Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கோடைக்காலத்தில் மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க.. இல்ல ரொம்ப கஷ்டப்படுவீங்க...
Summer Health Tips: கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. வெளியே சென்றாலே நெருப்பில் இருப்பது போன்று சூரியக்கதிர்கள் சுட்டெரிக்கின்றன. அதற்காக நம்மால் வீட்டிற்குள்ளேயே இருக்க முடியாது அல்லவா? வேலை காரணமாக வெளியே செல்ல சூழல் ஒவ்வொருவருக்குமே கட்டாயம் ஏற்படும். அதிகப்படியான வெயில் காரணமாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.
எப்படி குளிர் காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்காக செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் உள்ளதோ, அதேப் போல் கோடைக்காலத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. இதில் கோடையில் செய்யக்கூடாத விஷயங்களை ஒருவர் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதனால் வெயிலால் உடல் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.

இப்போது கோடைக்காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்காக செய்யக்கூடாத சில விஷயங்கள் எவையென்பதைக் காண்போம். அதைப் படித்து தெரிந்து, அவற்றை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
1. கோடைக்காலத்தில் வெளியே வெயிலில் செல்லும் போது சன் ஸ்க்ரீன் போடாமல் அல்லது பாதுகாப்பான ஆடைகளை அணியாமல் சென்றுவிடாதீர்கள். இல்லாவிட்டால், அது சருமத்தை மோசமாக பாதித்து, சரும நிறத்தை கருமையாக்கிவிடும்.
2. கோடையில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடல் வறட்சியை இன்னும் அதிகரித்து வெப்ப வாதத்தின் அபாயத்தை அதிகரித்துவிடும்.
3. அடர் நிறங்களில் ஆடைகள் அல்லது மிகவும் இறுக்கமான ஆடைகளை கோடைக்காலத்தில் அணியாதீர்கள். இல்லாவிட்டால், அந்த ஆடைகள் வெப்பத்தை தக்கவைத்து, உடல் சூடு பிரச்சனையை அதிகரித்துவிடும்.
4. கோடைக்காலத்தில் எங்கு வெளியே சென்றாலும் நீர் கொண்டு செல்ல மறந்துவிடாதீர்கள். மற்ற காலங்களை விட கோடையில் அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். இல்லவிட்டால் உடல் வறட்சியால் அவதிப்பட நேரிடும்.
5. வயிறு நிறைய மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், அது உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு, உடலில் மந்தத்தை அதிகரிக்கும்.
6. வெளியே வெயிலில் செல்லும் போது தொப்பி, சன் ஸ்க்ரீன் கண்ணாடி போன்றவற்றை அணிய தவறக்கூடாது.
7. வெயிலில் அதிகம் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் இருந்தால் மட்டும் தான், வெளியே செல்ல வேண்டும். சூரியக்கதிர்கள் சருமத்தில் அதிகளவில் படுமானால், அது சரும புற்றுநோயின் அபாயத்தை அதிகரித்துவிடும்.
8. வெயில் அதிகமாக உள்ளது என்று வீட்டின் ஜன்னல்களை அடைத்துக் கொண்டு இருப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், அதுவே வீட்டினுள் வெப்பத்தை அதிகரிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
