Latest Updates
-
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
நீங்க சிறுநீர் கழிக்கும்போது இந்த அறிகுறி இருக்கா? அப்ப அது சிறுநீர்ப்பை புற்றுநோயாய் இருக்கலாமாம்..ஜாக்கிரதை!
நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா? உடலில் ஏதேனும் பாதிப்புகள் இருக்கிறதா? என்பது குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், உடலில் ஏற்படும் ஆபாத்தான நோய்க்களுக்கான அறிகுறிகளை பொதுவாக நாம் கவனிக்க மறந்துவிடுகிறோம்.
சிறுநீர் கழிக்கும்போது, உங்கள் சிறுநீரை என்றாவது கவனித்து இருக்கிறீர்களா? ஏனெனில், உங்கள் சிறுநீர் உங்கள் உடலில் இருக்கும் ஆபத்தான நோய்க்களுக்கான அறிகுறிகளை காட்டுகிறது. சிறுநீர்ப்பையின் புறணியில் அசாதாரண திசுக்களின் (கட்டி) வளர்ச்சி உருவாகும்போது சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுகிறது.

இதன் அறிகுறிகளை அறிந்து ஆரம்பகாலத்திலே கண்டறிந்தால், 80 சதவிகிதம் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை பெறலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பெரும்பாலும் பெண்களை பாதிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
சிறுநீர்ப்பை புற்றுநோய் எப்போதும் பல அறிகுறிகளை காட்டுவதில்லை, அதனால்தான் பலர் தாமதமாகவே நோயறிதலை கண்டறிகிறார்கள். நீங்கள் புறக்கணிக்கக் கூடாத சில பொதுவான அறிகுறி உள்ளன. அவை என்னென்ன என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை நீங்கள் கவனித்தால் உடனே உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
சிறுநீரில் இரத்தம் வெளியேறுவது
பொதுவாக சிறுநீரில் இரத்தம் வெளியேறுவது, நமக்கு அச்சத்தை ஏற்படுத்தும். தேசிய சுகாதார சேவையின் கூற்றுப்படி, உங்கள் சிறுநீரில் இரத்தம் வெளியேறுவது ஹெமாட்டூரியா என்ற சுகாதார நிலையை குறிக்கிறது. இந்த நிலை உங்கள் சிறுநீர்ப்பையில் ஏதோ நோய் உள்ளது என்பதற்கான முக்கிய அறிகுறியாகும். இந்த அறிகுறி 85 சதவீத வழக்குகளில் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இரத்தம் சில நேரங்களில் இளஞ்சிவப்பு, பிரகாசமான சிவப்பு, பழுப்பு அல்லது லேசான நிறத்தில் வெளியேறலாம். இந்த எச்சரிக்கை அறிகுறி பொதுவாக வலி இல்லாமல் ஏற்படும். ஆதலால், உங்கள் சிறுநீரின் நிறம் சிவப்பாக மாறினால், இரத்தம் வெளியேறுவது போல தெரிந்தால், தாமதிக்கமால் உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.
சிறுநீர் கழிக்கும் போது இரத்தத்தின் பிற பிரச்சினைகள்
ஹெமாட்டூரியா என்றால் உங்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளது என்று அர்த்தம் இல்லை. இது சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI), சிறுநீர்ப்பை கற்கள், அதிகப்படியான சிறுநீர்ப்பை அல்லது ஆண்களில் விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட் ஆகியவற்றின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.
இருப்பினும், இந்த அறிகுறியை புறக்கணிக்காமல், மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது. மேலும் உங்களுக்கு ஏற்படும் அறிகுறியையும், அதற்கான சிகிச்சையையும் கண்டறிய உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
பிற எச்சரிக்கை அறிகுறிகள்
சிறுநீரில் இரத்தம் வெளியேறுவதைத் தவிர, சிறுநீர்ப்பை புற்றுநோயானது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வை ஏற்படுத்தலாம். திடீரென சிறுநீர் கழிக்கத் தூண்டுதல், சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு, அடிவயிற்றில் அல்லது முதுகில் வலி, சோர்வாக உணருதல், பசியின்மை மற்றும் எலும்பு வலி போன்ற பிற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம்.
சிறுநீர்ப்பை புற்றுநோயின் அபாயத்தை எவ்வாறு குறைப்பது?
புகைபிடிப்பவர்கள் புகைபிடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில் இது உங்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும். ஒருவர் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம்.
மேலும், அதிகளவு தண்ணீர் குடிப்பது, சிறுநீர்ப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த ஆரோக்கியமான உணவை உட்கொள்வது சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்க உதவும். உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்கள் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவலாம்
புற்றுநோய் செல்கள் புறணிக்கு அப்பால், சுற்றியுள்ள சிறுநீர்ப்பை தசையில் பரவும் போது, இது தசை-ஆக்கிரமிப்பு சிறுநீர்ப்பை புற்றுநோய் என்று குறிப்பிடப்படுகிறது. இது, உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உங்கள் எலும்புகளில் வலி ஏற்படுவது புற்றுநோய் செல்கள் உங்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருப்பதற்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். ஆதலால், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவ உதவியை நாடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

