Latest Updates
-
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க..
படுக்கையில் நீண்ட நேரம் இன்பத்தை அனுபவிக்கணுமா? அப்ப தேனை இந்த மாதிரி சாப்பிடுங்க...
தேன் ஒருவரது பாலியல் வாழ்க்கை மேம்படுத்த உதவும் என்பது தெரியுமா? அதுவும் நீண்ட நேரம் படுக்கையில் இன்பத்தை அனுபவிக்க தேன் உதவி புரியும் என்பது தெரியுமா?
இயற்கை நமக்கு தந்த ஒரு வரப்பிரசாதம் தான் தேன். இந்த தேன் தேனீக்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தேன் ஏராளமான சத்துக்களை தன்னுள் கொண்டது. அதனால் தான் இது மருத்துவத்திலும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தேன் ஒருவரது பாலியல் வாழ்க்கை மேம்படுத்த உதவும் என்பது தெரியுமா? அதுவும் நீண்ட நேரம் படுக்கையில் இன்பத்தை அனுபவிக்க தேன் உதவி புரியும் என்பது தெரியுமா?

குறிப்பாக பாலுணர்வைத் தூண்டும் பூக்களான மரிக்கொழுந்து மற்றும் மல்லிகையில் இருந்து தேன் சேகரிக்கும் தேனீக்கள் நல்ல வலுவான தேனை உற்பத்தி செய்கின்றன. மேலும் தேனானது நீண்ட காலமாக பாலுணர்வை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேன் ஆண்களுக்கு நன்மைகளை வழங்குமா என்று கேட்டால், ஆம் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் தேனானது ஆண்களின் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த பலவாறு உதவி புரிகின்றன. இப்போது தேன் எப்படி ஆண்களின் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துகிறது மற்றும் தேனை எப்படி உட்கொள்ளலாம் என்பதைக் காண்போம்.

தேன் வழங்கும் நன்மைகள்
தேன் உடலுக்கு பல வழிகளில் நன்மைகளை வழங்குகிறது. அதில் நல்ல செரிமானம், எலும்புகள் மற்றும் தசைகளின் அடர்த்தியை அதிகரிப்பது உட்பட பலவாறு உடலுக்கு நன்மை அளிக்கிறது. மேலும் தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புற்றுநோய், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கின்றன. முக்கியமாக தேனில் உள்ள போரான், வைட்டமின் பி, நைட்ரிக் ஆக்ஸைடு, இயற்கை சர்க்கரை மற்றும் பல உட்பொருட்கள், உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கின்றன, டெஸ்டோஸ்டிரோன் அளவை உயர்த்துகின்றன மற்றும் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகின்றன. கூடுதலாக தேனானது படுக்கையில் நீண்ட நேரம் இன்பத்தை அனுபவிக்க உதவுகிறது.
இப்போது படுக்கையில் சிறப்பாக செயல்படவும், நீண்ட நேரம் இன்பத்தை அனுபவிக்கவும் தேனை எப்படியெல்லாம் உட்கொள்ளலாம் என்பதைக் காண்போம்.

தேன் மற்றும் வெதுவெதுப்பான நீர்
உடலில் கொழுப்புக்கள் அதிகமாக இருந்தால், உடலுறவில் நீண்ட நேரம் இன்பத்தை அனுபவிக்க முடியாது. வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்கும் போது, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்கப்படுகின்றன. இது தவிர, இந்த நீர் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகின்றன.

தேன் மற்றும் பால்
தேனில் வைட்டமின் பி, போரான் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. அதேப்போல் பாலில் கால்சியம், வைட்டமின் டி மற்றும் புரோட்டீன்கள் அதிகம் உள்ளன. ஆகவே இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து குடிக்கும் போது, உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலுக்கு கிடைத்து, உடல் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தேன் டீ
பொதுவாக மன அழுத்தம் மற்றும் டென்சனாக இருக்கும் போது, உடலில் மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரித்து, உடலுறவின் போது சிறப்பாக செயல்படத் தேவையான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவைக் குறைத்துவிடும். அதுவே டென்சனாக இருக்கும் போது ஒரு கப் டீ குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் மனதை சாந்தப்படுத்தும். அதுவும் அந்த டீயுடன் தேன் சேர்த்து குடிக்கும் போது, உடல் மட்டுமின்றி, மனதும் ரிலாக்ஸ் ஆகிறது. இதன் விளைவாக உடலுறவில் சிறப்பாக ஈடுபட முடியும்.

தேன் கலந்த எலுமிச்சை நீர்
கடுமையான உடற்பயிற்சிக்கு பின் அல்லது நீண்ட நேர வேலைக்கு பின், உடலில் உள்ள ஆற்றலானது குறைந்திருக்கும். இந்நிலையில் தேன் கலந்த எலுமிச்சை நீரைக் குடிக்கும் போது, அது தசைகளில் உள்ள காயங்களை சரிசெய்ய உதவுவதோடு, உடலுக்கு உடனடி ஆற்றலும் கிடைக்கும்.

தேன் கலந்த ஐஸ் டீ
இன்று நிறைய பேர் ஐஸ் டீயை விரும்பி குடிக்கிறார்கள். குறிப்பாக கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான சிறந்த வழிகளுள் ஒன்று தேன் கலந்த ஐஸ் டீ குடிப்பது தான். இந்த டீ உடலில் ஆரோக்கியமான ஹார்மோன்களின் அளவை மேம்படுத்துவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.
அதற்காக ஒரே வேளையில் ஒரு பாட்டில் தேனை உட்கொள்ள வேண்டாம். இல்லாவிட்டால், உடல் பருமனாவதோடு, இரத்த சர்க்கரை அளவும் அதிகரித்துவிடும். எனவே உங்களின் பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க தினசரி உணவில் மிதமான அளவில் தேனை உட்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











