நமக்கு ரொம்ப பிடிச்ச சமோசா இந்தியாவில் உருவானது இல்லையாம்... சமோசாவின் சுவாரஸ்ய வரலாறு என்ன தெரியுமா?

சமோசா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஒவ்வொரு இந்தியருக்கும், மிகவும் பிடித்த மற்றும் சிறுவயது நினைவுகளைத் தூண்டக்கூடிய ருசியான சிற்றுண்டியாகும். இந்தியாவில் பெரும்பாலான மக்களால் விரும்பி உண்ணப்படும் சமோசா இந்தியாவில் கண்டறியப்பட்டது என்று நாம் நினைத்திருப்போம், ஆனால் உண்மையில் சமோசா இந்தியாவின் கண்டுபிடிப்பல்ல.

அறிக்கைகள் மற்றும் வரலாற்றின் படி, சமோசா 10 ஆம் நூற்றாண்டில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவானது. சமோசா பற்றிய முதல் அதிகாரப்பூர்வ குறிப்பு ஈரானிய வரலாற்றாசிரியர் அபோல்பாஸ்ல் பெய்ஹாகியின் படைப்பான தாரிக்-இ பெய்ஹாகியில் காணப்பட்டது, அங்கு அது 'சம்போசா' என்று குறிப்பிடப்படுகிறது.

The History and Origin of Samosa in Tamil

ஆனால் அவை மிகவும் சிறிய அளவில் இருந்தன, அதனால்தான் பயணிகள் அவற்றை சிற்றுண்டியாகப் பயன்படுத்தினர், அவர்கள் அவற்றை எளிதாக பைகளில் எடுத்துச்சென்று பயணத்தின் போது சாப்பிட்டனர்.

சமோசாவின் சுவாரஸ்ய பயணம்

அரச சகாப்தத்தில் சமோசா பற்றிய முதல் குறிப்பு, பிரபல கவிஞரும், தில்லி சுல்தானகத்தின் அறிஞருமான அமீர் குஸ்ரோ, அந்தக் காலத்தில் பிரபுக்கள் ருசித்த இறைச்சி, நெய், வெங்காயம் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட சமோசாவைப் பற்றிப் பேசியபோது தொடங்கியது.

பின்னர், 14 ஆம் நூற்றாண்டின் பயணி, இபின் பட்டுதா, முகமது பின் துக்ளக்கின் அரசவையில் அரச விருந்தின் ஒரு பகுதியாக துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சி, அக்ரூட் பருப்புகள், பிஸ்தா, பாதாம் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட சம்புசாக் (சமோசா) பற்றி குறிப்பிட்டார். முகலாய வம்சத்தில் கூட, ஐன்-இ-அக்பரி, 'சன்புசா' என்று அழைக்கப்படும் சமோசாவின் செய்முறையை குறிப்பிட்டுள்ளார்.

சமோசாவின் பல்வேறு வடிவங்கள்

சமோசாவை முக்கோண வடிவில், மசித்த உருளைக்கிழங்கு நிரப்பப்பட்டால் மட்டுமே இந்த சுவையான சிற்றுண்டியை நீங்கள் ருசிக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறாகும். இந்தியாவில் 15-20 க்கும் மேற்பட்ட வடிவங்களில் மக்கள் சமோசாவை விரும்பி உண்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஹைதராபாத்தில், இது 'லுக்மி' என்று அழைக்கப்படுகிறது, இது தடிமனான வெளிப்புற அடுக்கு மற்றும் துண்டு துண்தாக வெட்டப்பட்ட இறைச்சியால் அடைக்கப்படுகிறது. தென்னிந்தியாவில், சமோசாக்கள் முட்டைக்கோஸ், வெங்காயம், கேரட் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

வங்காளப் பகுதியில், இது 'ஷிங்கராஸ்' என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது காரமான மற்றும் இனிப்பு சுவைகளில் கிடைக்கிறது. குஜராத்தில் இது பிரஞ்சு பீன்ஸ் மற்றும் இனிப்பு பட்டாணி நிரப்பப்பட்ட சின்ன சின்ன வடிவங்களில் கிடைக்கிறது. மேலும் கோவாவில், சமோசா 'சமுசாஸ்' என்று அழைக்கப்படுகிறது மற்றும் துண்டு துண்தாக வெட்டப்பட்ட மாட்டிறைச்சி, கோழி அல்லது பன்றி இறைச்சி மூலம் இது தயாரிக்கப்படுகிறது.

சர்வதேச வடிவம்

சமோசா இந்தியாவிற்கு வந்தது போலவே, அது உலகின் பிற பகுதிகளுக்கும் பயணித்து, அந்தந்த பிராந்திய பொருட்களுடன் சுவையூட்டப்பட்டது. இதில் சிறந்த அம்சம் என்னவென்றால், இந்த புகழ்பெற்ற முக்கோண சிற்றுண்டி ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டது.

உலகம் முழுக்க இது எப்படி உட்கொள்ளப்படுகிறது?

போர்ச்சுகல், பிரேசில் மற்றும் மொசாம்பிக் பிராந்தியங்களில், சமோசா 'பேஸ்டீஸ்' என்று அழைக்கப்படுகிறது. அரேபிய நாடுகளில் இருக்கும்போது, துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சி அல்லது சிக்கன், வெங்காயம், கீரை மற்றும் ஃபெட்டா சீஸ் ஆகியவற்றால் அடைக்கப்பட்ட 'சம்புசாக்' என்று அழைக்கப்படுகிறது. சுவாரஸ்யமாக, இஸ்ரேலில், சமோசாவில் பிசைந்த கொண்டைக்கடலையும், மாலத்தீவில், வெங்காயம் மற்றும் மீன் சேர்த்து அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion