2023-ல் உங்க ஆரோக்கியம் சிறப்பா இருக்கணுமா? அப்ப இந்த பழக்கங்களை வெச்சுக்கோங்க...

2023 ஆம் ஆண்டில் உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், அதற்கு ஒருசில உறுதிமொழிகளை எடுங்கள். கீழே 2023ல் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க எடுக்க வேண்டிய சில உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

New Year 2023 Health Resolutions: 2023 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். நாம் ஒவ்வொரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டில் ஒருசில உறுதிமொழிகளை எடுப்போம். அந்த உறுதிமொழிகள் வேலை தொடர்பானதாக இருக்கலாம் அல்லது ஒருவரின் பழக்கவழக்கங்கள் தொடர்பானதாக இருக்கலாம். எதுவாயினும் தற்போதைய சூழ்நிலையில் நாம் முதலில் நமது ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு கொடிய வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். அந்த வைரஸ் தொற்றிற்கு பின் ஏராளமான மக்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறையை காட்டி வருகிறார்கள்.

New Year 2023 Health Resolutions In Tamil

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், அதற்கு ஒருசில உறுதிமொழிகளை எடுங்கள். கீழே 2023 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க எடுக்க வேண்டிய சில எளிய உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தமில்லாத வாழ்க்கை

மன அழுத்தமில்லாத வாழ்க்கை

இன்று பெரும்பாலானோருக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? மன அழுத்தம் தான். ஏனெனில் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது, கட்டுப்பாடின்றி அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம். அப்படி தினமும் கட்டுப்பாடின்றி அதிகமாக சாப்பிடும் போது, அதன் விளைவாக தொப்பை வருகிறது. இது தவிர மன அழுத்தம் ஒருவரின் மன அமைதியைக் கெடுத்து, பல மோசமான எண்ணங்களை மனதில் உருவாக்கி, ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் சீர்குலைக்கும். எனவே இந்த 2023 புத்தாண்டில் மன அழுத்தத்தில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்வோம் என்று உறுதி எடுப்போம்.

டிவி, மொபைல் நேரத்தைக் குறைப்போம்

டிவி, மொபைல் நேரத்தைக் குறைப்போம்

தற்போதைய நவீன உலகில் டிவி, மொபைல், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் இருந்து விலகி இருப்பது என்பது மிகவும் கடினம். ஆனால் இவற்றை பயன்படுத்தும் நேரத்தை நம்மால் குறைக்க முடியும் அல்லவா? எனவே இந்த 2023 புத்தாண்டில் இருந்து இந்த கேட்ஜெட்டுகளுன் அதிக நேரத்தை செலவிடுவதைக் குறைத்து, குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடுவோம் என்று உறுதிமொழி எடுப்போம். இதனால் உறவுகள் வலுவாவதோடு, மனமும் ரிலாக்ஸாக இருக்கும்.

யோகா

யோகா

தற்போதைய பரபரபப்பான உலகில் நாம் அனைத்து இடங்களிலும் இருக்கிறோம். ஆனால் நம்மால் அனைத்திலும் ஈடுபட முடிவதில்லை. ஏனெனில் நாம் எப்போதும் நமது எதிர்காலம் அல்லது வேறு ஏதாவது விஷயங்களைப் பற்றி யோசித்தக் கொண்டே இருப்போம். இது ஒரு நல்ல விஷயமல்ல. இதைத் தவிர்க்க ஒரு சிறந்த வழி தினமும் யோகா செய்வது தான். யோகாவை தினமும் காலையில் சிறிது நேரம் செய்வதன் மூலம் நமது மனம் ஒருநிலைப்படுத்தப்படும், எதிலும் நன்கு கவனம் செலுத்த முடியும். மொத்தத்தில் மனநிலை எப்போதும் சிறப்பாக இருக்கும். இது தவிர யோகாவை தினமும் செய்து வந்தால், நாள்பட்ட பல நோய்களை நிர்வகிக்க முடியும். எனவே தினமும் யோகா செய்வோம் என்று உறுதி எடுப்போம்.

கண்ட டயட்டுகளை பின்பற்றுவதைத் தவிர்க்கவும்

கண்ட டயட்டுகளை பின்பற்றுவதைத் தவிர்க்கவும்

தற்போது உடல் எடையைக் குறைக்க உதவும் ஏராளமான டயட்டுகள் உள்ளன. அவற்றில் சில டயட்டுகள் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய எடை இழப்புக்கு உதவி புரியும். ஆனால் அப்படிப்பட்ட டயட்டுகள் தற்காலிக பலனைத் தருவதோடு, சில நாட்களுக்கு பிறகு அது ஊட்டச்சத்து குறைபாடு, உடல் பலவீனம், உடல் வறட்சி மற்றும் மனநிலை மாற்றங்களை கூட ஏற்படுத்தலாம். எனவே உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், தினமும் கொழுப்புக்கள் இல்லாத போதுமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளுடன், தினசரி உடற்பயிற்சியில் தவறாமல் ஈடுபட்டு வந்தாலே, உடல் எடையை ஒரு குறிப்பிட்ட காலத்தில் இயற்கையாகவே குறைக்க முடியும். எனவே உடனடி முடிவுகளைத் தரும் டயட்டுகளை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு எடையைக் குறைப்போம் என்று உறுதி எடுங்கள்.

புதிய பொழுதுபோக்கை கற்போம்

புதிய பொழுதுபோக்கை கற்போம்

முன்பெல்லாம் ஒவ்வொருவருக்கும் ஓய்வு நேரத்தில் செய்வதற்கு என்று ஒரு விருப்பமான பொழுதுபோக்கு இருக்கும். உதாரணமாக, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, விளையாடுவது என்று இருக்கும். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு பொழுதுபோக்கு என்ற ஒன்றே இல்லை. ஓய்வு நேரத்தில் கையில் போனை எடுத்தால், நேரம் கூட தெரியாமல் அந்த போனுடன் நீண்ட நேரம் கழிப்பார்கள். இது முற்றிலும் மோசமான ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் ஒரு பழக்கம். உங்களுக்கு இதுவரை எந்த ஒரு பொழுதுபோக்கும் இல்லாவிட்டால், 2023-ல் எழுதுவது, உடற்பயிற்சி செய்வது, தோட்டம் அமைப்பது, விருப்பமான விளையாட்டுக்களை விளையாடுவது என்று ஏதாவது ஒரு பொழுதுபோக்கை தொடர உறுதிமொழி எடுப்போம். இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, மன ஆரோக்கியத்திற்கும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, December 29, 2022, 12:51 [IST]
Desktop Bottom Promotion