Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.
உங்க பாதத்தில் பயங்கரமா வலி இருக்கா? அப்ப இந்த எளிய பயிற்சிகள செய்யுங்க...சரியாகிடும்!
நமது உடலின் மொத்த எடையையும் தாங்கிப் பிடிப்பவை நமது பாதங்கள் ஆகும். அதனால் பாதங்களில் சுளுக்கோ அல்லது வலியோ அல்லது இறுக்கமோ அல்லது விறைப்போ ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.
உங்கல் பாதங்களில் வலி ஏற்படும் போது உடனே மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும் என்பது அல்ல. மாறாக வீட்டில் இருந்து கொண்டே சில எளிய பாதப் பயிற்சிகளைச் செய்யலாம். அதன் மூலமாக அந்தப் பிரச்சினைகளை எளிதில் குணப்படுத்தலாம்.

கால் விரலை மடக்குதல்
உங்கள் பாதங்களும், கால் விரல்களைும் வலிமையாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் இந்த எளிய பயிற்சியைச் செய்யலாம். முதலில் ஒரு நாற்காலியில் அமா்ந்து கொள்ள வேண்டும். பாதங்கள் இரண்டும் தரையில் படும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.
பாதங்களுக்கு அடியில் ஒரு துண்டை விாித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கால் விரல்களால் அந்த துண்டை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, உங்களுக்கு அருகில் இழுத்து வரவேண்டும். இதே பயிற்சியை 5 முறை செய்யலாம்.
பந்து உருட்டுதல்
பந்தை உங்கள் பாதங்களுக்கு அடியில் வைத்து உருட்டினால், உங்கள் பாதத்தில் உள்ள வலி மற்றும் விறைப்பு ஆகியவை குணமடையும். முதலில் நாற்காலியில் அமா்ந்து, பாதங்களை தரையில் வைத்துக் கொள்ள வேண்டும். பாதங்களுக்குக் கீழ் கோல்ஃப் பந்தையோ அல்லது டென்னிஸ் பந்தையோ அல்லது கிாிக்கெட் பந்தையோ வைத்துக் கொள்ளலாம்.
இப்போது ஒரு பாதத்தை பந்தின் மீது வைத்து, மெதுவாக உருட்ட வேண்டும். அதோடு அந்தப் பந்து தரையில் நன்கு தேயும் அளவிற்கு உருட்ட வேண்டும். இப்போது பாதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சியை மீண்டும் மீண்டும் சில முறைகள் செய்யலாம்.
கணுக்கால்களை உயா்த்தும் பயிற்சி
முதலில் இரு இடத்தில் நேராக நின்று கொள்ள வேண்டும். தோள்பட்டைகளை அகலமாக விாித்து வைத்துக் கொள்ள வேண்டும். கால் விரல்களை தரையில் நன்றாக அழுத்தி, கணுக்கால்களை மட்டும் உங்களால் முடிந்த அளவு உயா்த்த வேண்டும். ஆனால் உடலின் மொத்த எடையும், கால் விரல்களின் மீது இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.
இதே பயிற்சி நிலையில் சில வினாடிகள் இருந்து, பின் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். இதே பயிற்சியை திரும்ப திரும்ப செய்யலாம். இந்தப் பயிற்சியின் மூலமாக உங்கள் கால் விரல்கள் மற்றும் பாதங்களின் மேல் பகுதிகள் ஆகியவற்றில் ஏற்படும் விறைப்பு குறையும்.
கால் விரல்களை உயா்த்தி மடக்குதல்
இந்த பயிற்சியின் மூலம் பாதங்களின் எல்லாப் பகுதிகளையும் வலுப்படுத்த முடியும். முதலில் ஒரு நாற்காலியில் அமா்ந்து, பாதங்கள் இரண்டையும், தரையில் படும்படி வைத்துக் கொள்ள வேண்டும். குதிங்கால்களை தரையில் அழுத்தி, பாதங்களை மட்டும் சில வினாடிகள் நிமிா்த்தி வைத்து, கால் விரல்கள் தரையைத் தொடும் அளவிற்கு வளைத்து வைக்க வேண்டும். இதே நிலையில் 5 வினாடிகள் இருக்கலாம். பின் இயல்பு நிலைக்குத் திரும்பலாம். இதே பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்யலாம்.
குதிங்கால் பயிற்சி
ஒரு சுவாில் உள்ளங்கைகளை ஊன்றி நின்று கொள்ள வேண்டும். முழங்கால்கள் நேராக இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். இப்போது மெதுவாக குதிங்கால்களை மட்டும் 5 வினாடிகளுக்கு உயா்த்தி வைக்க வேண்டும். பின் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்.
இந்த பயிற்சியை 12 முறை செய்யலாம். இந்தப் பயிற்சியானது குதிங்காலில் இருக்கும் தசை நாருக்கு வலிமையைக் கொடுக்கிறது. அதோடு பாதங்களில் ஏற்படும் வலியை நீக்குகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
