Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
வெயில் காலத்துல உங்களுக்கு ரொம்ப தூக்கமா வருதா? இதோ அதைத் தடுக்கும் சில வழிகள்!
Summer Health Tips In Tamil: பொதுவாக குளிர்காலத்தில் தான் ஒருவர் மிகுந்த உடல் சோர்வையும், எந்நேரமும் தூக்க கலக்கத்துடனும் இருப்போம். ஆனால் கோடைக்காலத்திலும் ஒருவர் அதிக தூக்கத்தை உணரக்கூடும். இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான வெயில், நமது உடலில் உள்ள ஆற்றலை உறிஞ்சி எடுத்து, நமது உடலையும், உற்பத்தித் திறனையும் பாதிப்பது தான்.
நீங்கள் மட்டும் தான் எப்போதும் தூக்க கலக்கத்துடன் திரிகிறீர்கள் என்று நினைத்தால், அது இல்லை. கோடையில் வீட்டை விட்டு வெயிலில் அதிகமாக சுற்றும் பலரும் இப்பிரச்சனையை அனுபவிக்கிறார்கள். சரி, ஏன் ஒருவர் கோடையில் அதிக தூக்கத்தை உணர்கிறார்கள் தெரியுமா? கோடைக்காலத்தில் பகல் நேரம் அதிகம் என்பதால், நமது உடலின் மெலடோனின் பாதிக்கப்படுகிறது.

பருவ காலங்களிலேயே கோடைக்கால நாட்களின் பகல் நேரம் தான் மிகவும் நீண்டது. இதனால் தான் ஒருவர் கோடையில் அதிக தூக்கத்தை உணர நேரிடுகிறது. இப்போது கோடைக்காலத்தில் சந்திக்கும் அதிகப்படியான உடல் சோர்வு மற்றும் தூக்க உணர்வைத் தடுக்க உதவும் சில வழிகளைக் காண்போம்.
* நீங்கள் தினமும் இரவு போதுமான அளவு தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், அதன் விளைவாக மறுநாள் நீங்கள் மிகுந்த உடல் சோர்வையும், தூக்க கலக்கத்துடனும் இருக்க நேரிடும். எனவே தினமும் போதுமான அளவு தூக்கத்தை மேற்கொள்ளும் வகையில், வேகமாக தூங்க செல்லுங்கள். இந்த பழக்கத்தை தினமும் கொள்ளுங்கள்.
* கோடையில் உடல் வறட்சியின் காரணமாகவும் ஒருவர் மிகுந்த உடல் சோர்வையும், அதிகப்படியான தூக்கத்தையும் அனுபவிக்கக்கூடும். எனவே உடலை போதுமான நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள, அதிக நீரை அருந்துவதோடு, நீராகாரங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
* பொதுவாக வயிறு நிறைய சாப்பிட்டால், அனைவருக்குமே தூக்கம் வரும். எனவே நீங்கள் வயிறு முட்ட சாப்பிட்டால், அது நிச்சயம் உங்களுக்கு பகல் வேளையில் மிகுந்த தூக்கத்தை வரவழைக்கும். இதற்கு காரணம் அந்த உணவுகளில் உள்ள அதிகப்படியான புரோட்டின் மற்றும் கார்போஹைட்ரேட் தான். எனவே பகல் வேளையில் அளவுக்கு அதிகமாக உண்பதைத் தவிர்த்திடுங்கள்.
* கோடை வெயில் கொளுத்தும் வேளையில் காப்ஃபைன் நிறைந்த பானங்கள் மற்றும் ஆல்கஹால் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக நீரையும், பழச்சாறுகள், மோர் போன்றவற்றையும் அதிகமாக அருந்த வேண்டும். ஏனெனில் காப்ஃபைன் அதிகம் உள்ள பானங்களை அதிகளவில் உட்கொண்டால், அது உடல் வறட்சிக்கு தான் வழிவகுக்கும்.
* தினமும் உடற்பயிற்சி செய்து, அப்பழக்கத்தை கைவிட்டால், அதன் காரணமாகவும் ஒருவர் மிகுந்த உடல் சோர்வையும், தூக்க உணர்வையும் அனுபவிக்கக்கூடும். எனவே கோடைக்காலத்தில் அதிகம் வியர்க்கிறது என்று அதிகாலை உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்காதீர்கள்.
* ஒருவரது இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தால், அதன் காரணமாகவும் ஒருவர் மிகுதியான தூக்கத்தை அனுபவிக்கக்கூடும். அதுவும் மிகுந்த உடல் சோர்வு, எழ முடியாத அளவில் களைப்பு போன்றவற்றை ஒருவர் உணர்ந்தால், அதற்கு பிபி குறைவாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். எனவே கவனமாக இருங்கள்.
* கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால், சூரியக்கதிர்கள் நமது உடலில் உள்ள ஆற்றலை முழுவதுமாக உறிஞ்சி, பலவீனமாக்கிவிடும். எனவே வெயில் காலத்தில் வெளியே சுற்றுவதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வெயிலில் சுற்றினால், அது நீரிழப்பை ஏற்படுத்தி, மிகுந்த களைப்பையும், சோம்பலையும் ஏற்படுத்திவிடும்.
இரவு நல்ல தூக்கத்தைப் பெற பின்பற்ற வேண்டியவைகள்:
* மாலை 6 மணிக்கு மேல் காப்ஃபைன் பானங்களைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* இரவு உணவிற்கு முன் வாக்கிங் போன்ற லேசான உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
* இரவு தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்னரே இரவு உணவை சாப்பிட வேண்டும்.
* படுக்கைக்கு வந்ததும் புத்தகங்களைப் படிப்பது, டிவி பார்ப்பது, மொபைலைப் பார்ப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* மன அழுத்தத்தைத் தவிர்க்க, இரவு தூங்கும் முன் மூச்சு பயிற்சியை மேற்கொள்ளலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











