Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
ஆபிஸில் ரொம்ப நேரம் ஏசியில் இருப்பவரா நீங்க? அப்ப இந்த விஷயத்தை முதலில் தெரிஞ்சிக்கோங்க...!
வெப்பமான சூழ்நிலையில் அனைவரும் ஏசியின் கீழ் இருக்க விரும்புகிறார்கள். ஒவ்வொரு வருட கோடைகாலத்திலும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இப்போது ஏசி ஆடம்பர பொருள் என்பதை விட அவசியமான பொருளாக மாறிவருகிறது.
ஆனால், நீண்ட நேரம் ஏசியில் இருப்பது உங்களுக்குத் தெரியாத சில தீவிரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வெப்பமான காலநிலையில் நமக்கு குளிர்ச்சியையும், ரிலாக்ஸையும் கொடுக்கும் ஏசி, நம் உடலில் சில அறியாத பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் அதிக நேரம் ஏசியில் இருந்தால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வறண்ட சருமம் அல்லது தோல் அரிப்பு
ஏசியின் கீழ் உட்காருவதும் சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பதும் உங்கள் சருமத்தை மிகவும் வறண்டுப் போகச்செய்யும் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். நீண்ட நேரம் ஏசியில் இருந்த பின் வெளியில் சென்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு உங்கள் சருமம் இயல்பு நிலைக்குத் திரும்பக்கூடும், ஆனால் வறண்ட சருமம் வழக்கத்தை விட நீண்ட காலம் இருக்கக்கூடும்.
நீரிழப்பு
மற்ற அறைகளை விட ஏர் கண்டிஷனர்கள் உள்ள அறைகளில் நீரிழப்பு அதிகமாக இருக்கும். ஏசி அறையில் இருந்து அதிக ஈரப்பதத்தை உறிஞ்சுவதால், நீங்கள் நீரிழப்புடன் இருப்பீர்கள்.
சுவாச பிரச்சனைகள்
அதிக நேரம் ஏசியில் இருப்பது சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் வறண்ட தொண்டை, நாசி அடைப்பு மற்றும் கண்களில் வறட்சியை அனுபவிக்கலாம். இது சுவாச தடை மற்றும் சளி சவ்வில் வீக்கம் ஏற்படலாம். நீண்ட காலம் ஏசியில் இருப்பது நுரையீரல் பாதிப்பையும் பாதிக்கலாம்.
ஆஸ்துமா மற்றும் அலர்ஜிகள்
ஏசிதொடர்ந்து உபயோகித்தால் இருந்தால் அதில் விரைவில் தூசிகள் படிந்துவிடும். ஏசிகள் சரியாக சுத்தப்படுத்தப்படாவிட்டால் ஆஸ்துமா தாக்குதலைத் தூண்டும். மாசுகளை சரியான நேரத்தில் அகற்றுவது ஒவ்வாமையைத் தடுக்க உதவும்.
சோம்பல்
நீண்ட நேரம் ஏசியில் இருப்பவர்கள் மந்தமாகவும், சோம்பலாகவும் இருப்பார்கள். பணியிடத்தில், ஏசியை விட இயற்கையான காற்றோட்டம் இருக்கும் போது வேலை சுறுசுறுப்பாக நடக்கும்.
தலைவலி
ஏசி அறைகளுக்குள் நுழைந்து வெளியே வரும்போது அல்லது அதிக நேரம் ஏசியில் இருந்த பிறகு திடீரென வெப்பத்தில் வெளியில் செல்லும்போது தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், ஏசி அறைகள் சரியாக பராமரிக்கப்படாத சந்தர்ப்பங்களில், தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
தூக்கத்தின் தரம் குறையும்
நீங்கள் இரவில் ஏசியை ஆன் செய்து தூங்க விரும்பினாலும், அது தூக்க முறைகளை சீர்குலைக்கும். எனவே, இரவில் நீங்கள் அமைக்கும் வெப்பநிலை சற்று குளிர்ச்சியாகவும், அதிக குளிராகவும் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












