Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
மூக்கு நோண்டுறவங்களுக்கு அல்சைமர், டிமென்ஷியா நோய் சீக்கிரம் வருமாம் - புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
மூக்கு நோண்டுவது ஒரு சாதாரணமான மூக்கை சுத்தம் செய்ய மேற்கொள்ளும் ஒரு பழக்கமாக இருக்கலாம். ஆனால் அந்த பழக்கத்தை பொது இடங்களில் செய்யும் போது அது மற்றவர்களின் முகத்தை சுளிக்க வைக்கும். இது தவிர மூக்கை நோண்டுவது ஒருவருக்கு கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்பது தெரியுமா?
புதிய ஆய்வின் படி, மூக்கை நோண்டும் பழக்கம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பில்லாத பழக்கமாக காணப்பட்டாலும், இது அல்சைமர், டிமென்ஷியா போன்ற மூளை நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

டிமென்ஷியா என்பது ஒருவரது அறிவாற்றலைக் குறைக்கும் நோயாகும். இந்நோய் ஒருவரது தினசரி செயல்பாடுகளை செய்ய முடியாமல் கடினமாக்கும். அதோடு இது ஒருவரது நினைவாற்றல், சிந்தனை, நடத்தை போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். சரி, இந்த டிமென்ஷியா மூக்கை நோண்டுவதால் எப்படி ஏற்படும் என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம். அது எப்படி என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மூக்கை நோண்டுவது எப்படி டிமென்ஷியாவை ஏற்படுத்துகிறது?
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் தி மெடிக்கல் சயின்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, விரல்களால் மூக்கை நோண்டும் போது, மூளையும், மூக்கும் அருகில் இருப்பதால் விரல்களில் உள்ள பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகள் போன்றவை மூளைக்குள் எளிதில் நுழைய வாய்ப்புள்ளது. இப்படி நுழைந்தால், அது வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த வீக்கம் வயதாகும் போது மூளை செல்களை சேதப்படுத்தி நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுப்பதோடு, ஒரு கட்டத்தில் டிமென்ஷியாவின் அறிகுறிகளை வெளிக்காட்டத் தொடங்கும்.
மேலும் ஆய்வாளர்கள் குறைந்தது 10 ஆய்வுகளை சுட்டிக்காட்டி இந்த பழக்கத்தையும், அதன் தேவையற்ற விளைவுகளையும் இணைத்துள்ளனர். அதில் நாசல் எபித்தீலியம் வழியாக மூளையை சேதப்படுத்தும் பல்வேறு கிருமிகள் அல்சைமர் நோயுடன் இணைக்கப்பட்டுள்ளன. முடிவில், மூக்கை நோண்டுவது அல்சைமர் மற்றும் டிமென்ஷியாவின் ஆபத்துக் காரணிகளுள் ஒன்று என்பது தெரிய வந்துள்ளது.
அல்சைமர், டிமென்ஷியா ஒருவருக்கு எதனால் ஏற்படுகிறது?
மனித மூளையில் சுமார் 100 பில்லியனுக்கும் அதிகமான நரம்பு செல்கள் மற்றும் பிற செல்கள் உள்ளன. அவை சிந்தனை, கற்றல், நினைவில் வைப்பது மற்றும் திட்டமிடல் போன்ற செயல்பாடுகளைச் செய்யத் தேவையான அனைத்து தகவல்தொடர்புகளையும் நிறைவேற்ற ஒன்றாக வேலை செய்கின்றன. இந்த மூளை செல்களில் அமிலாய்டு புரோட்டீன் உருவாகும் போது, அது அப்படியே படிந்து ப்ளேக்குகளை உருவாக்கி, நரம்பு செல்களுக்கு இடையேயான தொடர்பை தடுக்கிறது. பின் ஒருகட்டத்தில் மூளை செல்கள் இறக்கத் தொடங்கி அல்சைமர் மற்றும் டிமென்ஷியா ஆகியவை ஏற்பட வழிவகுக்கிறது.
அல்சைமர், டிமென்ஷியாவைத் தடுப்பது எப்படி?
மூக்கை நோண்டுவதால் அல்சைமர், டிமென்ஷியா வர முக்கிய காரணம், அசுத்தமான கைகள். சுத்தமில்லாத கைகளால் மூக்கை நோண்டினால் தான், கைகளில் உள்ள கிருமிகள் மூக்கின் வழியாக மூளையை நோக்கி பயணிக்கின்றன. இதைத் தடுக்க, கைகளை அவ்வப்போது சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும்.
இப்படி கை சுகாதாரத்தைப் பின்பற்றுவதன் மூலம், அல்சைமர், டிமென்ஷியாவின் அபாயத்தைத் தடுக்கலாம். சோப்பு கொண்டு கைகளைக் கழுவ முடியாத சூழ்நிலைகளில், சிறு பாட்டில் சானிடைசரை வாங்கி வைத்து, பயன்படுத்லாம். இதன் மூலம் அல்சைமர், டிமென்ஷியா மட்டுமின்றி, வேறு பல நோய்த்தொற்றுக்களின் அபாயத்தையும் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
