Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
இத தினமும் நைட் குடிச்சா, சிகரெட் பிடிப்பதையே நிறுத்திடுவீங்க தெரியுமா?
இங்கு டார்டார் க்ரீமின் அசாதாரண பயன்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தற்போது பலருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளது. சிகரெட் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானது என்று அனைவருக்குமே தெரியும். இருப்பினும், சிகரெட் பிடித்தால், டென்சன் குறைந்து ரிலாக்ஸ் கிடைக்கிறது என்று பலரும் இந்த தீங்கு விளைவிக்கும் சிகரெட்டைப் பிடிக்கிறார்கள். இந்த சிகரெட் பழக்கத்தை மறக்கவும், கைவிடவும் முடியாமல் ஏராளமானோர் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் இந்த கெட்ட பழக்கத்தைக் கைவிட சில வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் டார்டார் க்ரீம் பவுடர்.
டார்டார் க்ரீம் பவுடர் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. டார்டார் க்ரீம் பவுடர் போன்று வெள்ளை நிறத்தில் இருக்கும். இது ஒரு வகையான அமிலம். இந்த பவுடரானது ஒயினில் இருந்து பெறப்படுகிறது. டார்டார் க்ரீம் பவுடர் என்பது பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்ரேட் ஆகும். பெரும்பாலும் இது ரெசிபிக்களில், முட்டையின் வெள்ளைக்கரு வேகமாக இறுக்கமாவதற்குப் பயன்படுத்தப்படும் மற்றும் சிரப்புக்களில் சர்க்கரை படிகங்கள் உருவாவதைத் தாமதப்படுத்தப் பயன்படுத்தப்படும்.
இத்தகைய டார்டார் க்ரீம் பவுடரை நாம் பலவாறு பயன்படுத்தலாம். குறிப்பாக இது ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். உதாரணமாக, டார்டார் க்ரீம் பவுடர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க மற்றும் புகைப்பிடிப்பதை நிறுத்த உதவும். இருப்பினும் சென்சிடிவ் இரைப்பை அல்லது சிறுநீரக நோய்கள் உள்ளவர்கள், டார்டார் க்ரீம் பவுடரை எடுக்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். இப்போது டார்டார் க்ரீம் பவுடரின் அசாதாரண பயன்பாடுகள் குறித்துக் காண்போம்.

பருக்கள் நீங்கும்
டார்டார் க்ரீம் பவுடர் பருக்களை மட்டுமின்றி, பருக்களால் வந்த தழும்புகளையும் போக்கும். இதன் சக்தி வாய்ந்த பண்புகள் சருமதில் இருந்து அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சருமத்தை மென்மையாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் டார்டார் க்ரீம் பவுடரை 1 டம்ளர் நீரில் கலந்து தினமும் காலையில் குடியுங்கள். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், பருக்கள் வருவது குறைவதோடு, தழும்புகளும் நீங்கும்.

ஆர்த்ரிடிஸை சரிசெய்யும்
இன்று ஏராளமானோர் ஆர்த்ரிடிஸ் வலியால் கஷ்டப்படுகிறார்கள். இந்த ஆர்த்ரிடிஸ் வலிக்கு டார்டார் க்ரீம் பவுடர் ஒரு நல்ல நிவாரணத்தை வழங்கும். அதற்கு கிரேப்ஃபுரூட், ஆரஞ்சு, எலுமிச்சை, எப்சம் உப்பு மற்றும் டார்டார் க்ரீம் பவுடர் போன்றவற்றை ஒரு டம்ளர் நீரில் ஒன்றாக சேர்த்து ஊற வைத்து, அந்நீரைக் குடியுங்கள்.

நெஞ்செரிச்சல் நிவாரணி
நெஞ்செரிச்சல் குணமாவதற்கு, ஆன்டாசிட்டுகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, டார்டார் க்ரீம் பவுடரைப் பயன்படுத்துங்கள். அதுவும் ஒரு டம்ளர் நீரில் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1/2 டீஸ்பூன் டார்டார் க்ரீம் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை நெஞ்செரிச்சல் இருக்கும் போது ஒரு டீஸ்பூன் உட்கொள்ளுங்கள்.

பித்தக்கற்களைக் கரைக்க...
ஏற்கனவே பித்தக்கற்கள் இருந்து கரைந்தால், அவர்கள் எந்த ஒரு உணவையும் அச்சத்துடன் சாப்பிட வேண்டி இருக்கும். இந்த அச்சத்தைத் தவிர்க்க டார்டார் க்ரீம் பவுடர் பயன்படும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் டார்டார் க்ரீம் பவுடர், 1 டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பு மற்றும் 6 எலுமிச்சையின் சாற்றினை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, நீர் நிரப்பி, கண்ணாடி பாட்டிலை ஃப்ரிட்ஜில் வையுங்கள். இந்த பானத்தை தினமும் இரவு ஒரு சிறிய டம்ளர் குடியுங்கள்.

பாக்டீரியல் தொற்றுகள்
பொதுவான பாக்டீரியல் தொற்றுக்களின் அறிகுறிகள் தான் காய்ச்சல், அழற்சி, வீக்கம் போன்றவை. இந்த அறிகுறிகளை இயற்கையாகவே சரிசெய்யலாம். அதுவும் டார்டார் க்ரீம் பவுடரைக் கொண்டு சரிசெய்ய முடியும். அதற்கு 1/2 கப் வெதுவெதுப்பான நீரில், 1/2 டீஸ்பூன் டார்டார் க்ரீம் பவுடரை சேர்த்து கலந்து குடித்து வாருங்கள். இதனால் பாக்டீரியல் தொற்றுக்கள் விரைவில் சரியாகும்.

சிகரெட் பழக்கத்தை நிறுத்த...
இருப்பதிலேயே மிகவும் மோசமான ஒரு பழக்கம் தான் புகைப்பிடிப்பது. டார்டார் க்ரீம் பவுடர் இரத்த நாளங்களில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்றுவதோடு, சிகரெட்டின் மீதுள்ள ஆசையைக் குறைக்கும். சிகரெட் பழக்கத்தைக் கைவிட டார்டார் க்ரீம் பவுடரைப் பயன்படுத்துவது எப்படி? இரவு தூங்கும் முன், ஆரஞ்சு ஜூஸில் சிறிது டார்டார் க்ரீம் பவுடரைக் கலந்து குடியுங்கள். இதனால் இந்த பானம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலல் இருந்து நச்சுமிக்க நிக்கோட்டினை விரைவில் வெளியேற்றும்.

சிறுநீரக பாதை தொற்றுக்களை சரிசெய்ய...
உங்களுக்கு சிறுநீரக பாதை தொற்றுக்கள் இருந்தால், அதை இயற்கை வழியில் சரிசெய்ய நினைத்தால், டார்டார் க்ரீம் பவுடர் உதவியாக இருக்கும். அதற்கு எலுமிச்சை ஜூஸை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, அத்துடன் 1 1/2 டீஸ்பூன் டார்டார் க்ரீம் பவுடர் சேர்த்து கலந்து, தினமும் 1-2 முறை குடியுங்கள்.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க...
பொட்டாசியம் குறைபாட்டினால் ஏற்படுவது தான் உயர் இரத்த அழுத்த பிரச்சனை. ஒரு எளிய இரத்த பரிசோதனையின் மூலம், ஒருவருக்கு இருக்கும் பொட்டாசியம் குறைபாட்டினை அறிந்து கொள்ள முடியும். உடலில் பொட்டாசியத்தின் அளவை அதிகரிக்க, ஒரு டம்ளர் நீரில், 1 டீஸ்பூன் டார்டார் க்ரீம் பவுடரைக் கலந்து குடியுங்கள்.



Click it and Unblock the Notifications