Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Summer Health Tips: கோடை வெயில் வாட்டி வதைக்குதா? அப்ப இந்த ஜூஸ்களை அடிக்கடி குடிங்க...
Summer Health Tips In Tamil: கோடைக்கால வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் வெயிலின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வெயில் காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொண்டால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தைத் தவிர்க்கலாம். உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள சிறந்த வழி நீரை அதிகளவில் குடிப்பது தான். ஆனால் வெறும் நீரை மட்டும் குடிக்க அனைவருக்கும் பிடிக்காது.
இந்நிலையில் உடலை நீரேற்றத்துடனும், குளிர்ச்சியாகவும், உடலுக்கு வேண்டிய சத்துக்களையும் வழங்கும் வகையிலான ஜூஸ்களை குடிப்பது இன்னும் நல்லது. அதற்காக கடைகளில் டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் ஜூஸ்களை குடிக்கக்கூடாது. மாறாக வீட்டிலேயே ஒருசில ஜூஸ்கள் அல்லது பானங்களைத் தயாரித்துக் குடிக்க வேண்டும். இப்போது கோடைக்கால வெயிலின் தாக்கத்தைத் தணிக்க உதவும் சில ஜூஸ்களைக் காண்போம். அதில் உங்களுக்கு பிடித்ததை கோடையில் அடிக்கடி குடித்து நன்மை பெறுங்கள்.

மாதுளை ஜூஸ்
மாதுளை மிகவும் சுவையான மற்றும் ஏராளமான சத்துக்களை உள்ளடக்கிய பழம். இந்த ஒரு மாதுளையில் சுமார் 30 மிகி வைட்டமின் சி உள்ளது. இது ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய அளவில் 40% ஆகும். ஆய்வுகளில் மாதுளை உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைப்பதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தெரிய வந்துள்ளது. இப்படிப்பட்ட மாதுளையை கோடையில் தினமும் ஜூஸ் வடிவில் உட்கொண்டு வந்தால், அது கோடைக்கால வெப்பத்தை தணிப்பதோடு, தாகத்தையும் தணித்து, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
தர்பூசணி ஜூஸ்
கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் மற்றொரு நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழம் தான் தர்பூசணி. இந்த தர்பூசணி பழத்தை கோடைக்காலத்தில் அதிகம் உண்பதன் மூலம், இது கோடைக்கால வெப்பத்தைத் தணிப்பதோடு, உடலை நீரேற்றத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும். முக்கியமாக இந்த பழத்தில் உள்ள சிட்ருலின் என்னும் அமினோ அமிலம், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. எனவே கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தர்பூசணி ஜூஸை அடிக்கடி வாங்கி குடியுங்கள்.
வாழைப்பழ மில்க்ஷேக்
அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய வாழைப்பழமும், தர்பூசணியைப் போன்றே குளிர்ச்சி பண்புகளைக் கொண்டது. வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்து வந்தால், அது உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுவதோடு, நச்சுக்களை நீக்கி, குடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே கோடையில் வாழைப்பழ மில்க்ஷேக்கை முடிந்தால் அவ்வப்போது வாங்கி குடியுங்கள்.
முலாம் பழ ஜூஸ்
முலாம் பழம் நீர்ச்சத்து அதிகம் கொண்ட மற்றும் உடல் சூட்டைக் குறைக்க உதவும் அற்புதமான பழம். இந்த பழத்தைக் கொண்டு ஜூஸ் தயாரித்து கோடைக்காலத்தில் குடித்து வந்தால், உடல் குளிர்ச்சியாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். முக்கியமாக இந்த பழத்தின் ஜூஸ் அனைவரும் விரும்பி குடிக்கும் வகையில் சுவையாக இருக்கும்.
வெள்ளரிக்காய் எலுமிச்சை பானம்
கோடைக்கால வெயிலை தணிக்க உதவும் ஒரு அற்புதமான பானம் தான் வெள்ளரிக்காய் புதினா பானம். இந்த பானம் உடல் சூட்டை தணிப்பதோடு, ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது. வெள்ளரிக்காய் மற்றும் புதினா ஆகிய இரண்டிலும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருப்பதால், அது கோடைக்காலத்தில் ஏற்படும் வயிற்று உப்புச பிரச்சனைக் குறைக்கும்.
அத்துடன் எலுமிச்சையை சேர்க்கும் போது, அதில் உள்ள வைட்டமின் சி இன்னும் உடலில் பல அற்புதங்களை உண்டாக்கும். ஏற்கனவே உங்களுக்கு சரும பிரச்சனைகள் இருந்தால், இந்த வெள்ளரிக்காய் புதினா பானத்தை குடிப்பது நல்லது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பானங்கள் அனைத்தும் கோடையில் உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன. எனவே உங்களுக்கு பிடித்ததைத் தேர்ந்தெடுத்து குடியுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

