Latest Updates
-
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
இரத்தம் உறையா நோய் குறித்து உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள்!
இங்கு இரத்தம் உறையா நோய் குறித்து உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
மனித இனத்தை ஏராளமான நோய்கள் தாக்குகின்றன. அதில் சில முற்றிலும் குணப்படுத்தும் அளவிலும், இன்னும் சில குணப்படுத்தவே முடியாதவாறும் இருக்கும். அப்படி குணப்படுத்த முடியாத ஒன்று தான் இரத்தம் உறையா நோய்.

இரத்தம் உறையா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிர் வாழ வேண்டுமானால், பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இரத்தம் உறையா நோய் என்பது ஒரு மரபணு கோளாறு. இந்நோய் இருந்தால், அவர்களுக்கு தீவிர சிராய்ப்புண், மிகுந்த சோர்வு, இரத்தம் கலந்த மலம் மற்றும் சிறுநீர், மூக்கில் இரத்தம் ஒழுகுதல் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது நிலையை நினைத்து மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாவார்கள். ஏனெனில் இவர்களுக்கு சிறு கீறல் ஏற்பட்டாலும், அதனால் பயங்கரமாக இரத்தக்கசிவு ஏற்படும். இங்கு இரத்தம் உறையா நோய் குறித்து பலருக்கும் தெரியாத உண்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

உண்மை #1
இரத்தம் உறையா நோய் என்பது உடலில் இரத்தம் உறையக் காரணமான புரோட்டீன் இல்லாததால் ஏற்படுவதாகும்.

உண்மை #2
எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களுக்கு இரத்தம் உறையா நோய் இருப்பதாக அறியப்படுகிறது. எனவே இத்தகையவர்கள் இரத்தம் மற்றும் ப்ளாஸ்மாவை அடிக்கடி மாற்ற வேண்டியது அவசியம்.

உண்மை #3
இரத்தம் உறையா நோய் என்பது ஒரு ராயல் நோய். 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் வாழ்ந்த பல ராயல் குடும்பத்தினர் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனராம்.

உண்மை #4
இரத்தம் உறையா நோய் இரு பாலினத்தவரையும் பாதிக்கும். இந்த நோய் பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்குவதாக சர்வேக்கள் கூறுகின்றன.

உண்மை #5
தன் தந்தையின் மூலம் இந்நோயால் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருந்தால், அவள் சுமக்கும் குழந்தைக்கும் அது பரிமாற்றப்பட்டு, நோயை பரவச் செய்யும்.

உண்மை #6
உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், இந்நோயை முழுமையாக குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் எவ்வித பலனும் இதுவரை கிடைத்தப்பாடில்லை



Click it and Unblock the Notifications
