Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
எச்சரிக்கை! இந்த அறிகுறிகள் இருந்தா சாதாரணமா நினைக்காதீங்க... அது இரத்த புற்றுநோயா இருக்கலாமாம்!
Blood Cancer In Tamil: இரத்த புற்றுநோய் என்பது உங்கள் இரத்த அணுக்களை பாதிக்கும் ஒரு வகை புற்றுநோயாகும். லுகேமியா, லிம்போமா மற்றும் மைலோமா ஆகியவை இரத்த புற்றுநோயின் பொதுவான வகைகள். இரத்த அணுக்களுக்குள் டிஎன்ஏவில் ஏற்படும் மாற்றங்களால் (பிறழ்வுகள்) இரத்த புற்றுநோய் ஏற்படுகிறது.
லுகேமியா இரத்த புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது, இது எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர் அமைப்பு உட்பட உடலின் இரத்தத்தை உருவாக்கும் திசுக்களின் புற்றுநோயாகும். இரத்த புற்றுநோய் உங்களுக்கு பல்வேறு வடிவங்களில் ஏற்படலாம். லுகேமியாவின் மிகவும் பொதுவான வகை கடுமையான லிம்போசைடிக் லுகேமியா ஆகும்.

மெதுவாக வளரும் லுகேமியாவின் மிகவும் பொதுவான வடிவம் நாள்பட்ட லிம்போசைடிக் லுகேமியா ஆகும். நாள்பட்ட மைலோஜெனஸ் லுகேமியாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் பெரியவர்களாக இருக்கிறார்கள். லுகேமியா பொதுவாக வெள்ளை இரத்த அணுக்களின் செயலிழப்பை உள்ளடக்கியது. மிகவும் மோசமான புற்றுநோயான இரத்த புற்றுநோயின் அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
இரத்த புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?
உங்கள் உடலிலிருக்கும் வெள்ளை இரத்த அணுக்கள் சக்திவாய்ந்த தொற்றுநோய் எதிர்ப்பு போராளிகள். இவை, உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உங்கள் உடலில் உள்ள நோய்க்கிருமிகளை எதிர்த்து போராட உதவுகின்றன. உங்கள் உடலுக்குத் வெள்ளை இரத்த அணுக்கள் கண்டிப்பாகத் தேவைப்படுவதால், அவை பொதுவாக வளர்ந்து ஒழுங்கான முறையில் பிரிக்கப்படுகின்றன.
ஆனால் லுகேமியாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நபர்களுக்கு, எலும்பு மஜ்ஜை அதிகளவு அசாதாரண வெள்ளை இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது. இதனால், அவை சரியாக செயல்படாது. இவை கட்டிகளாக மாறி, புற்றுநோய் செல்களை உருவாக்குகின்றன. குறுகிய காலத்தில் உருவாகும் இந்த மோசமான இரத்த புற்றுநோய், குழந்தைகளில் காணப்படும் மிகவும் பொதுவான புற்றுநோயாகும்.
லுகேமியாவின் அறிகுறிகள் மாறுபடும். இரத்த புற்றுநோயின் வகையைப் பொறுத்து, அவை எளிதில் கவனிக்கப்படாமல் போகலாம். லுகேமியாவின் பொதுவான அறிகுறிகளை பற்றி ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில், அவை உங்களையும் உங்கள் குழந்தையையும் ஆபத்தில் இருந்து காப்பாற்ற உதவும்.
நீடித்த நோய் மற்றும் காய்ச்சல்
அடிக்கடி அல்லது கடுமையான நோய்த்தொற்றுகள் ஏற்படுவது, நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுத்துக் கொண்டாலும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது, அடிக்கடி காய்ச்சல் ஏற்படுவது ஆகியவை இரத்த புற்றுநோயின் அறிகுறிகளாகும். உங்களுக்கு தொடர்ந்து அல்லது நீண்ட காலமாக காய்ச்சல் அல்லது நோய்தொற்று இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
சோர்வு அல்லது பலவீனம்
இரத்த புற்றுநோயின் மற்றொரு அறிகுறி, வெளிப்படையான காரணமின்றி மயக்கம், தொடர்ச்சியான பலவீனம் மற்றும் சோர்வு போன்ற உணர்வு ஏற்படுவது ஆகும். நீங்கள் மிக பலவீனமாக அல்லது அடிக்கடி சோர்வாக உணர்ந்தால், மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
வீங்கிய நிணநீர் கணுக்கள்
வைரஸ்கள், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் சேதமடைந்த செல்கள் இருப்பதால் நிணநீர் முனைகள் வீங்குகின்றனர். ஆனால், வீங்கிய நிணநீர் கணுக்கள் இரத்த புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். மண்ணீரல், கல்லீரல் மற்றும் நிணநீர் கணுக்கள் நோயின் பிற்பகுதியில் விரைவாக வீங்கக்கூடும். விரிவாக்கப்பட்ட மண்ணீரல் அல்லது கல்லீரலின் நிலை லுகேமியாவின் ஆபத்து காரணியாகக் காணப்படுகிறது.
இரத்தப்போக்கு
நிபுணர்களின் கூற்றுப்படி, தன்னிச்சையான சிராய்ப்பு அல்லது தோலில் சிறிய சிவப்பு தடிப்புகள் (பெட்டீசியா) அல்லது மூக்கில் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் இரத்த புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறியாக இருக்கலாம்.
விவரிக்க முடியாத எடை இழப்பு
திடீரென உடல் எடை அதிகரிப்பதும் அல்லது குறைவதும் உடலில் உள்ள பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். அதிக எடையை கொண்டிருக்கும் ஓர் நபர் திடீரென எடையை குறைப்பது இரத்த புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். எந்தவொரு பெரிய எடை மாற்றமும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.
இறுதிக்குறிப்பு
அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான குழந்தை புற்றுநோயியல் நிபுணர்களால் இரத்தப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டுபிடித்து கவனமாக நிர்வகித்தால், அதை குணப்படுத்திவிடலாம். பெரும்பாலான குழந்தைகள் (85% க்கும் அதிகமானவர்கள்) சிகிச்சைக்கு நன்கு பதிலளித்து நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

