Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
நீங்கள் வயதானவர்களா? அப்ப கோடையில் வெளியே செல்லும் போது இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க...
Summer Health Tips In Tamil: கோடை காலம் என்றாலே வெளியே செல்லும் போது கவனமுடன் நடந்து கொள்வது மிகவும் அவசியம். அதிலும் நீங்கள் வயதானவர்களாக இருந்தால் உங்கள் சருமத்தை சூரிய ஒளிப் பாதிப்பில் இருந்து கூடுதலாக கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் வயதானவர்கள் சூரிய ஒளிப் பாதிப்பால் கடுமையான விளைவுகளை சந்திக்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சூரிய ஒளிப் பாதிப்பால் ஒவ்வொரு வருடமும் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தோல் புற்றுநோயை சந்திக்கின்றனர். இதில் அதிகமானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வயதானவர்கள் கோடை காலத்தில் வெளியே செல்லும் போது சில பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். அதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

சன்ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள்
சன்ஸ்க்ரீன் என்பது இளைய வயதை உடையவர்களுக்கு மட்டுமல்ல. வயதானவர்களும் கோடை காலத்தில் சன்ஸ்க்ரீனை பயன்படுத்தலாம். சன்ஸ்க்ரீன் உங்கள் சருமத்தை தீங்கு விளைவிக்கும் சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து உங்களை காக்கிறது. குறைந்தபட்சம் SPF 30 சன்ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்திற்கு மேல் ஒரு பாதுகாப்பு லேயராக செயல்பட்டு உங்களை காக்கிறது. சூரிய ஒளியால் ஏற்படும் சரும எரிச்சல் மற்றும் சருமம் சிவந்து போதலை தடுக்கிறது. தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
சன் கிளாஸ் அணிந்து வெளியே செல்லுங்கள்
சூரியனின் புற ஊதாக் கதிர்கள் உங்கள் பார்வை திறனை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே வயதானவர்கள் வெளியே செல்லும் போது சன் கிளாஸ் அணிந்து கொள்வது அவசியம். இந்த சன் கிளாஸ்கள் சூரியனின் புற ஊதாக் கதிர்களை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது உங்கள் கண்களையும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பாதுகாக்கிறது.
வயதானவர்கள் சன் கிளாஸ் அணியாமல் வெளியே செல்லும் போது கண் அழற்சி, கண்புரை, மாகுலர் சிதைவு, கண்களைச் சுற்றி சரும புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர். எனவே இதைத் தவிர்க்க சன் கிளாஸ் அணிவது மிகவும் அவசியம்.
சரியான ஆடையை தேர்ந்தெடுங்கள்
கோடைகாலத்தில் இறுக்கமான ஆடைகளை தவிர்த்து நல்ல காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணியுங்கள். இது அதிகப்படியான வியர்வையை தடுக்க உதவுகிறது. கோடை காலத்தில் வயதானவர்கள் இலகுவான பருத்தி ஆடைகளை அணியலாம். நீண்ட தூரம் நீங்கள் செல்வதாக இருந்தால் தலைக்கு தொப்பியை அணிந்து செல்லுங்கள். கோடை காலத்தில் ஏற்படும் அதிகப்படியான வியர்வை பாக்டீரியா தொற்றுக்களை உங்களுக்கு உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
ப்ரஷ்ஷான பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
கோடை காலத்தில் வயதானவர்கள் உடலையும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு தகுந்தாற் போல் தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர் போன்ற நீர்ச்சத்துடன் கூடிய பழங்களை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இதன் மூலம் கோடை காலத்தில் ஏற்படும் நீரிழப்பை தவிர்க்க முடியும். அதே நேரத்தில் ஆல்கஹால் மற்றும் காபி போன்ற பானங்கள் பருகுவதை தவிருங்கள். ஏனெனில் இந்த பானங்கள் நீரிழப்பை அதிகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
மருந்து பாட்டில்களை சரியாக எடுத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் வெளியே செல்லும் போது மருந்து பாட்டில்களை எடுத்துச் சென்றால் கவனமுடன் இருப்பது அவசியம். ஏனெனில் சில மருந்துகள் சூரிய ஒளியால் விளைவுகளுக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது. எனவே மருந்தின் காலாவதி தேதி மற்றும் அதன் லேபிளை சரியாக படித்த பிறகு எடுத்துச் செல்லுங்கள். அதே மாதிரி உங்களுக்கு தேவையான மருந்துகளை எப்பொழுதும் கை வசம் வைத்து இருப்பது நல்லது.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எப்பொழுதும் தொடர்பில் இருங்கள்
வயதானவர்கள் வெளியில் செல்லும் போது தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எப்பொழுதும் தொடர்பில் இருப்பது அவசியம். ஏனெனில் வெளியே செல்லும் போது எதாவது மயக்கம் அல்லது உடல் நல பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே அவர்களை அழைக்க முடியும். எனவே கையில் தொலைபேசி வைத்திருப்பது நல்லது.
வெப்ப தாக்கல் அறிகுறிகள் இருந்தால் கவனியுங்கள்
சில சமயங்களில் ஹீட் ஸ்ட்ரோக்/வெப்ப தாக்கல் (Heat Stroke) என்பது உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தி விடும். எனவே வயதானவர்கள் வெளியே செல்லும் போது வெப்ப தாக்கல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதிக உடல் வெப்பநிலை, தலைச்சுற்றல், தலைவலி, குழப்பம் மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே உங்கள் உறவினர்களை அழைக்கலாம் அல்லது அருகில் இருக்கும் மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளலாம்.
வீட்டில் சிறிது நேரம் செலவிடுங்கள்
வயதானவர்கள் எப்பொழுது பார்த்தாலும் வெளியிலயே சுற்றிக் கொண்டு திரியாமல் சிறிது நேரம் வீட்டில் ஓய்வெடுப்பது நல்லது. வீட்டில் ஏர் கண்டிஷனரில் சிறிது நேரம் இருக்கலாம். பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில் சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். நல்ல ப்ரஷ்ஷான பழங்களைக் கொண்டு பழச்சாறுகளை குடித்து வரலாம். மதிய வேளையில் வெளியே வராமல் காலை வேளையில் சூரிய ஒளியில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். இதன் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தும் கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications