Thug Life: நடிகர் சிம்பு 42 வயதிலும் ஃபிட்டாக இருக்க.. அவரது இந்த பழக்கங்கள் தான் காரணமாம்..

Thug Life Actor Silambarasan Fitness Secrets: தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகர் தான் சிம்பு என்று செல்லமாக அழைக்கப்படும் சிலம்பரசன். சிறு வயதில் இருந்தே தமிழ் திரையுலகில் நடித்து வந்த சிம்பு, தற்போது டாப் ஹீரோவாக உள்ளார். இன்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கி நடிகர் சிம்பு, கமலஹாசன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடித்த தக் லைக் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தின் ட்ரைலரே மிரட்டும் வகையில் இருந்தது. இந்த படத்தில் சிம்புவிற்கு உண்மையில் 42 வயது என்று கூறினால் நம்பமுடியாது. ஏனெனில் அந்த அளவில் அவர் ஃபிட்டாக, ஸ்டைலாக உள்ளார். சிம்பு 42 வயதிலும் இவ்வளவு ஃபிட்டாக இருக்க என்ன செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்ப தொடர்ந்து படியுங்கள்...

Thug Life Actor Silambarasan Fitness Secrets Know How Actor Simbu Lost From 101 Kg To 71 Kg

நடிகர் சிம்பு சில வருடங்களுக்கு முன்பு சுமார் 101 கிலோ வரை இருந்தார். ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலையின் போது, அவர் தனது உடலை குறைக்க முயற்சித்து, கிட்டதட்ட 30 கிலோ வரை குறைத்துள்ளார். அவ்வளவு எடையைக் குறைத்து ஃபிட்டானது மட்டுமின்றி, அதை தற்போது பராமரித்தும் வருகிறார். நடிகர் சிம்பு எப்படி 30 கிலோ உடல் எடையைக் குறைத்தார் என்பது குறித்து நேர்காணல் ஒன்றிலும் கூறியுள்ளார்.

சிம்பு மேற்கொண்ட உடற்பயிற்சிகள்

நடிகர் சிம்பு சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த செக்க சிவந்த வானம் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது 101 கிலோ இருந்துள்ளார். அந்த படத்தில் அதிகம் ஓட வேண்டியிருந்து. ஆனால் அதிக உடல் எடையின் காரணமாக மூட்டு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உடல் எடையை குறைத்தாக வேண்டுமென்று முடிவெடுத்துள்ளாராம். அந்த முடிவெடுத்து முயற்சித்ததன் விளைவாக 30 கிலோ வரை குறைந்து, தற்போது 71 கிலோ உடல் எடையுடன் இருக்கிறாராம்.

சிம்பு தனது அதிகப்படியான உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவியதாக கூறியுள்ளார். முக்கியமாக இவர் உடல் எடையைக் குறைக்க களரிபயாட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். களரிபயாட்டு என்பது வாள் வைத்து செய்யக்கூடிய ஒரு சண்டை பயிற்சியாகும். அதுமட்டுமின்றி சிலம்பு பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். அதோடு சிம்பு தனக்கு பிடித்த நடனத்தையும், உடல் எடையைக் குறைக்க தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொண்டுள்ளார்.

நடிகர் சிம்புவிற்கு உடல் எடையைக் குறைக்க உதவிய ஃபிட்னஸ் கோச் சந்தீப் ராஜ் நேர்காணல் ஒன்றில், சிம்பு அதிகரித்த எடையைக் குறைக்க என்னவெல்லாம் செய்தார் என்பது குறித்து கூறினார். அப்போது சிம்பு தினமும் காலை 4.30 மணிக்கு எழுந்து வேகமான நடைப்பயிற்சியுடன் நாளை தொடங்குவாராம். அதன் பின் உடலின் அனைத்து பாகங்களையும் குறி வைக்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவாராம். ஆரம்ப காலத்தில் வாரத்தில் 4 நாட்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தாராம். அதன் பின் ஒரு நாளை அதிகரித்து, வாரத்திற்கு 5 நாட்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாக கூறினார்.

சிம்புவின் டயட்

அதன் பின், சிம்பு தனது எடையைக் குறைக்க ஜங்க் உணவுகளை, அசைவ உணவுகளை முழுமையாக குறைத்துவிட்டு, சைவ உணவுகளை மட்டும் உட்கொண்டு வந்தாராம். அதுவும் கலோரி குறைபாடுள்ள உணவுகள் மற்றும் திரவ உணவுகளை அதிகம் உட்கொண்டார். இவர் தனது உணவில் அதிக புரோட்டீன், குறைவான கார்போஹைட்ரேட் நிறைந்த டயட்டை மேற்கொண்டார் என்றும் கோச் கூறினார்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஃபிட்னஸ் அறிவுரை ஒன்றை நடிகர் சிம்பு வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது "இந்த வயதில் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஜாலியாக இருக்கலாம். ஆனால் அதற்காக நம் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள நினைத்தால், இரவில் குறைவாக சாப்பிட்டு தூங்க செல்லுங்கள். எப்போதும் இரவு கொஞ்சம் பசியோடு இருப்பது தவறில்லை. ஆனால் அதிகமாக சாப்பிட்டுவிட்டு உடனே தூங்க செல்லக்கூடாது. எதிர்காலத்தில் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க , சாப்பிட்டதும் தூங்காதீர்கள்" என்று கூறினார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion