Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
நினைவாற்றலை கூர்மையாக வைத்திருக்க எந்த மாதிரியான விஷயங்களை செய்யணும் தெரியுமா?
Memory Loss In Tamil: அல்சைமர் நோய் என்பது ஒரு மறதி நோயாகும். அமெரிக்காவில் இறப்புக்கான 6 வது முக்கிய காரணியாக அல்சைமர் நோய் உள்ளது. அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்கள் மூளையின் செயல்திறனை பாதித்து நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் நிறைய பேர் ஞாபக மறதியை சந்திக்கின்றனர். அதே மாதிரி நமக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பை சரி செய்யவும் நிறைய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நினைவாற்றல் இழப்பை சரி செய்ய மற்றும் குறைக்க கீழே உள்ள டிப்ஸ்களை பின்பற்றி வரலாம்.

எனவே அறிவாற்றல் உடற்பயிற்சியை மேற்கொள்வது உங்கள் நினைவாற்றல் இழப்பை தடுக்க உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் புத்திக் கூர்மையுடன் செயல்பட முடியும்.
நினைவாற்றலை கூர்மையாக வைத்திருக்க சில வழிகள்
நீங்கள் உங்கள் நினைவாற்றலை கூர்மையாக வைத்திருக்க விரும்பினால் கற்பதை நிறுத்தாதீர்கள். உங்கள் மூளையை எப்பொழுதும் சுறுசுறுப்புடன் வைத்திருக்கும் சில விளையாட்டுகளில் நீங்கள் ஈடுபடலாம். சுடோகு அல்லது கிராஸ் வேர்டு, புதிர் விளையாட்டுகள் போன்றவற்றில் ஈடுபடலாம்.
உங்கள் மொபைல் போன்கள், செய்தித்தாள்கள் போன்றவற்றில் இந்த மாதிரியான விளையாட்டுகள் நிறைய கிடைக்கிறது. அதை முயற்சி செய்து வரலாம். நினைவாற்றலை அதிகரிப்பது, கவனம், செறிவு, சிக்கலை தீர்ப்பது போன்ற செயல்கள் மூளை செயல்களை பயிற்றுவிக்க உதவுகிறது.
ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
உங்கள் நினைவாற்றலுக்கும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. உங்கள் மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளான முழு தானியங்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய மீன்கள், ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகள், பச்சை இலை காய்கறிகள், கீரைகள், நட்ஸ் வகைகள், தேங்காய் எண்ணெய், அவகேடோ, சூரிய காந்தி மற்றும் பூசணிக்காய் விதைகளை எடுத்துக் கொண்டு வரலாம். இவற்றில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உங்கள் மூளையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
நினைவாற்றல் பயிற்சி
* நீங்கள் தினசரி பயன்படுத்தும் கண்ணாடிகள், வாட்ச்கள், பர்ஸ், சாவிகள் இவற்றை எப்பொழுதும் ஒரே இடத்தில் வையுங்கள்.
* நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்களை மற்றும் வாங்க வேண்டிய மளிகைப் பொருட்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
* சரியான நேரத்தில் இடங்களுக்கு செல்ல, தேவைப்படும் மருந்துகளை எடுத்துச் செல்ல அலாரத்தை அமைக்கலாம்.
* மற்றவரின் பெயர்களை நினைவுபடுத்த அவர்களுடன் பேசும் போது பெயர்களை அடிக்கடி பயன்படுத்தலாம். அந்த நபரின் புகைப்படங்களை வைத்து நினைவூட்டிக் கொள்ளலாம்.
மன அழுத்தத்தை தவிருங்கள்
நீங்கள் மன அழுத்தத்துடன் இருந்தால் உங்கள் நினைவாற்றல் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. மன அழுத்தத்தைப் போக்க இசையைக் கேட்பது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது, தியானம் மற்றும் போதுமான தூக்கம் போன்றவற்றை மேற்கொண்டு வரலாம்.
சமூக ஆதரவு
தங்கள் குடும்பங்களுடன் செலவிடுபவர்கள், சமூக ஆதரவுடன் இருப்பவர்களுக்கு நினைவாற்றல் இழப்பு குறைவாக உள்ளது. தனிமையில் வசிப்பவர்களுக்கு நினைவாற்றல் இழப்பு அதிகம். எனவே சமூக ஆதரவுடன் இருப்பது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உதவி செய்கிறது.
மூளைக்கு உடற்பயிற்சி
புத்தகங்களை படித்தல், நிறைய பொருட்களை நியாபகம் வைத்து கடைகளில் வாங்குதல், நிறைய பாதைகளை நியாபகம் வைத்துக் கொள்ளுதல், சமையலில் புதுவித ரெசிபிகளை முயற்சி செய்தல், நீச்சல் பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ளுதல். கால்குலேட்டர் இல்லாமல் கணக்கு போடுதல், உங்கள் நண்பர்களின் போன் நம்பர்கள் மற்றும் பெயர்களை நியாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் தலையை பாதுகாக்க வேண்டும்
தலையில் ஏற்படும் காயங்களுக்கும் அல்சைமர் நோய்க்கும் நிறைய தொடர்பு உண்டு. காயங்களை தடுக்கவும், தலையை பாதுகாக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுங்கள். பைக்கில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மட் அணிந்து செல்லுங்கள். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின் அறிக்கையின்படி, ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டுபவர்களுக்கு 65% காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
சிகிச்சை அவசியம்
உங்களுக்கு அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய் அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். மருத்துவரின் ஆலோசனை பேரில் நினைவாற்றல் பயிற்சியில் நீங்கள் ஈடுபடலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications