எனவே வாய் துர்நாற்றத்தைத் தடுக்க தினமும் நாக்கை சுத்தம் செய்யும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications