Latest Updates
-
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
எச்சரிக்கை! ஆரஞ்சு ஜூஸ் குடிக்க பிடிக்குமா? அப்ப உங்களுக்கு 'இந்த' 5 பெரிய ஆபத்துக்கள் காத்திருக்கிறதாம்!
Side Effects Of Orange Juice In Tamil: ஜூஸ் கடைக்கு சென்றதும் பெரும்பலான மக்கள் முதலில் ஆடர் செய்யும் ஒரு பானமாக ஆரஞ்சு ஜூஸ் இருக்கும். காலை, மதியம் மற்றும் மாலை என எந்த வேளையிலும் நீங்கள் ஆரஞ்சு ஜூஸை அருந்தலாம். இருப்பினும், ஒரு சிறந்த காலை உணவுடன் ஆரஞ்சு ஜூஸ் அருந்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது எனக்கூறபடுகிறது.
துடிப்பான ஆற்றல் பானமாக இருக்கும் ஆரஞ்சு ஜூஸ், நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்க உதவும். ஆரஞ்சு ஜூஸில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. ஆனால், மற்ற உணவைப் போலவே, இதை அதிகளவில் அருந்துவது, சில கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

ஆம், 'அளவுக்கு மீறினால் அமிதமும் நஞ்சு' என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதிகமாக ஆரஞ்சு சாறு உட்கொள்வதால் அதிகம் அறியப்படாத பக்கவிளைவுகள் ஏற்படலாம். அதைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆரஞ்சு சாற்றின் நன்மைகள்
சரியான விகிதத்தில் அருந்தும்போது, ஆரஞ்சு சாற்றில் உள்ள மெக்னீசியம் உள்ளடக்கம் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது. இது பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் தோல், நுரையீரல் மற்றும் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது .
மேலும் இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. ஆய்வு அறிக்கைகளின்படி, தினமும் 240 மில்லி ஆரஞ்சு சாறு அருந்துவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. இருப்பினும், ஆரஞ்சு பழச்சாற்றை அதிகமாக உட்கொள்வதால் பக்கவிளைவுகளும் ஏற்படலாம்.
எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்
ஆரஞ்சு சாறு ஆரோக்கியமானது. இதில் கலோரிகள், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதம் ஆகியவை இதில் நிறைந்துள்ளது. இது இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்க வழிவகுக்கும் மற்றும் செயலிழப்பை ஏற்படுத்தும். அத்துடன் கலோரிகள் அதிகமாக இருப்பதால், உங்கள் உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும்.
வகை 2 நீரிழிவு நோய் ஆபத்து
பொதுவாக பழச்சாறுகள் நிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஆதலால், நீரிழிவு நோயாளிகள் அதிக சர்க்கரை நிறைந்த பழங்களை தவிர்க்க வேண்டும். ஆய்வுகளின்படி, ஆரஞ்சு சாறு அதிகமாக உட்கொள்வது வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
தனிப்பட்ட உணவுகளின் இரத்த சர்க்கரை அளவுகளில் தாக்கத்தை பிரதிபலிக்கும் கிளைசெமிக் குறியீடு, ஆரஞ்சு சாற்றை 100 அளவில் இருந்து 66 முதல் 76 வரை வைக்கிறது. இது பழச்சாற்றை அதிக ஜிஐ பானமாக மாற்றுகிறது. அதிக ஜிஐ உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர்ப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்
நிபுணர்களின் கூற்றுப்படி, ஆரஞ்சு சாற்றை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்க வழிவகுக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அதிக எடை கொண்டவர்கள் இந்த பக்க விளைவுகளுக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் உங்கள் இரத்த அழுத்தம் குறைவதும் ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தோல் ஒவ்வாமை
ஆரஞ்சு உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அவற்றை அதிகமாக உட்கொள்வது நல்லதல்ல. ஆய்வு அறிக்கைகளின்படி, சில சந்தர்ப்பங்களில், ஆரஞ்சு சாறு அதிகமாக உட்கொள்வது தோல் ஒவ்வாமைக்கு வழிவகுக்கும்.
தூக்கமின்மையை ஏற்படுத்தலாம்
சில சமயங்களில், ஆரஞ்சு பழச்சாறு அதிகமாக உட்கொள்வது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். இது சர்க்கரை அளவுகளில் ஏற்றத்தை ஏற்படலாம் மற்றும் அமைதியின்மையையும் ஏற்படுத்தும். ஆதலால், ஆரோக்கியமான பானமாக இருந்தாலும், அளவாக அல்லது மிதமாக அருந்த அறிவுறுத்தப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
