Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
நீங்க பாதுகாப்பா செக்ஸ் வச்சிகிட்டாலும்..இந்த வழிகள் மூலம் உங்களுக்கு பாலியல் தொற்றுநோய்கள் வருமாம்!
மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று என்பது மிகவும் பொதுவான பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய் ஆகும். 2018 ஆம் ஆண்டில் சுமார் 43 மில்லியன் மக்கள் மனித பாப்பிலோமா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
செக்ஸ் எல்லாருக்கும் இன்பம் மற்றும் திருப்தியைக் கொடுக்கும் ஒரு விஷயம். அதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை. ஆனால், அதை நீங்கள் பாதுகாப்பாகவும் சரியாகவும் செய்யும்போது, மட்டுமே உங்களுக்கு இன்பம் கிடைக்கும்.
அதற்கு மாறாக நடக்கும்போது, அது உங்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். ஆம், இளைஞர்கள் முதல் நடுத்தர வயதுடையவர்கள் வரை பெரும்பலான மக்கள் பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவதாக பல புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு இல்லாமல் உடலுறவு கொள்ளுவதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்பபடுக்கிறது. இதை தவிர இன்னும் சில காரணிகளாலும் உங்களுக்கு பாலியல் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆதலால், பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய்களை பரவவிடாமல் தடுக்க நாம் தவிர்க்க வேண்டிய பல்வேறு விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். இருப்பினும், சில தொற்றுநோய்கள் கண்டறியப்படாமல் பரவலாம்.
உங்களுக்கு பாலியல் தொற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

முத்தம்
தம்பதிகளுக்குள் இருக்கும் நெருக்கத்தை அன்பை வெளிப்படுத்த அவர்கள் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கிறார்கள். ஆனால், உங்கள் வாயைச் சுற்றி புண் இருந்தாலோ அல்லது உங்கள் பாலியல் துணையின் வாயை சுற்றி புண் இருந்தாலோ, நீங்கள் வாய்வழியாக முத்தம் கொடுக்க வேண்டாம். பொதுவாக ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் வகை 1 (HSV-1) என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் திறந்த புண், வாய்வழி ஹெர்பெஸ் உள்ள ஒருவருடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. வாயில் புண் இருக்கும் போது, வாய்வழி உடலுறவு கொள்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது யோனி பகுதியில் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ்-1 வைரஸை ஏற்படுத்தலாம்.

பல் துலக்குதல் மற்றும் ரேசர்களைப் பகிர்தல்
பாலியல் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் பல் துலக்குதல் ப்ரஷ் மற்றும் ரேசர் கருவிகளை ஒன்றாக பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஏனெனில், சருமத்தில் காயத்தை ஏற்படுத்தும் சாதனங்களைப் பகிர்வதுகொள்வது இரத்தத்தில் ஆபத்தான தொற்று நோய்கள் பரவுவதற்கு வழிவகுக்கும். இதில் ஹெபடைடிஸ் பி, சி மற்றும் எச்ஐவி ஆகியவை அடங்கும். மேலும், மற்றவர்களுக்கு பயன்படுத்திய ஊசியை ஒருபோதும் நீங்கள் பயன்படுத்தக்கூடாது. உங்களுக்கு வரும் ஆபத்தைக் குறைக்க மற்றொரு நபரின் ரேசர் மற்றும் பல் துலக்குதல் ப்ரஷ் போன்ற சாதனங்களை பயன்படுத்தக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். பாதிக்கப்பட்ட உணவு அல்லது பானத்தின் மூலம் ஹெபடைடிஸ் ஏ பரவலாம். மேலும், இது குத உடலுறவின் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது.

மருக்கள் மற்றும் புண்
பிறப்புறுப்பில் மருக்கள் உள்ள நபர் மனித பாப்பிலோமா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த நபர்களுடன் உடல் தொடர்பு கொள்ளும்போது, உங்களுக்கும் அந்த தொற்று பரப்பலாம். இதனால், உங்கள் பிறப்புறுப்பிலும் மருக்கள் ஏற்படலாம். பொதுவாக பிறப்புறுப்பில் பருக்கள் போன்ற புண் இருக்கும் நபருடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலம் சிபிலிஸ் நோய்த்தொற்று பரவலாம். இது ஆரம்பநிலை அறிகுறியாகும். ஆதலால், புண் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒருவரைத் தொடுவதையோ அல்லது அவர்களுடன் உடலுறவு கொள்வதையோ நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று
மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று என்பது மிகவும் பொதுவான பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய் ஆகும். 2018 ஆம் ஆண்டில் சுமார் 43 மில்லியன் மக்கள் மனித பாப்பிலோமா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட மக்களில் பலர் பதின்ம வயதின் பிற்பகுதியிலும் 20 களின் முற்பகுதியிலும் இருந்தனர். மனித பாப்பிலோமா வைரஸ் தொற்று பல்வேறு வகைகளை கொண்டுள்ளன. சில வகைகள் பிறப்புறுப்பு மருக்கள் மற்றும் புற்றுநோய்கள் உட்பட உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

இறுதிக்குறிப்பு
பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய் மற்றும் ஆபத்தான தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நபருடன் உங்கள் தோலின் மேற்பரப்பை வெட்டக்கூடிய சீர்ப்படுத்தும் கருவிகளைப் பகிர்வது இரத்தத்தில் நோய்கள் பரவுவதற்கு வழிவகுக்கும். பயன்படுத்தப்பட்ட துண்டுகள், துவைக்கும் துணிகள், ரேசர்கள், உள்ளாடைகள் அல்லது நீச்சலுடைகளை மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கவோ அல்லது பரிமாறிக்கொள்ளவோ கூடாது. ஏனெனில் இவை பிறப்புறுப்பு மனித பாப்பிலோமா வைரஸ் தொற்றை உங்களுக்கு ஏற்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications