Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
ஆண்கள் சந்திக்கும் முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனைக்கான சில நாட்டு வைத்தியங்கள்!
ஆண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளில் ஒன்று தான் முன்கூட்டிய விந்து வெளியேற்றம். இப்போது ஆண்கள் சந்திக்கும் முன்கூட்டிய விந்து வெளியேற்ற பிரச்சனைக்கான சில நாட்டு வைத்தியங்களைக் காண்போம்.
ஆண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளில் ஒன்று தான் முன்கூட்டிய விந்து வெளியேற்றம். இந்த பிரச்சனையைக் கொண்டவர்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபடும் போது, உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிப்பதற்கு முன்னரோ அல்லது உடலுறவில் ஈடுபட்ட சில நொடிகளிலோ விந்து வெளியேறிவிடும். இப்பிரச்சனை உள்ள ஆண்களால் தங்கள் துணையை திருப்திபடுத்த முடியாமல் போகும். 40 வயதிற்குட்பட்ட ஆண்கள் இந்த பிரச்சனையை சந்திக்கும் போது, தங்களின் வாழ்க்கை முடிந்துவிட்டதாக தவறாக நினைத்து, துணையுடனான உறவை முறித்துக் கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இப்படி விந்து சீக்கிரம் வெளியேறுவதை தடுத்து நிறுத்த பல்வேறு வழிகள் உள்ளன.

முதலில் உங்கள் துணையுடன் இந்த பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசுங்கள். பின் மருத்துவரை அணுகி அதற்கேற்ப சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். இல்லாவிட்டால் ஒருசில இயற்கை வழிகளையும் மேற்கொள்ளலாம். ஆனால் இயற்கை வழிகளை மேற்கொள்ளும் போது, அதனால் பெறும் முடிவுகள் உடனடியாக தெரியாவிட்டாலும், படிப்படியாக முன்னேற்றத்தைக் காண முடியும். இப்போது ஆண்கள் சந்திக்கும் முன்கூட்டிய விந்து வெளியேற்ற பிரச்சனைக்கான சில நாட்டு வைத்தியங்களைக் காண்போம்.

வெங்காய விதை
முன்கூட்டிய விந்து வெளியேற்ற பிரச்சனையைக் கொண்ட ஆண்களுக்கு வெங்காய விதை நல்லது. ஏனெனில் இந்த வெங்காய விதைகளில் உள்ள பாலுணர்வூட்டும் பண்புகள், பாலியல் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுவதோடு, முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனைக்கு குட்-பை சொல்ல வைக்கும். அதற்கு வெங்காய விதைகளை கையால் நசுக்கி, நீரில் போட்டு, அந்நீரைக் குடிக்க வேண்டும். அதுவும் இப்படி தினமும் மூன்று வேளை உணவு உண்பதற்கு முன்பும் உட்கொள்ள வேண்டும். இதனால் அது உடலின் ஸ்டாமினாவையும், கட்டுப்பாட்டையும் மேம்படுத்தும்.

அஸ்வகந்தா
பாலியல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும் ஒரு நாட்டு மருந்து பொருள் தான் அஸ்வகந்தா. குறிப்பாக இது முன்கூட்டிய விந்து வெளியேற்ற பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. எனவே இப்பிரச்சனை உள்ள ஆண்கள் ஆயுர்வேத மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரைப்பது போன்று இந்த அஸ்வகந்தாவை உட்கொள்ளுங்கள். இது ஆணுறுப்பின் வலிமையை அதிகரிப்பதோடு, ஸ்டாமினா மற்றும் கட்டுப்பாட்டையும் அதிகரிக்கிறது. பாலியல் பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் ஒரு டீஸ்பூன் அஸ்வகந்தா பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் சேர்த்து, சுவைக்கேற்ப தேன் கலந்து குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சி மற்றும் தேன்
முன்கூட்டிய விந்து வெளியேற்ற பிரச்சனைக்கான மற்றொரு அற்புதமான பொருள் தான் இஞ்சி தேன். இதில் இஞ்சி ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, விந்து வெளியேறுவதற்கு ஒரு கட்டுப்பாட்டை வழங்க உதவுகிறது. மறுபுறம் தேன் மருத்துவ குணம் நிறைந்த அற்புதமான பொருள். தேனுடன் இஞ்சியை எடுக்கும் போது, அது இஞ்சியின் ஆற்றலை அதிகரிக்கிறது. அதற்கு 1/2 டீஸ்பூன் துருவிய இஞ்சி மற்றும் தேனை இரவு தூங்கும் முன் சாப்பிட வேண்டும். இப்படி தினமும் உட்கொண்டு வந்தால், ஒரு நல்ல பலனை விரைவில் காணலாம்.

பூண்டு
ஆண்களின் பாலியல் பிரச்சனைக்கான மற்றொரு மருந்துப் பொருள் தான் பூண்டு. இந்த பூண்டு ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதாடு, உடலின் வெப்பத்தையும் அதிகரிக்க உதவுகிறது. அதற்கு 3 துண்டுகள் பூண்டு பற்களை எடுத்து சுத்தமான பசு நெய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதை உட்கொள்ள வேண்டும். இப்படி தினமும் உட்கொண்டு வந்தால், முன்கூட்டிய விந்து வெளியேறும் பிரச்சனை மட்டுமின்றி, விறைப்புத்தன்மை பிரச்சனைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

முட்டை, கேரட் மற்றும் தேன்
முட்டை, தேன் மற்றும் கேரட் ஆகிய மூன்றும் ஆண்களின் பாலியல் பிரச்சனையை சரிசெய்ய உதவும். அதற்கு பாதி வேக வைத்த ஒரு முட்டையை எடுத்து, அத்துடன் துருவிய கேரட் மற்றும் இதன் மேல் தேன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இப்படி தினமும் என மூன்று மாதம் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பட்டை
நமது சமையலறையில் உள்ள நல்ல மணம் மற்றும் மருத்துவ பண்புகளை அதிகம் கொண்ட ஒரு மசாலா பொருள் தான் பட்டை. இந்த பட்டை ஆண்கள் சந்திக்கும் முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையைத் தடுக்க உதவும். அதற்கு நீரில் பட்டைத் தூளை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். அதுவும் தினமும் உணவு உண்ட பின் இரண்டு வேளை உட்கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications