Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ஆண்களுக்கு ஏற்படும் சிறுநீர்ப்பை தொற்று பாதிப்பிலிருந்து தப்பிக்கும் வழிகள்
சரியான நேரத்தில் சிகிச்சையளிக்காவிட்டால் சிறுநீர் தொற்று பாதிப்பு வலிமிகுந்த மற்றும் மோசமான ஆரோக்கிய சீர்கேடுகளை உண்டாக்கும் ஒரு நோயாகும். இதனை தடுக்கும் வழிமுறைகள் என்னவென்பதை இங்கு பார்க்கலாம்.
ஆண்களுக்கு ஏற்படும் முக்கியமான பாலியல் நோய்களில் ஒன்று UTI அதாவது சிறுநீரகம் மூலம் ஏற்படும் தொற்று நோய். அதாவது தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உங்கள் சிறுநீர் பாதையில் நுழைவதோடு மட்டுமல்லாமல் சிறுநீரகம், யுரேத்ரா, சிறுநீர்ப்பை போன்ற பாகங்களுக்கும் பரவும்.

சரியான நேரத்தில் சிகிச்சையளிக்காவிட்டால் இது வலிமிகுந்த மற்றும் மோசமான ஆரோக்கிய சீர்கேடுகளை உண்டாக்கும் ஒரு நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். சிலசமயம் சிறுநீர்கழிக்கும் போது அதிக வலியை உணருவார்கள். இதனை தடுக்கும் வழிமுறைகள் என்னவென்பதை இங்கு பார்க்கலாம்.

தள்ளிப்போடாதீர்கள்
இது சிறுவயது முதலே பலரும் சொல்வதுதான் சிறுநீர் கழிக்கும் எண்ணம் வந்தால் உடனடியாக அதனை செய்யவேண்டும். ஏனெனில் அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருப்பது மோசமான பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தி சிறுநீர்ப்பையில் தொற்றை ஏற்படுத்தும். பொதுவாக ஆண்களுடைய சிறுநீர்ப்பை 400 முதல் 500 சிசி சிறுநீரை மட்டுமே தாங்க இயலும். 200 சிசி சிறுநீர் சேர்ந்தவுடன் மூளைக்கு ஒரு சிக்னல் செல்லும் சிறுநீரை வெளியேற்ற. 500 சிசி அளவு அதிகரிக்கும்போது உங்கள் நிலை மிகவும் மோசமாகும். இந்த சூழ்நிலையில் அதனை நீங்கள் தள்ளிபோடும்போது நிச்சயம் இதனால் பக்கவிளைவுகள் ஏற்படும்.

போதுமான அளவு திரவ உணவுகளை வழங்குங்கள்
உடலுக்கு தேவையான போதுமான நீர்ம சத்துக்களை எடுத்துக்கொள்வது உங்களுக்கு அளவற்ற நன்மைகளை வழங்குகிறது. நடுத்தர வயதில் இருப்பவர்கள் தினமும் குறைந்தது 2.5 லி முதல் 3 லி வரை குடிப்பது அவசியம். உங்களுடைய செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு போதுமான அளவு நீர் குடிப்பது சிறுநீரக தொற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கவும் உதவும். நீருடன் சேர்த்து பழச்சாறு குடிப்பதும் உங்களுக்கு அதிக ஆற்றலை வழங்கும்.

பிறப்புறுப்பை சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்திருக்கவும்
எப்போதாவது மட்டும் பிறப்புறுப்பை சுத்தம் செய்வது போதாது. தொடர்ந்து பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். குளிக்கும்போது ஆணுறுப்பை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டிருங்கள். பிறப்புறுப்பை பின்னோக்கி இழுத்தி சுத்தம் செய்துவிட்டு அதனை மீண்டும் பழைய நிலையில் இருக்கும்படி செய்துவிடுங்கள். நோய்த்தொற்றுகள் பொதுவாக எரிச்சல், அரிப்பு போன்றவற்றில் ஆரம்பித்து படிப்படியாக சிறுநீரக இயக்கத்தையே பாதிக்கும். பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தை பராமரிப்பது ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையாகும்.

வழக்கமான உடல்பரிசோதனை
சிறுநீரக கற்கள், சர்க்கரை நோய், புரோஸ்ட்ரேட் போன்ற பாதிப்புகள் சிறுநீரக தொற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று உங்களுக்கும் தெரியுமா? தொடர்ச்சியான உடல் பரிசோதனை என்னும் போது இரத்த பரிசோதனை, இதய பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை போன்ற பல சோதனைகள் அடங்கும். இதுபோன்ற சோதனைகளை சீரான இடைவெளியில் செய்துகொள்வது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விடலாம். 40 வயதிற்கு மேல் இருக்கும் ஆண்கள் புரோஸ்ட்ரேட் சோதனையை தொடர்ந்து செய்துகொள்வது அவசியம்.

உடலுறவின் போது எச்சரிக்கை
ஈ கோலி என்னும் பாக்டீரியாதான் சிறுநீரக பாதிப்பு தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இந்த பாக்டீரியாக்கள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தன்மை உடையது. ஒருவேளை நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுவது நீங்களே ஈ கோலியை உங்களை நோக்கி வரவேற்பது போன்றதாகும். எனவே பாதுகாப்பான உறவில் ஈடுபடுவது எப்பொழுதுமே சிறப்பானதாகும். ஆணுறை உபயோகிப்பது மட்டும் பாதுகாப்பை உறுதிசெய்யாது, எனவே உங்களின் சுகாதாரம் மற்றும் உங்கள் துணையின் சுகாதாரத்தையும் உறுதிசெய்து கொள்ளுங்கள். பாதுகாப்பான உறவு உங்களை சிறுநீரக தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.

பெண்களின் வாசனை திரவிங்களை பயன்படுத்தாதீர்கள்
பெண்கள் உபயோகிக்கும் பர்ப்யூம்களை ஆண்கள் உபயோகப்படுத்துவது அவர்களுக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதில் முக்கியமானது இந்த சிறுநீரக தொற்று பாதிப்பு ஆகும். பெண்களின் பர்ப்யூம்கள் உபயோகிப்பது ஆண்களின் பிறப்புறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.

காட்டன் உள்ளாடைகள்
எப்பொழுதும் காட்டன் உள்ளாடைகளை அணிவதே நல்லது. காட்டன் உள்ளாடைகள் ஈரப்பதத்தை தடுக்கும் மற்ற உள்ளாடைகள் ஈரத்தை பிறப்புறுப்புகள் அனுமதிக்கும். இதனால் பாக்டீரியா தொற்று ஏற்படுவதுடன் அதன் இனப்பெருக்கத்திற்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. அதேசமயம் இறுக்கமான உள்ளாடைகளை அணிவதும் சிறுநீரக தொற்று பாதிப்பை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications