Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
பருவம் அடையாத பெண் குழந்தைகளுக்கு கை மேல் பலன் தரும் வெந்தய லேகியம் !!
கால தாமதமாகியும் பூப்பெய்யாத பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை பலம் தரும் வகையிலும் போஷாக்கு தரும் வகையிலும் செய்யப்படும் வெந்த்ய லெகியம் தயாரிக்கும் முறைப் பற்றி இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது.
இப்போதெல்லாம் 10 வயதிலேயே பெண் பிள்ளைகள் பருமடைந்துவிடுகிறார்கள். அதிகபப்டியான கொழுப்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்களே காரணமாகும். ஆனாலும் சில பெண்கல் 16 வயதை தாண்டியும் பருமடையாமல் இருப்பதுண்டு.
ஏதாவது பிரச்சனை இருந்தால் இவ்வாறு உண்டாகும். கை வைத்தியம் முய்ற்சி செய்து பார்த்து அப்படியும் பருவம் அடையவில்லையென்றால் மருத்துவரை நாடுவது முக்கியம்.
போதிய போஷ்க்கு இல்லாமல் வத்தலாக இருந்தாலும் பூப்பெய்தல் நடக்காமல் போகும். அந்த மாதிரி பாதிப்புகளுக்கு வெந்தய லெகியம் அருமையான மருந்தாகும். அதனை எப்படி செய்வது என பார்க்கலாம்.

வெந்தயம் ஊற வைக்கவேண்டும் :
இரவில் ஒரு பிடி வெந்தயத்தை எடுத்து, நீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் ஊறிய அந்த வெந்தயத்தை அம்மி அல்லது கல்லுரலில் அரைத்து விழுதாக்கிக் கொள்ளுங்கள்.

கல்கண்டு மற்றும் வெண்ணெய் சேர்க்க வேண்டும் :
இந்த விழுது எவ்வளவு இருக்கோ அதே எடையளவுக்கு வெண்ணெயும், இனிப்பிற்கு தகுந்த மாதிரி கல்கண்டும் எடுத்துக் கொள்ளுங்கள். குறைந்த தீயில் வாணிலியில் இந்த மூன்றையும் சேர்த்து கிளற வேண்டும்.

திராட்சை போட வேண்டும் :
இதோட கைப்பிடியளவு காய்ந்த திராட்சையும் போடுங்கள். வெண்ணெய் உருகி, நெய் வாசனை வர்ற சமயத்தில் லேகியத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.

லேகியம் ரெடி :
லேகியம் கெட்டியாகி கமகமனு மணமா இருக்கும். ஆறினதும் ஒரு பாட்டில்ல போட்டு வச்சிக்கிட்டு தினமும் காலைல ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு உருண்டையைச் சாப்பிடக் கொடுத்தால், சீக்கிரமே பொண்ணு புஷ்டியாகி பருவத்துக்கு வந்துடும்.

புஷ்டியாகவும் சாப்பிடலாம் :
வத்தலும் தொத்தலுமா இருப்பவர்கள் மற்றும் பலவீனமான பெரியவர்களுக்கு இந்த வெந்தய லேகியம் பூரிப்பை தரும். உடலுக்கும் பலம் தரும்.



Click it and Unblock the Notifications