Latest Updates
-
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (19 July 2026-25 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..!
வெயில் காலத்தில் அதிகமாக வியர்த்து உடலில் துர்நாற்றம் வருகிறதா? இத பண்ணுங்க எல்லாம் சரியாகிரும்...!
கோடைகாலத்தில் அனைவரும் சந்திக்கும் மோசமான விஷயங்களில் ஒன்று அதிகப்படியான வியர்வை. வியர்வையில் நனைந்த சட்டையுடன் இருப்பது விரும்பத்தகாத மற்றும் துர்நாற்றம் வீசும் அனுபவத்தை ஏற்படுத்தும். எனவே கோடையில் உங்கள் ஆடைகளில் பெரிய வியர்வை நாற்றம் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
அதிகப்படியான வியர்வையைக் கட்டுப்படுத்த, கோடைகாலத்தில் தினமும் குறைந்தது இரண்டு முறை குளிக்க வேண்டும் மற்றும் தொடர்ந்து ஆண்டிபெர்ஸ்பிரண்ட் பயன்படுத்த வேண்டும். உங்கள் உணவு உட்கொள்ளல் கூட உங்கள் வியர்வையின் அளவை பாதிக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்றாகும். நிபுணர்களின் கூற்றுப்படி, கோடையில் நாம் அனைவரும் அனுபவிக்கும் அதிகப்படியான வியர்வையை தவிர்க்க சில எளிய தந்திரங்களை பின்பற்றலாம்.

கோடைக்கால பானங்கள்
பொதுவாக வியர்வையால் ஏற்படும் முக்கிய பிரச்சினை நீரிழப்பாகும். உங்கள் உடல் இழக்கும் நீரை சமன் செய்ய அதற்கு இணையாக கோடையில் அதிக தண்ணீர் குடிப்பது நல்லது. சிறந்த கோடைகால பானங்களான மோர் மற்றும் ஜல்ஜீரா போன்றவற்றை தண்ணீருக்கு பதிலாகக் குடிக்கலாம். உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, அவ்வாறு செய்வதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் நீரிழப்பைத் தடுக்கலாம்.
காஃபினைத் தவிர்க்க வேண்டும்
சில நேரங்களில் புத்துணர்ச்சியாக உணர்வதற்கும், தூக்கத்தைத் தவிர்ப்பதற்கும் காபி அவசியம் என்பதை நாம் அறிவோம். ஆனால் அதை குறைவான அளவு குடிக்க வேண்டியது அவசியம். அட்ரீனல் சுரப்பிகளைத் தூண்டுவதன் மூலம் காஃபின் நம் உள்ளங்கைகள், பாதங்கள் மற்றும் அக்குள்களில் அதிக வியர்வையை உண்டாக்குகிறது என்று உணவியல் நிபுணர் பரிந்துரைக்கிறார்கள்.
காரமான உணவைத் தவிர்க்க வேண்டும்
உங்கள்உணவுகளை காரமானதாக மாற்ற, அதிகளவு பச்சை மிளகாயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். காரமான உணவுகளை சாப்பிட்ட பிறகு உங்களுக்கு அதிகமாக வியர்க்கும், ஏனென்றால் உங்கள் உடல் மற்ற வகையான வெப்பத்திற்கு எதிர்வினையாற்றுவதைப் போலவே வெப்பத்திற்கு பதிலளிக்கிறது. எனவே கார உணவுகளை குறைவாக சாப்பிடவும்.
ஆன்டிபெர்ஸ்பிரண்ட்ஸ் ஸ்ப்ரேயை
ஆன்டிபெர்ஸ்பிரண்ட்கள் ஸ்பிரேக்கள் வியர்வையைக் குறைப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன, எனவே அவை மோசமான வியர்வைக் கறைகள் மூலம் ஏற்படும் அசௌகரியங்களை தடுக்க சிறந்த தேர்வாக இருக்கும்.
அமைதியாக இருக்க வேண்டும்
நீங்கள் பயப்படும்போது அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது உங்கள் உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் செயல்படுகின்றன, இது உங்கள் உடலை அதிகமாக வியர்க்கச் செய்கிறது. அதிகப்படியான வியர்வையைத் தவிர்க்க, அமைதியான மன ஆரோக்கியத்தைப் பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

