Latest Updates
-
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும்
Summer Care Tips: கோடைகாலத்தில் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க... இல்லனா பிரச்சினைதான்...!
நம் உடல் எப்படி செயல்படுகிறது என்பதில் வானிலை முக்கியப்பங்கு வகிக்கிறது. அதுமட்டுமன்றி அந்தந்த பருவக்காலத்திற்கு ஏற்ப நாம் சாப்பிடும் உணவுகளும் நம் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதில் முக்கியமானதாக இருக்கிறது. எந்த பருவ காலமாக இருந்தாலும் நீரேற்றமாக இருக்க வேண்டியது ஒரு அடிப்படை ஆரோக்கிய விதி.
ஒவ்வொரு பருவக்காலத்திற்கும் சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் இருப்பது போல சாப்பிடக்கூடாத உணவுகளின் பட்டியலும் உள்ளது. குறிப்பாக சுட்டெரிக்கும் கோடைகாலத்தில் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இந்த பதிவில் கோடைகாலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
அதிகளவு உப்பு
உப்பு சோடியம் குளோரைடு என்றும் குறிப்பிடப்படுகிறது, மேலும் இது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. உணவில் அதிக அளவு உப்பு இருப்பதால், வீக்கம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, அதிகப்படியான சோடியம் உடலுக்குள் நுழையும் போது, அது சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்து, நீரிழப்பு ஏற்படுகிறது. அதாவது உடல் செல்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றும். எனவே, உங்கள் உணவில் உப்பு உட்கொள்ளலைக் குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
காபி
வெயில் காலத்தில் நீரேற்றமாக இருக்க விரும்பினால், காபி உட்கொள்வதைத் தவிர்க்கவும் அல்லது குறைக்கவும். கோடை காலத்தில் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். காபி உடலை நீரிழப்புக்கு ஆளாக்கும். காபி உடலின் பொதுவான வெப்பநிலையை அதிகரிக்கவும் செய்யும். இது செரிமான அமைப்பை மேலும் எதிர்மறையாக பாதிக்கும்.
ஊறுகாய்
ஊறுகாயில் சோடியம் அதிகமாக உள்ளது, இது உடலில் நீரிழப்புக்கு முக்கிய காரணாமாக இருக்கும். இது தவிர கோடையில் ஊறுகாயை அதிகமாக சாப்பிடுவது அஜீரணத்தையும் ஏற்படுத்தும்.
சோடா
கோடைகாலத்தில் கூல்ட்ரிங்க்ஸ் குடிப்பது பெரும்பாலானவர்களின் பழக்கமாக இருக்கிறது. அவை உங்களுக்கு புத்துணர்ச்சியை அளித்தாலும், அவை மிகவும் ஆரோக்கியமற்றவை மற்றும் உடலில் உடனடியாக நீரிழப்பை ஏற்படுத்தும். சோடாவில் சர்க்கரை மற்றும் பிற ஆரோக்கியமற்ற பொருட்கள் அதிகமாக இருப்பதோடு, உங்கள் உடலை விரைவாக நீரழிவை ஏற்படுத்தும். இதிலுள்ள அதிக சர்க்கரை நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
ஆல்கஹால்
ஆல்கஹால் பல எதிர்மறை விளைவுகளைக் கொண்டுள்ளது. கோடையில் மது அருந்துவது தலைவலி, வாய் வறட்சி போன்ற பல்வேறு நீரிழப்பு அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். கூடுதலாக, ஆல்கஹால் உட்கொள்வது உடலை வெப்பமாக்குகிறது மற்றும் உடலில் வியர்வையை அதிகரிக்கும். வியர்வை நீரிழப்பு செயல்முறையை மேலும் துரிதப்படுத்துகிறது.
மில்க் ஷேக்
இனிப்பான மில்க் ஷேக்குகள் யாருக்குத்தான் பிடிக்காது. இருப்பினும், மில்க் ஷேக்கில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் நீரிழப்பு ஏற்படுகிறது. இது தவிர, அவை ஆரோக்கியமற்ற கலோரிகளால் நிரம்பியுள்ளன மற்றும் நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான நீண்டகால பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அதிக புரோட்டின் உள்ள உணவுகள்
அதிக புரத உணவும் உங்களுக்கு நீரிழப்பு உணர்வை ஏற்படுத்தும். புரதத்தில் இயற்கையாக நிகழும் நைட்ரஜனை வளர்சிதைமாற்றம் செய்வதற்காக உடல் அதிக தண்ணீரைப் பயன்படுத்துகிறது, இதன் காரணமாக செல்கள் கணிசமாக நீரின் உள்ளடக்கத்தை இழக்க நேரிடும், இதனால் நீங்கள் நீரிழப்பு உணரலாம்.
டார்க் சாக்லேட்
மற்ற சாக்லேட்டுகளை விட டார்க் சாக்லேட்டில் அதிக காஃபின் உள்ளது. அதிக அளவு டார்க் சாக்லேட்டை உட்கொள்வது இதயத் துடிப்பு, வயிற்றுப்போக்கு, பதட்டம், எரிச்சல், பதட்டம் மற்றும் நீரிழப்பு போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



